ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு.. பெண்களின் வரப்பிரசாதம் "பச்சைகாய்".. இந்த பழம் பற்றி தெரிஞ்சா விடமாட்டீங்க
சென்னை: பெண்களுக்கென்று இருக்கும் ஒரே ஒரு அருமருந்து பேரிக்காய் என்று சொல்லலாம்.. இந்த ஒரு காயில் பெண்களுக்கு தேவையான அத்தனை நன்மைகளும் ஒளிந்திருக்கின்றன.
நம் நாட்டின் ஆப்பிள் என்றால் அது இந்த பேரிக்காய்தான்.. ஆனால், ஆப்பிளை விடவும் சத்து நிறைந்தது.. ஏகப்பட்ட நார்ச்சத்துகள் இதில் உள்ளன.. அதற்கு நேர்மாறாக குறைந்த அளவு கலோரிகள் அடங்கியுள்ளன. பழமே என்றாலும், இதை "பேரிக்காய்" என்றுதான் சொல்கிறோம்..
வரப்பிரசாதம்: இருக்கின்ற பழ வகைகளிலேயே, பெண்களுக்கான வரப்பிரசாதம் இந்த ஒரு பழம் என்றே சொல்லலாம். முக்கியமாக, பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தி, அதை ஒழுங்குப்படுத்தக்கூடியது இந்த பேரிக்காய். உடல் குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், உணவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த பழத்தினை சாப்பிட்டால், உணவிலுள்ள கொழுப்பு உடலில் தங்குவது தவிர்க்கப்பட்டு விடும்.

இது உடல் எடை குறைய உதவுகிறது. பேரிக்காய் பழம் கிட்டத்தட்ட 84 சதவீதம் நீரால் ஆனது.. அதிகமான அளவில் நீர்ச்சத்து உள்ளதால், எடை இழப்பிற்கு உதவுவதோடு உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் பேரிக்காய் உதவுகிறது. ஆற்றலை தந்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் கெட்ட கொழுப்பையும் நீக்குகிறது..
உடை எடை: 12 வாரங்களுக்கு மேலாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 40 பெரியவர்கள் தினமும் 2 பேரிக்காய் சாப்பிடுவதால், 1.1 இன்ச் இடுப்பு சுற்றளவு குறைந்திருந்ததாம்.. அதேபோல இன்னொரு 10 வார ஆய்வில், ஒரு நாளைக்கு 3 பேரிக்காய் சாப்பிடும் பெண்கள், 3 வாரங்களில் சராசரியாக 0.84 கிலோ எடையை இழந்திருந்தார்களாம்.
பேரிக்காய் செரிமானத்தை அதிகப்படுத்துவதுடன், மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க பேருதவி புரிகிறது. உடலிலுள்ள கலோரிகளை குறைப்பதன் மூலம் உடல் எடையும் குறைகிறது.. 100 கிராம் பேரிக்காயில் 56 கலோரிகளை மட்டுமே உள்ளதால், உடல் எடையை குறைப்பதில் இது நன்மை பயக்கிறது. தினமும் ஒரு பேரிக்காயாவது சாப்பிட வேண்டும். 50 வயதிற்குட்பட்ட பெண்ணின் தினசரி தேவையான நார்ச்சத்து அளவில் இது 24 சதவீதத்தை பூர்த்தி செய்கிறதாம்..
கர்ப்பிணி பெண்கள்: கர்ப்பிணி பெண்கள் இந்த காயை சாப்பிட்டால், கருவில் வளரும் குழந்தைக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்.. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற இந்த காய் மிகச்சிறந்த உணவாகும்.. குழந்தை பெற்ற பெண்களுக்கும், பால் சுரக்க வைக்க இந்த பேரிக்காய் உதவுகிறது.. காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
பெண்களுக்கு ரத்த குறைபாடு எப்போதுமே இருக்கக்கூடாது.. ஹீமோகுளோபின் பிரச்சனை, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், இந்த பேரிக்காயை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.
உடல் பருமனை குறைக்க பேரிக்காய் நல்லது. இந்த காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது... நார்ச்சத்து சர்க்கரை நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும்.
இதய நோய்கள்: வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இந்த பேரிக்காயில் நிறைய உள்ளது.. இரவு சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்கு இந்த பழத்தை சாப்பிட கொடுத்தால், சத்தாக அமையும். எப்போதுமே பேரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிட வேண்டுமாம்.. அப்படி சாப்பிடும்போது, தோல் புற்றுநோய், இதய நோய்களை நீக்கும் தன்மை கொண்டதாம்.. கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைய உள்ளதால், குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பழமாக இந்த பேரிக்காய் உள்ளது.
நரம்புகள் புத்துணர்வடையும் குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண்களை நீக்குகிறது.. சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களை உடைத்து வெளியேற்ற, இந்த பேரிக்காய் சாப்பிடுவது நல்லது. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரக செயல்பாட்டை சரிசெய்யவும், இந்த பேரிக்காய் பலன்புரிகிறது.
குளிர்ச்சி பழம்: குளிர்ச்சியான பழம் என்பதால், உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இந்த பேரிக்காய்க்கு உண்டு.. பேரிக்காய் சாப்பிட்டால், எலும்புகள், பற்கள் உறுதியாகும்.. சிறுநீரக செயல்பாட்டுக்கு பேருதவி புரிவது இந்த பேரிக்காய்தான்..
பேரிக்காயில் உள்ள அதிக அளவிலான நார்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு இடையூறாக உள்ளதாகவும், பேரிக்காயில் உள்ள வைட்டமின் C, சிலருக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல், நெஞ்செரிச்சல், தலைவலி போன்ற உபாதைகளை ஏற்படுத்துவதாகவும் சொல்கிறார்கள்.. அதிக அளவு வைட்டமின் A உள்ளதால், மங்கலான பார்வை, எலும்பு வீக்கம், பசியின்மை, தலைசுற்றல் போன்ற உபாதை சிலருக்கு ஏற்படுவதாக சொல்கிறார்கள்.
சர்க்கரை: எனினும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் பழங்களை சாப்பிடுவது, கூடுதல் தைரியத்தையும், நம்பிக்கையையும் தரும். ஆனால், இந்த பேரிக்காயை ஜூஸாக தயார் செய்து சாப்பிடுவதை விட அப்படியே மென்று சாப்பிட்டால் முழுப்பலன் கிடைக்கும். அப்படியே ஜூஸ் செய்து சாப்பிட்டாலும், அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும். அதேபோல, சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்தால் இன்னும் ஆரோக்கியம் கிடைக்குமாம்.












Click it and Unblock the Notifications