சீரகம் தண்ணீர் சிறப்பு.. சீரக நீர் தொப்பையை குறைக்குமா? அதிக சீரகம் நல்லதா? யாரெல்லாம் தவிர்க்கலாம்?
சென்னை: சீரகம் தண்ணீர் மருத்துவம் பற்றி தெரியுமா? சீரகத்தை நீரில் ஊறவைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? எந்தெந்த நோய்க்கு சீரக தண்ணீரை குடிக்கலாம்? யாருக்கெல்லாம் இந்த சீரக தண்ணீர் பலன்களை தருகிறது? யாரெல்லாம் அதிக சீரகத்தை தவிர்ககலாம்? இவைகளை எல்லாம் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
வைட்டமின் E போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொண்டதால், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து சீரக விதைகள் போராடுகின்றன, இதனால் தோல் சுருக்கம் தள்ளிப்போடப்படுகின்றன..

சீரகத்தில் டெர்பென்ஸ், ஃபிளாவனாய்டுகள் போன்ற உயிரியல் கலவைகள் இருப்பதால், இந்த கலவைகள் சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன.. சருமத்தை பாதுகாக்க சீரகம் போன்ற வேறு மருந்தில்லை.
வயிற்றுப்போக்கு மருந்து
வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால், 2 ஸ்பூன் சீரகத்தை வெறுமனே வாணலில் வறுத்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். அதே வாணலில் 2 ஸ்பூன் தேனை விட்டால், சீரகம் பொங்கி வரும்.. அப்போது 200 மிலி தண்ணீரை ஊற்றி மீண்டும் அடுப்பை பற்றவைத்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்ட வேண்டும். இதில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால், உடனே பேதி நின்றுவிடும்.
உடல் எடை குறையும் மேஜிக்
சமையலில் சீரகம் சேர்த்தாலும், சீரக தண்ணீரை தனியாக குடிப்பதால் கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன.. குறிப்பாக உடல் எடை மிக எளிதாக குறையும்.. இதற்கு சீரகத்தை தண்ணீரில் இவு ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில், அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, 2 வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் எடை குறைவதில் மாற்றம் தெரியும்..
இதற்கு காரணம், சீரகத்தை ஊறவைத்ததுமே, அதிலிருந்து வெளிவந்த ஊட்டச்சத்து தண்ணீரில் மஞ்சள் நிறத்தில் கலந்து விடுகிறது.. இது மிக குறைந்த கலோரி உள்ள நீர் என்பதால், வெறும் வயிற்றில் குடிப்பதால், கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் பணியை செய்கிறது.
அல்லது சீரகம் ஊறவைத்த நீரில் டீ போட்டும் குடிக்கலாம்.. இதனால், செரிமான பிரச்சனை தீரும்,, உடலில் நீர்ப்பற்றாக்குறை தீரும்.. வயிற்றை குளிர்விக்கும் தன்மை சீரக விதைகளுக்கு உண்டு.. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது..
அதிக சீரகம் ஆபத்தா
எனினும், சீரகத்தை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளக்கூடாது.. உதாரணத்துக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்றால், ஒரு கிராம் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்தால் போதும். ஆனால், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், சிறுநீரகத்தில் நாள்பட்ட பாதிப்பு உள்ளவர்கள், இந்த சீரக தண்ணீரை குடிக்கக்கூடாது.
அதிகமான சீரகம், குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.. அதனால்தான், ஏதாவது ஆபரேஷன் செய்வதாக இருந்தால், அதற்கு 2 வாரங்களுக்கு முன்பாகவே, உணவில் சீரகம் சேர்க்க கூடாது என்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டால், நீரிழிவு நோயாளிகள் சீரகத்தை தவிர்க்க வேண்டும். காரணம், உணவில் சீரகம் அதிகமாகிவிட்டால், அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென்று குறைத்துவிடுமாம். மேலும், நெஞ்செரிச்சல், கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.
பாலூட்டும் தாய்மார்கள் - கர்ப்பிணிகள்
அதேபோல, சீரகத்தை நம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில், பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படலாம். தாய்ப்பால் புகட்டும் பெண்களும் அதிக சீரகத்தை தவிர்க்கலாம்.. சீரகம் அதிகமானால் பால் சுரப்பு குறைத்து விடும். அதிலும் கர்ப்ப காலத்தில் சீரகத்தை அதிகம் பயன்படுத்தினால் கருச்சிதைவும் ஏற்படலாம். எனவே ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரைக்கேற்ப சீரகத்தை எடுத்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications