தினம் 2 ஏலக்காய் இருந்தால், உடல் எடை மளமளனு குறையுமே.. ஏலக்காயில் இவ்ளோ ஊட்டச்சத்துக்களா? இதய நண்பன்
சென்னை: ஏலக்காய் என்பது வெறும் வாசனை பொருள் என்று மட்டுமே பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். பல்வேறு நோய்களை குணப்படுத்தக்கூடிய அருமருந்தாகவும் இந்த மசாலா பொருள் பயன்படுகிறது. எப்படி என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
நம்முடைய இந்தியாவில் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். வைட்டமின் A, B, C, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.. இந்த ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், உள்ளிட்டவைகளும் அடங்கியிருக்கின்றன.

ஆயுர்வேதம்: அதனால்தான், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் விதைகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருந்து வருகிறது.. அஜீரணக்கோளாறு, வயிற்றுப்பொருமல் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக ஏலக்காய் உள்ளதால்தான், சமையலில் அதிகம் சேர்க்கப்படுகின்றன.
எப்போதுமே அஜீரண குறைபாடுகள் உள்ளவர்கள், ஏலக்காயை தூளாக்கி கொண்டு, வெற்றிலையுடன் வைத்து மென்று தின்றால் நிவாரணம் கிடைக்கும். அத்துடன், குமட்டல், வயிறு அசௌகரியம் மற்றும் வாந்தி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்ந்துவிடும்.
வாயு கோளாறுகள்: ஆனால், சமையலையும் தாண்டி, வாயில் ஏற்படும் தொற்றுக்கள், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், வாயு சம்பந்தமான கோளாறுகள், விஷக்கடி போன்றவற்றிற்கெல்லாம் மிகச்சிறந்த மருந்தாக ஏலக்காய் உள்ளது.
ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை இந்த ஏலக்காய்க்கு உண்டு.. மேலும், கல்லீரலிலுள்ள தேவையற்ற யூரியா, கால்சியம், உள்ளிட்ட நச்சுக்களையும் வெளியேற்றிவிடும்.. சிறுநீர் கோளாறு இருப்பவர்கள், அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்த்தூள் சேர்த்து குடிக்கலாம். ஏலக்காயில் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடக்கூடிய சேர்மங்கள் அதிகமாக உள்ளன.. அதேபோல, ஏலக்காய் சாறு இரைப்பை புண்களின் அளவை 50 சதவிகிதம் தடுப்பதாக கூறுகிறார்கள்..
புத்துணர்ச்சி: மனதுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடிய இந்த ஏலக்காய் விதைகளை டீ போட்டு குடிக்கலாம். இதனால், சளி, காய்ச்சல் இருந்தாலும் விலகிவிடும். இந்த ஏலக்காய் டீயில் சிறிது தேன் சேர்த்து, தினமும் 2 வேளை குடித்து வந்தால், பலவீனமான நரம்புகள் பலம் பெறும்.. ஏலக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உயர் ரத்த அழுத்த பாதிப்பு குறையும்.. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஏலக்காய் டீ மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்..
ஏலக்காய் பொடியுடன், சிறிது மிளகு பொடி, சிறிது துளசி சாறு போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் கபம் இளகிவிடும்.. ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு, அதன் சாறை மட்டும் விழுங்குவதால், வாய் சுகாதாரம் பேணப்படும்.
கொழுப்பு கரையும்: உடலிலுள்ள கொழுப்பை குறைக்கக்கூடிய சக்தி ஏலக்காய் விதைகளுக்கு உண்டு.. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் பண்புகள் , தொப்பையிலுள்ள கொழுப்பை கரைக்க தூண்டுகிறதாம்.
எனவே ஏலக்காய் டீ அடிக்கடி குடிக்கலாம்.. அல்லது வெறுமனே நீரில், ஏலக்காயை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி குடித்தாலே, கொழுப்புகள் கரைய துவங்குமாம். அல்லது 1 ஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை ஏலக்காய் பவுடரை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் இடுப்பு கொழுப்பு குறையத் தொடங்கும்.
சரும நலன்: ஏலக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் சருமத்துக்கு மிகவும் நல்லது. தோல் ஒவ்வாமைக்கு சிகிச்சையளிக்கவும், தோல் நிறம் அதிகரிக்கவும் இந்த ஏலக்காய்களே ஆகச்சிறந்ததாக பயன்படுகின்றன..
கருப்பு ஏலக்காய் அதிக பாக்டீரியா எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்குமாம். தோல் பாதிப்பு இருந்தால், தேனும், ஏலக்காய் பொடியும் கலந்து தேய்த்தால், தீர்வு கிடைக்கும். அதேபோல, பித்த வெடிப்பு இருந்தால், ஏலக்காயுடன் வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை சேர்த்து அரைத்து தடவினால் குணம் பெறலாம்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications