தூதுவளை இலை.. அல்டிமேட் ஆச்சரியத்தை தரும் தூதுவளை கீரை.. நுரையீரலின் நண்பன்.. மட்டன் கூட சாப்பிடலாமா?
சென்னை: தூதுவளை பல தொந்தரவுகளை விரட்டியடிக்கும் அற்புதமான மூலிகையாகும்.. இந்த கீரையை வைத்து என்னென்ன சமையல் செய்யலாம் தெரியுமா?
தூதுவளை என்ற மூலிகை செடியின் இலை, பூ, காய், வேர் எல்லாமே மருத்துவ குணங்களை கொண்டது.. இருமல், சளி, மூக்கடைப்பு, போன்றவற்றிற்கு உடனடி நிவாரணத்தை தரக்கூடியது இந்த தூதுவளை.

சளி தொல்லை: காது நோய்களுக்காக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகளுள் தூதுவளையும் முக்கியமான ஒன்று.. தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சி குடித்துவந்தால், நம்மை சளி, காய்ச்சல் என்றுமே அண்டாது.
பசி உணர்வு அதிகமாகும்.. உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும்... தேள், பூரான், தேனி, வண்டுகள், பூச்சிகள் இப்படி விஷபூச்சிகள் கடித்துவிட்டால், இந்த தூதுவளை அவர்களின் உயிரை காப்பாற்றும்..
அவ்வளவு ஏன், பாம்பு கடித்தால்கூட, தூதுவளையின் பழம் அருமருந்தாக நின்று நம் உயிரை காப்பாற்றும்.. தூதுவளை இலை பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டால், பாதிக்கப்பட்ட நபருக்கு விஷ முறிவு ஏற்படும். அதனால்தான் பாம்பு கடித்துவிட்டால் நஞ்சை முறிக்கும் வேறு சில மூலிகைகளோடு சேர்த்து, தூதுவளை பழங்களையும் உடனடியாக சாப்பிடுவார்களாம் மலைவாசிகள்.
ஆண்மை குறைபாடுகள்: ஆண்மை குறைபாடுகளை நீக்கி நரம்பு சம்பந்த பிரச்சனைகளையும் இந்த தூதுவளை நீக்குகிறது.. கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தூதுவளை சிறந்த தீர்வாகும்... கண் எரிச்சல் நீங்குவதுடன், கண் வலி இருந்தாலும் சரியாகிவிடும்.. தூதுவளை பவுடர் என்றே நாட்டு மருந்து கிடைகளில் கிடைக்கிறது..
தூதுவளை பூக்கள், மொட்டுக்கள் போன்றவற்றை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து காய்ச்சிய பால் சேர்த்து சாப்பிடலாம்.. கருப்பை புற்றுநோய் முதல் எந்த புற்றுநோயும் வராமல் தடுக்கலாம்.
சர்க்கரை நோய்: இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது.. இதனை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வர ஆரம்பிக்கும்.. தூதுவளையை தினசரி சில இலைகளை மென்று தின்றாலே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். சர்க்கரை நோயாளிகள், மருத்துவரின் அனுமதியுடன் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இந்த இலையை எப்படியெல்லாம் சமைக்கலாம்?
தூதுவளை இலையை கழுவி சுத்தம் செய்து, கீரை சாதம் செய்யலாம்.. பஜ்ஜி செய்யலாம்.. நெய்யில் வதக்கி துவையலாகவும் சாப்பிடலாம்.. சட்னியாகவும் சாப்பிடலாம்.. பச்சடியாகவும் சாப்பிடலாம். அடை போலவும் செய்து சாப்பிடலாம்.. இந்த இலையில் ரசம் போலவும் வைக்கலாம்.

ரசம் எப்படி வைப்பது: இந்த இலையை சுத்தம் செய்து, கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, மற்றும் தூதுவளை இலை சிறிது சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தாளித்து, ஊறவைத்து கரைத்து வைக்கப்பட்டிருக்கும் புளி, மற்றும் தக்காளியை, தாளிப்பில் கொட்டி விட வேண்டும். நுரை போல வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கினால் தூதுவளை ரசம் தயார்.
வேர்க்கடலை: சட்னி எப்படி அரைக்கலாம்? தூதுவளை கீரையை சுத்தம் செய்து, அலசி கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, கீரையை வதக்கி எடுத்து கொள்ள வேண்டும. அதே கடாயில், சிறிது உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு பற்கள், சிறு துண்டு இஞ்சி, வறுத்து எடுக்க வேண்டும். இப்போது, கீரை, தாளித்த பொருட்கள், சிறிது வேர்க்கடலை, புளி, உப்பு, சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்தால் தூதுவளை துவையல் தயார்.
தூதுவளை இலையை சுத்தம் செய்து கழுவி கொண்டு, அதில் சிறிது மிளகு சேர்த்து விழுதுபோல அரைத்து கொள்ள வேண்டும். இதனை கெட்டியான இட்லி மாவுடன் கலந்து நன்கு தோசை வார்த்து சாப்பிடலாம்.
தூதுவளை கீரைகுழம்பு: இந்த இலையை, முளைக்கட்டிய பச்சை பயறுடன் சேர்த்து வேக வைக்கவும்.. இதில் சிறிது தேங்காய் துருவல், இஞ்சி, கல் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, வேக வைத்த கீரை மற்றும் பயிரை கலவையில் கொட்டி சிறிது நேரம் கொதிக்க வைத்து, தாளித்து விட வேண்டும். சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்கும், நுரையீரல் ஆரோக்கியத்துக்கும் இது மிகவும் நல்லது.
இந்த இலையின் காய்கள், அதாவது தூதுவிளங்காயை பறித்து, மோரில் ஊற வைத்து, வற்றல் போல செய்து சாப்பிடலாம். அதாவது மோர் மிளகாய் வற்றல் போல சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். அல்லது மட்டனிலும் இதை சேர்த்து பொரித்து சாப்பிடலாம்.
வாணலில் எண்ணெய் ஊற்றி, கழுவிய மட்டனை சேர்த்து, சிறிது நேரம் வதக்கி எடுத்து ஆற விட வேண்டும்.. பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம், தேங்காய், சோம்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இதனுடன் ஆற வைத்த மட்டன், சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள தூதுவளை கீரையை சேர்த்து அரைக்கவும். இப்போது அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் மட்டன் கீரை உருண்டை ரெடி.












Click it and Unblock the Notifications