புளிச்சக்கீரை.. பேரை விடுங்க.. பலனோ அதிகம்.. ஆணின் அருமருந்து.. பெண்ணின் வரப்பிரசாதம்.. புளிச்ச கீரை
சென்னை: பெயரிலேயே புளிப்பு தன்மை இருப்பதாலோ என்னவோ இந்த புளிச்சக்கீரையை பலரும் பயன்படுத்துவதில்லை.. ஆனால், இதிலுள்ள மருத்துவ நன்மைகளை தெரிந்தால், இனி இந்த கீரையை தவிர்க்க மாட்டீர்கள்.
சமையலுக்கு என்று மட்டுமே இந்த கீரை பயன்படுவதில்லை.. மிகச்சிறந்த மூலிகையாகவும் திகழ்கிறது. இந்த புளிச்சக்கீரையில் இரும்பு சத்துக்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் C உள்ளன.

பார்வை கோளாறுகள்: பார்வை கோளாறை சரி செய்யக்கூடியது.. ரத்த சோகையை போக்கக்கூடியது.. புளிச்சக்கீரையை சாப்பிட்டு வந்தால், பசி உணர்வு தூண்டப்படும்.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.. எல்லாவிதமான வாத கோளாறுகளுக்கும் இந்த கீரை மிகவும் நல்லது.
உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த புளிச்சக்கீரை பயன்படுத்தலாம். காரணம், கெட்ட கொழுப்புகளை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளதால், உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுத்து நிறுத்துகிறது.. உடல் எடை அதிகமாகாமலும் தடுத்துவிடுகிறது.
இதயநோயாளிகள்: இதயநோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் நல்லது.. இந்த புளிச்சக்கீரையை மசியல் செய்து சாப்பிட்டால் ரத்தம் விருத்தியாகும்.. கீரைகளில் இரும்பு சத்தும், விட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளதால், சருமத்தை பாதுகாக்கிறது.. புளிச்சக்கீரையில் நீர்ச்சத்து நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறை போக்குகிறது. . இருமல், காய்ச்சலில் அவதிப்படுவோர், புளிச்சக்கீரையுடன் மிளகு சேர்த்து மசியல் செய்து சாப்பிடலாம். அதனால்தான், புளிச்சக்கீரையில் இருந்து இருமல் மருந்து தயாரிக்கிறார்கள்.
குளிர்ச்சி: சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி அல்லது துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் என்பார்கள். புளிச்சக்கீரையை விழுதாக அரைத்து, கட்டிகள், புண்கள் மீது பூசிவந்தால் நிவாரணம் கிடைக்கும்..
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இந்த புளிச்சக்கீரையை மட்டும் தவற விடக்கூடாது.. இந்த கீரையை நிழலில் உலர்த்தி, அதனுடன் ஜாதிக்காய், சுக்கு சேர்த்து இடித்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு, பாசி பருப்பு, மிளகாய், உப்பு இவைகளை மிக்ஸியில் நன்றாக பொடி செய்து, அதனுடன் புளிச்சக்கீரை பொடியையும் மிக்ஸ் செய்துவிடவேண்டும். தினமும் மதியம் சாப்பிடும்போது இந்த பொடியை சாதத்துடன் கலந்து, நெய் விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
பெண்கள்: பெண்களின் பிசிஓஎஸ் கருத்தரித்தலில் இந்த கீரையின் பங்கு மகத்தானது.. உடலில் ஈஸ்ட்ரோஜன், ப்ரஜஸ்ட்ரோன் ஹார்மோன் சமநிலைப்படுத்துகிறது. குரோமியம் பிக்ரோலினேட் என்ற மூலப்பொருள் இந்த கீரையில் உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கும், உயர் ரத்தம் அழுத்தம் உள்ளவர்களும், அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும், இந்த கீரை போல அருமருந்து வேறில்லை..
கெட்ட கொழுப்பு: புளிச்சக்கீரையை அடிக்கடி பருப்புடன் சேரத்து கடைந்து சாப்பிட்டு வந்தால், குடலிலுள்ள புழுக்கள் அழியும்.. வயிறு சுத்தமாகும்.. அதனால் வாரம் 2 முறையாவது இந்த கீரையை பயன்படுத்தினால் நல்லது. உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை இந்த கீரைக்கு உண்டு.
புளிச்சக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலின் செல்கள் வலுப்பெறுவதுடன், புற்று செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் ஆற்றலை தருகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை தீர்க்க இந்த புளிச்சக்கீரையை போல் உதவுவதற்கு வேறு எதுவும் கிடையாது... அதிகமான உதிரப்போக்கை தடுத்து நிறுத்துவதுடன், வயிற்று வலியையும் குணமாக்குகிறது.
பால் உணர்வுகள்: புளிச்சக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது. அதனால், உடல் சூட்டை தணித்து, உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. புளிச்சக்கீரை மட்டுமல்லாமல், இந்த கீரையில் உள்ள பழத்தில் சாறு எடுத்து, அதை சர்க்கரை, மிளகுடன் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.. குடற்புண்கள் ஆற்றும் தன்மை கொண்டது. புளிச்சக்கீரையின் விதைகளோ பால் உணர்வுகளை தூண்டிவிட துணைபுரிகிறது.
இப்படி வாழ்நாள் நோய்களை தடுக்கும் மிகப்பெரிய சக்தி இந்த கீரைக்கு உள்ளதால், வாரம் ஓரிரு முறையாவது உணவில் எடுத்து கொள்ள வேண்டும். இன்னும்கூட கிராமப்புறங்களில், கேழ்வரகு களி, பழைய சாதம் சாப்பிடும்போது, இந்த புளிச்சக்கீரையை அதனுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் மறந்துவிடக்கூடாது.












Click it and Unblock the Notifications