Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருவாட்டு குழம்பு செய்றீங்களா.. "இந்த" கருவாடு விட்றாதீங்க.. "கருவாடு சாறு" ஆச்சரியம்..அதென்ன புதுசா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருவாடு சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.. அதிலும், நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்த கருவாடு எது தெரியுமா? கருவாடு சாறு வைத்து சாப்பிடும்போது, கூடுதல் பலன் கிடைக்கும் என்பது தெரியுமா?

தமிழர்களின் உணவில், கருவாடுக்கு ஒரு ஸ்பெஷல் இடம் எப்போதுமே உண்டு.. ஆனால், ஏனோ, மீனை உணவில் சேர்த்து கொள்ளும் அளவுக்கு கருவாடை சேர்த்து கொள்வதில்லை.. ஒருவேளை அதன் வாடை காரணமாக இருக்கலாம்.. அல்லது அதன் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். எனினும், நிறைய மருத்துவ நன்மைகளை இந்த கருவாடுகள் ஒளித்து வைத்து கொண்டுள்ளன.

Health Benefits of Dry Fish and Do you know what nutrients are contained in which Dry Fish

முதன்மையானது: அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதான்... 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் உள்ளது. கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

கருவாடுகளில் ஆண்டிஆக்ஸிடன்ட் அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும். உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள். சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச் சாறு சிறந்த மருந்தாகும்... கருவாடு சாப்பிடுவதால்,பூச்சிகளை அகற்றும்..

நீர்ப்பை, சினைப்பை: ஒவ்வொரு கருவாடிலும் ஒவ்வொரு நன்மை இருக்கிறது என்றாலும், சில கருவாடுகளை வாரம் 2 முறையாவது சாப்பிட சொல்கிறார்கள். அதில் ஒன்றுதான், சுறா கருவாடு.. வாத, கப நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன், மாதவிலக்கு பலவீன சீரமைப்பிற்கும், உடல் தேற்றத்திற்கும் இந்த சுறா கருவாடு உதவுகிறது.. எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளைச் சரி செய்ய உதவுகிறது..

பிரசவித்த பெண்களுக்கு பால் சுரக்க வேண்டுமானால், பால் சுறா கருவாடு போல சிறந்த தீர்வு வேறு கிடையாது.. நிறைய பூண்டு பற்களை உரித்துபோட்டு, புட்டு செய்து தருவார்கள்.. இதுபோலவே திருக்கைமீன் கருவாடிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. சீலா கருவாடு, இறால் கருவாடு இரண்டுமே, அடிக்கடி உணவில் பயன்படுத்தினால், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது.. வாய்வுப் பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறுஉப்புசம், போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம்

உடல் பலவீனம்: கொடுவா கருவாடு பெரும்பாலானோருக்கு மருந்தாகும்.. கொடுவாமீனைவிட, புரதச்சத்து 4 மடங்கும், தாதுப்புக்களின் செறிவு 10 மடங்கும், இரும்புச்சத்து 5 மடங்கும், சுண்ணாம்புச்சத்து 2 மடங்கும் இந்த கொடுவா கருவாடுக்கு அதிகம் என்கிறார்கள். அனீமியா உள்ளவர்கள், உடல் பலவீனமானவர்கள் இந்த கொடுவா கருவாடு சாப்பிடலாம்.

எது சிறந்த கருவாடு: எந்த கருவாடு செய்தாலும், நிறைய மிளகு பூண்டு, சீரகம், திப்பிலி போன்ற மூலிகை உணவுப்பொருட்களை சேர்த்து சமைத்தால், அது சத்தான, ஆரோக்கியமான உணவாக மாறிவிடும்.. அதனால் கருவாடில் குழம்பு, தொக்கு செய்வதைவிட, சாறு போல செய்து சாப்பிட்டால், ஜீரண சக்தியும் சேர்ந்து கிடைக்கும் என்கிறார்கள்.

கருவாட்டு சாறு: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, ஆகியவற்றை நன்றாக அரைத்து, அதனுடன், தக்காளியையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், அரைத்த மசாலா பொருட்களை சேர்த்து வதக்கிவிட்டு, சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். ஒரு தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி போடவும்.

Health Benefits of Dry Fish and Do you know what nutrients are contained in which Dry Fish

சாறு எப்படி தயார் செய்வது: பிறகு மிளகாய் தூள், தனியா தூள் முதலியவற்றை சேர்த்து நன்கு 2 நிமிடங்கள் வதக்கி, புளி தண்ணீர் கொஞ்சம் அதிகமாகவே, அதிகமாகவே சேர்த்து ஊற்ற வேண்டும். கடைசியாக சுத்தம் செய்த கருவாட்டு துண்டுகளை போட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை இறக்கி தூவினால், கருவாட்டு சாறு ரெடி.

இந்த கருவாடு சாறு செய்வதற்கு, எந்த கருவாடையும் பயன்படுத்தலாம்.. வெறும் கருவாடு துண்டு போடுவதற்கு பதில், கருவாடினை சுத்தம் செய்து, அம்மியில் அரைத்து ஊற்றினால், இன்னம் மணம் கூடும், ருசியும் அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டும்: ஆனால், எக்காரணம் கொண்டும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருவாடு பக்கமே வரக்கூடாது. சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+