சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க.. பாகற்காயை தொடாதீங்க.. யாரெல்லாம் பாகற்காய் ஜூஸை தவிர்க்கலாம்
சென்னை: பாகற்காய்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன? பாகற்காய்களை சருமத்துக்கும், தலைமுடிக்கும் பயன்படுத்தலாமா? பாகற்காயை அனைவருமே சாப்பிடலாமா? யார் யாரெல்லாம் தவிர்க்கலாம்? இதுகுறித்து சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் இது அனைத்துக்குமே பொட்டாசியம் நமக்கு தேவைப்படுகிறது. அந்த பொட்டாசியம் இந்த பாகற்காயில் உள்ளது.

கசப்பு நிறைந்த பாகற்காயில்,வாழைப்பழத்தில் இருப்பதைவிட 2 மடங்கு பொட்டாசியமும், பசலைக்கீரையில் இருப்பதைவிட 2 மடங்கு கால்சியமும் உள்ளதாம். இதனால், எலும்பு, பற்கள் ஆரோக்கியத்துக்கும், வலுவுக்கும் பாகற்காய் உதவுகிறது..
சத்துக்கள்: 85 சதவீதம் தண்ணீர் இருப்பதுடன் கலோரிகளும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க உதவும்.. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் இருக்கும் நச்சு தன்மையை குறைக்கின்றன..
பாகற்காயின் விதைகளைகூட வீணாக்கக்கூடாது என்பார்கள்.. இந்த விதைகள் இதய நோய்களை அண்டவிடாமல் காக்கிறது. தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதிலிருந்து விடுபட வைக்கிறது. புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த பாகற்காய்களுக்கு உண்டு..
குடல் புழுக்கள்: எனவே, பாகற்காய்களை உணவிலோ அல்லது ஜூஸ் போலவே குடித்துவந்தால், குடலிலுள்ள புழுக்கள், ஒட்டுண்ணிகள் ஒழிந்துவிடும்.. ஒவ்வாமை, வீக்கம், கட்டிகள் இருந்தாலும் நீங்கிவிடும்.. சருமத்துக்கு உறுதுணையாக இருக்கும் பாகற்காய்கள், சொறி, சிரங்கு, அரிப்பு, சொரியாஸிஸ், படர்தாமரை, அலர்ஜி என அனைத்து தோல் வியாதிகளுக்கும் நல்லது.
பொடுகு தொல்லை இருப்பவர்கள், பாகற்காய் சாற்றில் சீரகத்தை அரைத்து பூசினால் தீர்வு கிடைக்கும்.. பாகற்காய் சாற்றோடு சிறிது சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசிவந்தாலும் முடிகொட்டுவது கட்டுக்குள் வரும் என்கிறார்கள்.
அடிவயிற்றுவலி: நன்மைகள் மிகுதி என்றாலும், பாகற்காயை குறைவாகவே சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிடும்போது, அடிவயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது என்றாலும், கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். எனவே, ரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் இந்த காயை தவிர்க்கலாம்..
சர்க்கரை நோயாளிகள், பாகற்காய் சாறு சாப்பிட நேர்ந்தால் மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டி வரும். எனவே, டாக்டர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகுதான் பாகற்காய் சாற்றினை சேர்த்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களும் தவிர்க்கலாம்.. ஏனென்றால், கருப்பையை பாதிப்பதுடன், வயிற்றிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாக்கிவிடும்.. பாலூட்டும் தாய்மார்களும் பாகற்காய் சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்கள்: திடீரென ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம், மயக்கமும் ஏற்படலாம்.. அதனால், டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாகற்காய் அல்லது பாகற்காய் சாறு சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார்கள்.. பாகற்காயில் ஆக்சலேட் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்துவதுடன், சிறுநீரகங்களில் நச்சுத்தன்மையும் அதிகரிக்க செய்கிறதாம்.
பாகற்காய் சாப்பிட்டதும் முள்ளங்கி சாப்பிடக்கூடாது.. காரணம், முள்ளங்கி, பாகற்காய்களின் தன்மை வேறுபட்டது, இதன் காரணமாக அவை வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.. தொண்டையில் அமிலத்தன்மையையும் உண்டுபண்ணிவிடும்.. கசப்பு நிறைந்த பாகற்காயுடன், இனிப்பு நிறைந்த மாம்பழம் சாபபிடக்கூடாது. இதனால், வாந்தி, குமட்டல், அமிலத்தன்மை போன்ற உபாதைகள் வரும்.. இவை இரண்டுமே ஜீரணிக்க காலதாமதமாகும். பாகற்காய் சாப்பிட்டதும் பால் சாப்பிடக்கூடாது. இதுவும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications