இத்துனூண்டு சுண்டைக்காய்.. சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.. ஆல் ஏரியா கில்லி!
சென்னை: கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. கீர்த்தி சிறிதாக இருந்தாலும் மூர்த்தி பெரிது என நிறைய பழமொழிகளை கேள்விப்பட்டிருப்போம். அதற்கேற்ப குட்டியாக இருக்கும் சுண்டைக்காயின் பயன்களும் அளப்பரியது.
பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், விதைகள் இவையெல்லாமே மருத்துவ குணங்களை கொண்டது. இது இயற்கை நமக்கு அளித்த கொடை. இதை பயன்படுத்தி ஒவ்வொருவரும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு.

அந்த வகையில் சுண்டைக்காய் குறித்து பார்ப்போம். பச்சை நிறத்தில் குட்டியாக உருளையாக இருக்கும். இதன் உள்ளே நிறைய விதைகள் இருக்கும்.இந்த சுண்டக்காயை வைத்து காரக்குழம்பு, பொரியல், துவையல், சாம்பார் என வைக்கலாம். இவை உடலுக்கு நன்மையை கொடுக்கிறது.
இந்த சுண்டைக்காய் லேசாக கசப்பு தன்மையை கொடுக்கும். ஆனால் இதில் இல்லாத சத்துக்களே இல்லை. கால்சியம், புரதம், இரும்பு உள்ளிட்டவை அதிகமாக காணப்படுகிறது. இந்த சுண்டைக்காய் ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்க உதவி செய்யும். இந்த சுண்டைக்காயில் பினைல்கள், குளோரோஜெனின்கள் உள்ளவை. இவை இரைப்பையில் ஏற்படும் அழற்சி, கணையத்தில் ஏற்படும் புண்களை குறைக்கும்.
இதனால் வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பு ஏற்படாமல் தடுக்கும். அத்துடன் இந்த சுண்டக்காயில் நார்ச்சத்தும் இருக்கிறது. இது செரிமானத்தை தூண்டி எடையை குறைக்கும் பொருளாகவும் இருக்கிறது. சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால் ரத்த சோகை நோய் ஏற்படுவது தடுக்கும். ரத்த சோகை எனப்படும் அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களும் சுண்டைக்காயை சாப்பிட்டால் விரைவில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
இந்த சுண்டைக்காயில் கிளைக்கோஸைடு என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிக அளவில் உள்ளது. இதனால் இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை கட்டுப்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவு திடீரென உயராமல் பார்த்துக் கொள்ளும்.
உயர் ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
நீர்க்கட்டி, தைராய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும் சீரற்ற மாதவிடாய் பிரச்சினையை சரிசெய்யும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதயத்தையும் மண்ணீரலையும் பாதுகாக்கிறது. சுண்டைக்காயில் ஆண்டி வைரல் பண்புகள் இருப்பதால் காய்ச்சலையும் குணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுநீரக செயலிழப்பை தடுக்கும். சிறுநீரை பெருக்கும். ஆஸ்துமா நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். மூலத்தை கட்டுப்படுத்தும். மூல நோயால் ஏற்படும் ரத்தத்தை தடுக்கும்.












Click it and Unblock the Notifications