தலைவாழையிலையில்... இத்தனை நாளா "இது" தெரியாம போச்சே.. ஆமா, வாழைக்கு ஏன் "வாழை" என பெயர் வந்துச்சு?
சென்னை: வாழை மரம் என்றே நாம் சொல்லக்கூடாது.. அது தவறு.. ஒரு மரம் என்றால், கிளை, கடின தண்டுகள் இருக்கும்.. அந்தவகையில், இந்த வாழை என்பது மரம் கிடையாது. அது ஒரு தாவரம்.. உலகிலேயே பெரிய தாவரம் என்றே சொல்ல வேண்டும். அதுசரி, வாழைக்கு ஏன் "வாழை" என்று பெயர் வந்தது தெரியுமா?
வாழையிலையில், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்பு சத்துக்கள் உள்ளன.. இவைகள் கண்களை பாதுகாத்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..

வைட்டமின் ஏ.சி, மற்றும் கே விட்டமின்கள் குடற்புண்களை ஆற்றும்.. ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும்.. சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கும்.. இத்தனையும் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்துள்ளன.
பச்சையம்: நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி, இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. இதெல்லாம் சேர்ந்துதான் நமக்கும் ஆயுளை கூட்டுகிறது.
வாழையிலையில் சாப்பிட்டால், வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள் மற்றும் செரிமான செல்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு பேருதவி புரிகின்றன.. வாழை இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால், உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் இதனால், தடுக்கப்படுகின்றன... வாழையில் தண்டு முதல், இலை, பழம், பூ, என எல்லாமே பயன்தரக்கூடியது.
சருமத்தொந்தரவு: வாழையிலை சாற்றை வடிகட்டி, ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, அது ஐஸ்கட்டியாகும்வரை விட்டுவிட வேண்டும்.. பிறகு, அந்த ஐஸ் கட்டிகளை கொண்டு, சருமத்தில் தேய்த்து வந்தால், சருமம் மென்மையடையும்.. வேர்க்குரு உட்பட எந்தவித தொந்தரவும் முகத்துக்கு வராது. சீக்கிரமாக ஏற்படும் முதிர்ந்த தோற்றத்தை தடுக்கிறது.
அலட்டாயின்: வாழையிலையில் அழகை கூட்டும் அலட்டாயின் என்ற சத்து உள்ளது.. அதனால், அரைத்த வாழையிலை ஜூஸுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து சருமத்தில் பூசி வந்தால் சரும பொலிவு அதிகரிக்கும்.. காரணம், வாழை இலையின் சாறில் இருக்கும் உட்பொருட்கள் சூரியக் கதிர்வீச்சிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகிற சரும பிரச்சனைகளை தீர்க்க பெரிதும் உதவுகிறது.
உலக வாழை உற்பத்தியில் இந்தியா 24% பங்களிக்கிறதாம்.. பழங்களிலும் வாழையே முதன்மையாக பயிரிடப்பட்டது.. இந்த வாழை மரம் மக்கியே போனாலும்கூட, சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கக்கூடியது.
பெயர் ஏன் வந்தது?: ஆனால், வாழைக்கு ஏன் வாழை என்று பெயர் வந்தது தெரியுமா? சில குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துவிடும்.. இப்போதுதான், குறைபிரசவத்தில் குழந்தைகள் பிறந்தால், குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து உயிர் பிழைக்க வைக்கிறார்கள்..
ஆனால், அன்று மருத்துவமும், விஞ்ஞானமும், தொழில்நுட்பங்களும் இல்லாத காலத்தில், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை, வாழையிலையில் வைத்து பாதுகாப்பார்களாம்... ஒரு வாழையில் பிறந்த சிசுவை வைத்து, இன்னொரு வாழையிலையை மேற்புறமாக போர்த்தி வைத்தால் குழந்தை பிழைத்துவிடும்.. இப்படித்தான் பல சிசுக்களை இந்த வாழை வாழ வைத்துள்ளது. அதனால்தான், புதுமண தம்பதிகளை வாழ்த்தும்போதுகூட, வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்பார்கள்.. வாழை நம் அனைவரையும் வாழ வைக்கக்கூடியது












Click it and Unblock the Notifications