முருங்கையிலை முக்கியம்.. வல்லாரையின் வல்லமை.. பிள்ளைகளின் பொக்கிஷம்.. குழந்தைக்கு கீரை சூப் தரலாமா
சென்னை: குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினமும் ஒரு கீரை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.. அந்தவகையில், வளரும் பிள்ளைகளுக்கு தரக்கூடிய 2 வகையான கீரைகளையும், அந்த கீரைகளை எப்படி தர வேண்டும்? அந்த கீரைகளால் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ரத்த சோகை பிரச்சினைக்கும் சிறந்த தீர்வாக கீரைகள் உள்ளதால்தான், அவைகளை உணவில் கட்டாயம் சேர்க்க சொல்கிறார்கள்.. செரிமான மற்றும் குடல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பேணுவதிலும் கீரைகளை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் கொட்டிக்கிடப்பது கீரைகளில்தான்.

கீரை அவசியம்: எனவே, பிள்ளைகளுக்கு, பொறியல், குழம்பு, துவையல் போன்றவைகளை செய்து தரலாம் அல்லது சூப் வைத்து கொடுப்பதால், முழுமையான சத்துக்களை பெற முடியும்.. கீரைகளை பொரிக்கவோ, நீண்ட நேரம் வேக வைக்கவோ கூடாது. சிறிது நீர் ஊற்றி நன்றாக வேகவைக்க வேண்டும்.
அந்தவகையில், வல்லாரைக்கீரை பிள்ளைகளுக்கு அடிக்கடி சமைத்து தரலாம்.. இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்களை கொண்டது வல்லாரை கீரை.. மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் உதவுவது இந்த கீரையாகும்.. கால்சியம், பொட்டாசியம் வைட்டமின் K, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் வல்லாரையில் உள்ளதால், எலும்புகளை வலுப்படுத்துகின்றன.. அதுமட்டுமல்ல, ஆஸ்டியோகால்சின் என்ற புரதம், எலும்பு திசுக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன..
வல்லாரை கீரை: வல்லாரை கீரையை நிழலில் உலர்த்தி தூள் செய்து, பவுடராக்கி சலித்து வைத்து கொள்ள வேண்டும். இதில்,தினமும், காலை, மாலை என 2 வேளையும், ஒரு கிளாஸ் பாலில் 1 முதல் 2 கிராம் கலந்து குடிக்கலாம்.. அல்லது வெறுமனே 2 வல்லாரை இலைகள் காலையில் வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம்,. இதனால் வளரும் பிள்ளைகளின் திறன், நினைவாற்றல், சுறுசுறுப்பும் அதிகமாகும.
அதேபோல, வல்லாரைக்கீரையுடன் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ளும்போது, கூடுதல் சத்துக்களை பெற முடியும். இதற்கு கறிவேப்பிலையை வெறும் வாணலில் லேசாக வறுத்து கொள்ள வேண்டும். பிறகு, கொள்ளு, உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் போன்றவற்றை ஒவ்வொன்றாக வறுத்து ஆறவைக்க வேண்டும். இதில், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள வல்லாரைக்கீரை பொடியும் சேர்த்து அரைக்க வேண்டும். சூடான சாதத்தில் நெய் ஊற்றி, இந்த பொடியை சேர்த்து சாப்பிட தரலாம்
முருங்கைக்கீரை: சிறுவர்களுக்கு முருங்கைக்கீரையையும் கட்டாயம் தர வேண்டும். இந்த கீரையில் இல்லாத சத்துக்களே கிடையாது. நார்ச்சத்து நிறைந்த இந்த கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.. இதனால், பிள்ளைகளின் ஆற்றல் அதிகரிக்கும். பார்வைத்திறன் கூடும். எனவே குழந்தைகளுக்கும் கீரை சூப் தரலாம்..
பொரியலாக செய்து தருவதைவிட, இப்படி சூப் போல வைத்து தந்தால் நன்றாக சாப்பிடுவார்கள். முருங்கையிலை சூப்பில் அதிகளவு அமினோ அமிலங்கள் உள்ளன. நார்ச்சத்துக்கள் அதிகளவில் இருப்பதால், குழந்தைகளின் செரிமானம் சீராக அமையும். வைட்டமின் C, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், நினைவாற்றலும் மேம்படுகிறது, சிறுநீரகத்தையும் பாதுகாப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
ஆனால், 6 மாதம் முடிந்தபிறகே குழந்தைகளுக்கு கீரை சூப், ஒரு ஸ்பூன் தரலாம்.. காரணம், குழந்தைகளின் குடல், உணவின் செரிமானத்திற்கு 6 மாதத்தில்தான் தயாராக உள்ளது. 6 மாதத்துக்கு முன்பு மற்ற உணவுகளை தரும்போது, தாய்ப்பால் குடிக்கும் நேரம், மற்றும் தடவைகள் குறைந்து சுரப்பும் குறைந்துவிடும். ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படலாம்..
திரவ உணவு: அதேசமயம், தாய்ப்பாலுடன இணை உணவு தர ஆரம்பிப்பதை 6 மாதத்திற்கு பிறகு தள்ளிப்போடவும் கூடாது. எனவே, திரவ உணவை பழகியபிறகு சூப் கொடுக்க தொடங்கலாம்.. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற்று, குழந்தைகளுக்கு சூப் தரலாம்.












Click it and Unblock the Notifications