முருங்கைக்காயின் பெரிய ஆச்சரியம்.. முருங்கை விதையின் விதவித பலன்கள்.. முருங்கையை இப்படி செய்யுங்க
சென்னை: முருங்கைக்காயின் நன்மைகள் பற்றி தெரியும்.. ஆனால், முருங்கைக்காயை வைத்து எத்தனை சமையல்களை செய்யலாம் தெரியுமா? இதில் அல்வா முதல் ஃப்ரைடு ரைஸ் வரை செய்யலாம்.
முருங்கைக்காயில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தை விடவும் அதிகமாம்.. இதிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையானதாம். இதிலுள்ள கால்சியம், பசும்பாலைவிட, 4 மடங்கு அதிகமாம்.. இதிலுள்ள வைட்டமின் சி, ஆரஞ்சுப் பழத்தைவிட அதிகமாம்.. மற்ற அனைத்து கீரைகளில் இருப்பதைவிட, இந்த முருங்கைக்கீரையில் ஏகப்பட்ட இரும்புச் சத்துக்கள் உள்ளன.
எலும்புகள் பலம்: எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.. மூலநோய் உள்ளவர்கள், சளி பிரச்சனை பாதிப்பு உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்களுக்கு முருங்கைக்காய் அருமருந்தாகும். ரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைக்கிறது. ரத்தமும், சிறுநீரும் சுத்தமாகும்.. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முருங்கைக்காயை அடிக்கடி சாப்பிடலாம்.

முருங்கைக்காயை சமைக்கும்போது, இதன் விதைகளை குழந்தைகளுக்கு சாப்பிட தரலாம்.. காரணம், இந்த விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.. அதேபோல, இந்த விதைகளை மட்டுமே வைத்து நிறைய உணவுகளை நாமே தயாரித்து சாப்பிடலாம்.
இறால் மீன்: முருங்கைக்காயில் சாம்பார், புளிக்குழம்பு, குருமா தவிர, பல வகைகளிலும் பயன்படுத்தலாம். முருங்கையில், மட்டனை சேர்த்து சமைத்தால் அபார ருசியாக இருக்கும். முருங்கைக்காயில் இறால் சேர்த்து சமைக்கலாம்.
இந்த முருங்கையில், பச்சடி செய்வார்கள்.. ஊறுகாய் செய்வார்கள்.. அதாவது கடுகு, காய்ந்த மிளகாய் இரண்டையும் நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும். ஒருவாணலில், முருங்கைக்காய்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு, உப்பு, மஞ்சள்தூள், கடுகு - மிளகாய்த்தூள் பவுடரையும் கலந்து, இவை எல்லாமே மூழ்கும் அளவுக்கு எண்ணெய் விட்டு, 2 நாட்களுக்கு நன்றாக கிளறி விட வேண்டும்.
ஃபிரைடு ரைஸ்: அதேபோல, முருங்கைக்காயில் ஃபிரைடு ரைஸ் செய்வார்கள். முருங்கைக்காயை வேக வைத்து, அதிலுள்ள சதையை மட்டும் வழித்து எடுத்துக் கொண்டு, வேக வைத்த பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சை பட்டாணியுடன் சேர்த்து, ஃபிரைட் ரைஸ் செய்தால் சுவையாக இருக்கும்.. இதிலேயே செய்முறையில் பிரியாணியும் செய்யலாம்.
முருங்கைக்காயை வேக வைத்து, சதைகளை எடுத்து வைத்துக் கொண்டு, கோதுமை மாவுடன் அதை கலந்து, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, சிறிது எலுமிச்சம் சாறு கலந்து, சப்பாத்தி போல செய்து சாப்பிடலாம்.
பச்சை மிளகாய்: இந்த சதையை மட்டுமே வழித்து எடுத்துக்கெண்டு, கரகரப்பாக அரைத்த கடலைப்பருப்புடன் சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாவற்றையும் சேர்த்து, வடை போல தட்டி எடுக்கலாம்.
முருங்கை அல்வா: முருங்கைக்காயில் அல்வா செய்யலாம்.. வேகவைத்த இந்த சதைப்பகுதியை மட்டும் எடுத்து, விதைகள் நீக்கி நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.. பாதாம், முந்திரி இரண்டிலும் தோல் நீக்கி, பால் சேர்த்து அதையும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், வெல்லம் போட்டு, காய்ச்சி அதையும் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில், நெய், முந்திரி சேர்த்து வறுத்து, பிறகு முருங்கைக்காய் விழுதை கொட்டி, வதக்க வேண்டும். பிறகு, வெல்லப்பாகு சேர்த்து, அதனுடன் ஏலக்காய், முந்திரி பாதாம் விழுதையும் சேர்த்து கிளறவேண்டும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து, பாத்திரத்தின் அடியில் ஒட்டாத அளவுக்கு திரண்டுவரும்போது எடுத்துவிட வேண்டும்.
இது எல்லாவற்றையும்விட, முருங்கை சூப் செய்தால், உடலுக்கு மேலும் நல்லது.. ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், பூண்டு பற்கள் போன்றவற்றை பொடியாக நறுக்கி போட்டு, அதனுடன் மிளகு, சீரகம்,உப்பு, மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றி, முருங்கைக்காய் வேகும்வரை விட வேண்டும்.
முருங்கை சூப்: பிறகு, சூப்புக்கு உள்ளே இருக்கக்கூடிய முருங்கைக்காயை மட்டும் வெளியே எடுத்து, ஆற வைத்து, அதனுள் உள்ள சதைப்பகுதியை மட்டும் 1 ஸ்பூனை வைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சதைப்பகுதியை சூப்பில் போட்டு, அனைத்தையும் ஒரு மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி எடுத்தால், முருங்கை சூப் தயார். இப்போது கொத்தமல்லியை தூவிவிட்டு சாப்பிட வேண்டியதுதான்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications