கேன்சர் செல்களை தாக்கும் ஆரோக்கியமான திராட்சை விதை.. வெறும் வயிற்றில் குடிக்கலாமா? நன்மைகளை பாருங்க
சென்னை: புற்றுநோய் செல்களையும் நெருங்க விடாமல் தடுக்கும் அளவுக்கு சக்தி கொண்டவைதான் திராட்சை விதைகள்.. காயங்களையும், ரணங்களையும் ஆற்றக்கூடிய திராட்சை விதைகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்க்கலாம்.
பழங்களின் விதைகள் எப்போதுமே நாம் தூக்கி எறிந்துவிடுகிறோம்.. ஆனால், ஒரு மரத்தின் மொத்த சத்துக்களையும் தனக்குள் வைத்திருக்கும் திறன் கொண்டவைதான் இந்த விதைகள்.

சத்துக்கள்: அந்தவகையில், திராட்சை பழத்தின் விதைகளையும் வீசிவிடுகிறோம். உண்மையை சொல்லப்போனால், பழத்தை போலவே, இந்த விதையில் அதிக சத்துக்கள் உள்ளதாம். வைட்டமின் E, C, லினொலெனிக் ஆசிட், பாலிபீனால் போன்றவை திராட்சை பழத்தில் உள்ளது.. முக்கியமாக, வைட்டமின் E சத்தைவிட, திராட்சை விதை 50 விழுக்காடு அதிக சக்தி கொண்டதாம்.. வைட்டமின்-C சத்தைவிட 20 மடங்கு சக்தி கொண்டது.
திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் ஒயின், இருதய பாதிப்புகளை சீர்செய்ய உதவுகிறது. நரம்புகளுக்கு வலுவூட்டும். எடை குறைவாக மர்றும் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது.
கருப்பு திராட்சை: ஆனால், திராட்சை விதையுடன் சாப்பிட்டு வந்தால் முழு சத்துக்களையும் பெற முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.. கருப்பு திராட்சையை விதைகளுடன் சேர்த்து சாப்பிடும்போது கிடைக்கும் பலன்கள் ஏராளம். திராட்சை விதையிலேயே ஜூஸ் தயாரித்து ஜப்பான் தன்னுடைய இயற்கை உணவாக அங்கீகரித்துள்ளது.
வயிறு கோளாறுகளை இந்த கருப்பு திராட்சை விதையின் சாறு உதவுகிறது.. வெறும் வயிற்றில் இந்த சாறு குடித்து வரும்போது, வயிறு வலி, வயிறு எரிச்சல், மந்த நிலை, அஜீரணம் போன்றவை நீங்கிவிடும்.. நினைவாற்றலை அதிகப்படுத்தக்கூடிய தன்மை இந்த விதைகளுக்கு இருப்பதால், குழந்தைகளுக்கு திராட்சையை அதிகம் சாப்பிட தர வேண்டும். வளரும் பிள்ளைகளுக்கு மூக்கில் இருந்து நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றுக்கும் இந்த திரட்சை சாறு அருமருந்தாகும்.
குடல் பகுதிகள்: குடல் பகுதியை சுத்தப்படுத்தக்கூடியது இந்த திராட்சைப்பழங்கள்.. இதனால் குடல் புண்கள் ஆறுவதுடன் வாய்ப்புண்களும் ஆறும். கூர்மையான பார்வைக்கு இந்த திராட்சை விதைகள் உதவுகின்றன..
கண்ணில் புரை வளருவதை இந்த திராட்சை விதைகள் நீக்குகிறது. சிறுநீரக செயல்பாட்டினை காக்கக்கூடியது.. உடல் வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள், உடல் பலவீனம் உள்ளவர்கள், தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வலி வீக்கம் உள்ளவர்கள், இந்த திராட்சை விதைகளை சாப்பிடும்போது, நல்ல பலன் கிடைக்கும்.
திராட்சை விதை: குறிப்பாக பெண்கள் இந்த விதைகளை தவறவிடக்கூடாது.. சமீபகாலமாகவே பெண்களை அச்சுறுத்தும், கர்ப்பப்பை கோளாறுகளுக்கு இந்த திராட்சை விதைகளே மருந்தாகின்றன..
உடலில் ரத்தசோகை பிரச்சனை இருந்தால், கருப்பு திராட்சையை விதைகளுடன் சாப்பிட்டு வந்தால், புதிய ரத்தத்தையும் ஊறச்செய்து, அனீமியா தொந்தரவு நீங்கும்.. ரத்த நாளங்களும் விரிவடைவதுடன், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவும் குறையும். எனவே, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் திராட்சையை கட்டாயம் சாப்பிட்டு வரவேண்டும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications