ஓமவல்லி அலைஸ் கற்பூரவள்ளி.. எக்கச்சக்க நன்மைகள்.. நாலு இலையில் கிட்னி கிளீனாகிடும்.. அற்புத மூலிகை
சென்னை: ஓமவல்லி என்று சொல்லப்படும் கற்பூரவள்ளி இலைகளின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக்கூடும் இந்த இலைகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
ஓமவல்லி இலைகளில் வைட்டமின் C , A சத்துக்கள் அடங்கியிருப்பதால், எதிர்ப்பு சக்தியாக திகழ்கிறது. வெறுமனே இந்த இலைகளை மென்று சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்..

விதைகளைப் போலவே, அஜ்வைன் இலைகளும் வாய்வு மற்றும் பிற வயிற்று உபாதைகள் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இதன் இலைகள் செரிமானத்தை மேம்படுத்துவதாகவும், குழந்தைகளின் பசியைத் தூண்டுவதாகவும் நம்பப்படுகிறது. குறிப்பாக சளி, இருமல் குணமாக இந்த இலையைக் கொண்டு கற்பூரவல்லி ரசம் மற்றும் சட்னி செய்கிறோம்.
சிறுநீரகங்கள்: ஓமவல்லி இலைகள் சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பு கவசம் போல விளங்குகிறது.. சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து வெளியேற்றக்கூடியது. சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டிற்கு ஓமவல்லி இலைகள் உதவுகின்றன.. உடலிலுள்ள ரத்தத்தில் அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரிப்பதுடன், கழிவுகளையும் சிறுநீர் வழியாக வெளியேற்ற துணைபுரிகிறது இந்த ஓமவல்லி இலைகள்.
ஓமவல்லி இலைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. எனவே, இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது..
முழங்கால் வலி: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், முழங்கால் வலி, மூட்டுவலி முதல், கீல்வாதம்வரை தொந்தரவு உள்ளவர்களுக்கும் ஓமவல்லி இலைகள் சிறந்த மருந்தாகும். அஜீரண பிரச்சனை, நெஞ்செரிச்சல் தொந்தரவு இருந்தால், ஓமவல்லி இலையிலிருந்து சாறு எடுத்து, சில துளிகளை பயன்படுத்தினால் தீர்பு கிடைக்கும்.
முக்கியமாக சுவாச கோளாறுகளுக்கு ஓமவல்லி மிகச்சிறந்த நிவாரணமாகும். சளி, இருமல், கபம், வறட்டு இருமல், தொண்டடை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற உபாதைகளுக்கு ஓமவல்லியின் இலைச்சாறுகளே அருமருந்தாகின்றன. இந்த இலைகளை பிழிந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்று போடும்போது, தலைவலி, ஜலதோஷம், நீர்க்கோத்தல் நீங்கும்.
நல்லெண்ணெய்: அல்லது ஓமவல்லி சிரப் போல குடிக்கலாம். இதற்கு ஓமவல்லி இலையை விழுதாக அரைத்து, தண்ணீரில் இதனை கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதில், ஏலக்காய், கிராம்பு, தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால், அனைத்துவிதமான சுவாச கோளாறுகளும். இந்த ஓமவல்லி இலைகளில் ஆவி பிடிக்கும்போது, சளி, தலைவலி, தலைபாரம் விலகிவிடும். கற்பூரவல்லி சாறுடன் சீனி, நல்லெண்ணெய் கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.
இதன் இலைச் சாற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சீதள இருமல் தீரும். அதேபோல, கற்பூரவல்லி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து, 2 மி.லி சாருடன் 8 மி.லி தேன் கலந்து தருவதால் குழந்தைகளின் மார்பு சளி கட்டுக்குள் வரும்.. இதனால், குழந்தைகளின் அஜீரணமும் நீங்கும்.
நரைமுடி: நரைமுடி உள்ளவர்கள் இந்த ஓமவல்லியை பயன்படுத்தலாம். ஓமவல்லி இலைகளை விழுதாக அரைத்து தலைக்கு பயன்படுத்துவதால், தலைமுடி நிறம் கருப்பாகும்.. சரும பாதுகாப்புக்கு ஓமவல்லி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.. முகத்தில் மருக்கள், பருக்கள், சிறு கட்டிகள் இருந்தால், இந்த இலைகளே உதவுகின்றன. அம்மை பாதிப்பு, தழும்புகள் போன்ற பாதிப்புகளுக்கு ஓமவல்லி இலைகளை விழுதாக அரைத்து பூசினால் தீர்வு கிடைக்கும்
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications