Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்னியில் கல்லை கரைக்கும் பிரியாணி இலை.. ஆரோக்கியம் தழைக்க பிரிஞ்சி இலை டீ போதுமே.. ஹெல்த் டிரிங்க்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரியாணி இலைகள் வெறும் வாசனைக்காகவே பலரும் பயன்படுதுகிறார்கள்.. ஆனால், பாம்புக்கடி முதல் சிறுநீரகத்தில் கற்களை கரைத்து வெளியேறுவதுவரை, எண்ணற்ற பலன்களை இந்த இலைகள் நமக்கு தருகின்றன.. அதை சுருக்கமாக இங்கே காணலாம்.

தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை, பிரிஞ்சி இலை போன்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த இலைகள், முழுக்க முழுக்க மருத்துவ குணம் கொண்டவை. துத்தநாகம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கும், பிரியாணி இலைகள் வெறும் வாசத்துக்கானவை மட்டுமல்ல, வாழ்நாளை அதிகரிக்க செய்பவை. எப்படி தெரியுமா?

bay leaves biriniji ilai kidney stones

பிரிஞ்சி இலைகளின் முதன்மையான பணி, செரிமானத்தை தூண்டுவதாகும்.. அதனால்தான் அசைவ உணவுகளில் பிரிஞ்சி இலைகளை கட்டாயம் சேர்க்கிறார்கள்.. இதனால் ஜீரண சக்தியை அதிகமாவதுடன், செரிமான பிரச்சனை இருந்தாலும் சரிசெய்துவிடும்..

சிறுநீரகம்: அதேபோல, சிறுநீரகத்தை காக்ககூடிய தலையாய பணிகளை இந்த இலைகள் செய்கின்றன.. குறிப்பாக சிறுநீரகத்திலுள்ள கற்களை கரைத்து வெளியேற்றும் சக்தி இந்த இலைகளுக்கு உண்டு. பிரிஞ்சி இலையை தண்ணீரில் காய்ச்சி, தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், கிட்னியிலுள்ள கற்கள் உடைந்து வெளியேறும்.

மிகச்சிறந்த நார்ச்சத்து மூலதனமாக கருதப்படும் பிரிஞ்சி இலைகள், உடல் எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.. இந்த இலையில் டீ தயாரித்து தேன் கலந்து குடித்து வந்தால், உடலிலுள்ள கொழுப்புகள் மெல்ல கரைய துவங்கும்.. அல்லது சாதாரண தண்ணீருக்குள்ளேயே இந்த இலைகளை போட்டு வைத்துவிடலாம். இந்த தண்ணீரை நாம் தினமும் குடித்துவரும்போது, கழிவுகள் வெளியேறி, உடல் எடையில் மாற்றம் தெரியதுவங்கும்.

சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக இந்த இலைகள் உள்ளன.. இந்த பிரிஞ்சி இலையை பயன்படுத்தும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.. நீரிழிவும் கட்டுப்பாட்டுக்குள் வருவதாக கூறுகிறார்கள்.. முக்கியமாக டைப்-2 நீரிழிவிற்கு இந்த பிரியாணி இலைகள் மிகவும் பயன்களை தரக்கூடியது.

அதுமட்டுமலல, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக தங்கள் உணவில், பிரியாணி இலைகளை சேர்த்து வந்தால், அவர்களுக்கு குளுக்கோஸ் அளவு குறைந்துள்தளாக ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது.

சேர்மங்கள்: இதற்கு காரணம், பிரியாணி இலைகள் இயற்கையாகவே பாலிஃபீனால் எனப்படும் செயலில் உள்ள சேர்மங்களால் நிரம்பியிருப்பதால், குளுக்கோஸ் அளவை இது கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால், சர்க்கரை நோய்க்காக ஏற்கனவே மருந்து எடுத்து கொள்பவர்கள் தங்கள் உணவில் பிரியாணி இலைகளை சேர்ப்பது சர்க்கரையின் அளவை வெகுவாக குறைத்து விடுமாம்.

அதேபோல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடிய தன்மை இந்த இலைகளுக்கு உண்டு. எனவேதான் இதை ஒரு கிருமிநாசினியாக பயன்படுத்துகிறார்கள்.. பாம்புகள் கடித்தாலும், இந்த இலைகள் விஷத்தை உடலில் ஏறவிடுவதில்லையாம்.

தலையில் பொடுகு: தலையில் பொடுகு, அரிப்புகள் இருப்பவர்கள், குளிக்கும் வெந்நீரில் எலுமிச்சம் சாறு, பிரியாணி இலை சேர்த்து கொதிக்க வைத்து, தலைக்கு தேய்த்து குளித்து வரும்போது, பலன் கிடைக்கும்.. இதனால், தலைமுடி உதிர்தலும் கட்டுக்குள் வரும்... சருமத்துக்கு மருந்தாகவும் இந்த இலைகள் உதவுவதால், வேப்பிலையை போலவே, இந்த இலைகளையும், தண்ணீரில் இந்த இலையை போட்டு கொதிக்க வைத்து, அரிப்பு, எரிச்சல் இருக்கும் இடத்தில் கழுவி வந்தால் போதும்.

இந்த பிரியாணி இலைகளை எரித்து, அதில் வரும் புகையை சுவாகிக்கும்போது, சுவாச மண்டலம் சீராகும்.. சுவாச உறுப்புகளும் சிறப்பாக இயங்கும்.. சளி, இருமல், தும்மல், நீர்ப்பிடிப்பு, தலைபாரம் போன்ற உபாதைகள் வந்தால், இந்த பிரியாணியின் புகையை நுகர்வது நல்லது.. ஆனால், ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட சுவாசம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்த்துவிடலாம். மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் இதை பயன்படுத்த கூடாது.

வயிறு உபாதைகள்: அதேபோல, பிரியாணி இலைகள் சூடான ஆற்றலை கொண்டிருப்பதால், கர்ப்பிணிகள் இதனை தவிர்க்கலாம்.. அதேபோல, வயிறு உபாதைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும், பிரியாணி இலைகளை தவிர்க்கலாம்.. அதேபோல, டான்சில்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும் பிரிஞ்சி இலைகளை உணவில் தவிர்க்கலாம். அல்லது டாக்டர்களின் ஆலோசனையை பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+