மருத்துவ குணமிக்க அன்னாசிப்பழம்.. ஆயுசை கூட்ட 4 இலை போதுமே.. அண்ணாந்து பார்க்க வைக்கும் அன்னாசி டீ
சென்னை: அன்னாசி பழங்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? செரிமானத்துக்கு அதிகமாக அன்னாசி பழத்தை சாப்பிட சொல்ல என்ன காரணம்? அன்னாசி இலைகள்? அன்னாசி வத்தல்களின் பயன்கள் என்ன? யார் யாரெல்லாம் அன்னாசி பழத்தை சாப்பிடலாம்? சுருக்கமாக பார்க்கலாம்.
அன்னாசி பழத்திலுள்ள 85 சதவீதம் நீர்ச்சத்துதான், அப்பழத்தின் ஸ்பெஷாலிட்டிக்கு முக்கிய காரணமாகும்.. நிறைய நார்ச்சத்தும் உள்ளதுதான், குறைவான கொழுப்புச்சத்தும், அன்னாசியின் கூடுதல் சிறப்பாகும்.

அன்னாசி பழம்: அன்னாசியை சாப்பிட்டால் அஜீரண கோளாறுகள் ஏற்படுவதில்லை. இதற்கு காரணம், அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதியானது, நம் உடலிலுள்ள கொழுப்பை எரிக்க தூண்டுகிறது. எனவே, உணவின் ஜீரணமும் எளிதாகுகிறது, அத்துடன், செரிமான அமைப்பும் ஆரோக்கியமானதாக மாறுகிறது.
அன்னாசி பழத்தில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் புரோமெலைன் என்ற என்சைம் நிறைந்துள்ளது. இந்த புரோமெலைனில் வலிக்கு எதிராக செயல்படும் ஆற்றல் இருப்பதால், மூட்டுவலியால் பாதிக்கப்பட்டோர் அன்னாசியை அடிக்கடி சாப்பிடலாம்.
எலும்புகள்: எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு, அன்னாசியிலுள்ள கால்சியம், மாங்கனீசு உதவுகின்றன. கிட்டத்தட்ட 165 கிராம் கிண்ணம் அன்னாசி பழத்தில் பரிந்துரைக்கப்பட்ட தினசரி மதிப்பில் 76% மாங்கனீஸ் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு அன்னாசிப்பழத்தை தவறாமல் தர வேணடும்.
சமீப காலமாகவே புற்றுநோய் அச்சுறுத்தல்கள் அதிகமாகி கொண்டேவருகிறது.. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பினோலிக்ஸ், ஃபிளாவனாய்டு மற்றும் வைட்டமின் C சத்துக்கள் இந்த அன்னாசியில் நிறையவே இருப்பதால், புற்றுநோய் நம்மை அண்டுவதில்லை. முக்கியமாக இதிலுள்ள நார்ச்சத்து இருப்பதால், கேன்சரை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கஸ்ல்களின் உற்பத்தியைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குடல் ஆரோக்கியம்: அதேபோல, நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடல் எடை குறைப்பவர்கள் இதனை தாராளமாக சாப்பிடலாம்.. உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவை குறைப்பதில், அன்னாசிக்கு பெரும் பங்கு உள்ளது.. நச்சுக்கள் வெளியேறி, குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
அதுமட்டுமல்ல, அன்னாசிப்பழத்தில் ஆண்ட்டிஆக்ஸிடண்ட், மினரல்ஸ், வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. எனவே, ஒரு பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் ஓமம் சேர்த்து, அதில், அன்னாசியையும் கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்து வரும்போது எளிதில் தொப்பை கரைய துவங்கும். அல்லது வாரம் ஒருமுறையாவது அன்னாசி பழத்தில் ரசம் வைத்து குடிக்கலாம். இதனால், எடை குறைவதுடன், அஜீரண கோளாறு இருந்தாலும் நீங்கிவிடும்.
அன்னாசி டீ: அதேபோல, அன்னாசியில் டீ தயாரித்து குடிக்கலாம். ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, டீ தூள் சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன் அன்னாசி பழம், எலுமிச்சம்பழம் ஜூஸ் இரண்டையும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் போதும். தேவைப்படும்போது, இதை குடித்துவரும்போது, எடை இழப்பு வேகமாக ஏற்படும்.
அல்லது ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, 4 ஸ்பூன் ஓமம் பொடி, அன்னாசி பழத்துண்டுகளையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். இதனை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில், அந்த சாற்றினை வடிகட்டி, வெறும் வயிற்றில் 10 நாட்கள் குடித்து வந்தால் உடல் எடை குறைய துவங்கும்.
கண்கள் கோளாறு: அன்னாசியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்களில் பாதிப்பு வருவதில்லை.. காரணம், அன்னாசியில் நிறைந்திருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் C கண்பார்வையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
அன்னாசி பழம் மட்டுமல்லாமல், அன்னாசியின் இலைகளிலும் அளவுக்கு அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளன.. வயிற்றில் பூச்சி இருந்தால், இந்த பழத்தின் இலைகளை தேனில் கலந்து குடிக்கலாம்.
வற்றல் பயன்கள்: அன்னாசிப்பழத்தை உலர்த்தி வற்றல் செய்து சாப்பிடலாம்... இந்த வற்றல், பித்த சம்பந்தமான வியாதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்... தலைவலியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், விக்கல், மூளை கோளாறு, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், மூட்டு வலியை போக்க இந்த வற்றல் மருந்தாகின்றன. பித்தம் நீங்க, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோயை போக்க, தொண்டை கரகரப்பு சரியாக, தொண்டை அழற்சி விலக, பித்தம் சம்பந்தமான வியாதிகள் குணமாக, அனைத்துக்குமே இந்த அன்னாசிப்பழ வற்றல் தீர்வு தருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications