முருங்கை பட்டை.. முருங்கை மரம் ஒன்று போதும்.. ஓராயிரம் பிரச்சனை தீரும்.. முருங்கை பட்டை மூலிகை பலன்
சென்னை: "முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. இதற்கு காரணம், முருங்கையில் மட்டும் எந்த பகுதியுமே வீண் கிடையாது.. அதனால்தான், அன்றைய வீடுகளில், வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வளர்த்து வைத்திருப்பார்கள்.
முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அடிப்பாகம் முதல் இலைகள் வரை அவ்வளவும் மருத்துவ பொக்கிஷங்கள் அடங்கி உள்ளன.

முருங்கை பட்டை: இதில் முருங்கை பட்டையானது, முழுக்க முழுக்க வைத்தியத்துக்கு பயன்படுத்தக்கூடியது.. பெரும்பாலும், முருங்கை பட்டையை உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்வார்கள். தலைவலி, காய்ச்சலுக்கு, மூட்டுவலி போன்றவைகளுக்கு பட்டை பொடி பலனை தரும். நரம்புக் கோளாறு இருப்பவர்கள், முருங்கை பட்டையை வாரத்தில் ஒருநாளாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
முருங்கை வேர் + பட்டை இரண்டுமே பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.. முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணமாகும் என்கிறார்கள்.
சரும பிரச்சனைகள்: முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும். அதேபோல, இந்த பட்டையை இடித்து வீக்கங்கள், கட்டிகள், புண்கள் மீது வைத்து கட்டினால், வீக்கம் குறையும்... கட்டியும் கறையும்.. காதுவலி இருப்பவர்களுக்கு முருங்கை பட்டை நல்ல தீர்வை தரும்..
அல்லது முருங்கை பட்டையிலிருந்து சாறு போல எடுத்து, அதனுடன் குப்பைமேனி சாறும் கலந்து, எண்ணெய் விட்டு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டால், முதலுதவியாக பயன்படும். உடலில் எங்கு அடிபட்டாலும் இந்த எண்ணெய்யை பூசலாம். அல்லது, சொறி சிரங்குகள் மீதும் தடவிவரலாம்..
முருங்கை பட்டை: இந்த பட்டையின் மேலுள்ள தோலை நீக்கிவிட்டு, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த தண்ணீர், பலவித பிரச்சனைகளையும் சரிசெய்யக்கூடியது..
உள்ளுறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது.. ரத்தத்தை சுத்திகரிக்க செய்கிறது.. அதனால், ரசம் அல்லது சூப் போல செய்து மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் பறந்துவிடும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.. வயிற்றில் புண் இருந்தாலும் ஆற்றிவிடும்..!!
பட்டை தண்ணீர்: முருங்கை பட்டையை நன்றாக இடித்து மண்சட்டியில் போட்டு, தண்ணீர் மட்டுமே சேர்த்து, சுண்ட காய்ச்சி கசாயமாக எடுத்து வைத்துக் கொண்டால், இன்னும் பன்மடங்கு பலன்தரும்.. வலிப்பு நோய் நம்மை எட்டிக்கூட பார்க்காதாம்.. இப்படி பல பலன்களை தரும் முருங்கை பட்டையை, மருத்துவர்களின் உதவியுடன் பயன்படுத்தி வந்தால், ஆரோக்கிய வாழ்வை எளிதாக பெறலாம்!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications