கொத்து கொத்தா படரும் கொடிபசலை.. குடலை காக்கும் புளியங்கீரை..இதுல இவ்ளோ இருக்கா? வாவ் மேஜிக் கீரைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீரைகள் என்றாலே சத்துக்கள் நிறைந்தவைதான். ஆனாலும் சில கீரைகளை சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்துவதே கிடையாது. அந்தவகையில் சத்து நிறைந்த 2 கீரைகளை பற்றி பார்ப்போம்.
முதலாவதாக, கொடிபசலைக்கீரை.. தரையோடு தரையாக, கொத்து கொத்தாக சிறு செடி போல வளரக்கூடியது.. இந்த கீரை மட்டுமல்லாமல், இதன் தண்டுகளிலும் சத்துக்கள் நிறைய உள்ளன. இலைகள் + தண்டுகள் இரண்டிலுமே நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகும்.

வைட்டமின் ஏ,பி, சுண்ணாம்பு, இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளதால், இந்த கீரையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளும்போது, ரத்தம் சுத்தமாகும்.. நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கலும் தீரும்.. கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கக்கூடியது.. சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பலம் கிடைக்கும்.. குடல்பகுதி சுத்தமாகும்..

Health benefits of Puliyan Keerai and Do you Tamarind Leaves are the Best for Anemia

கர்ப்பிணிகள்: சிறுநீர் துவாரத்தில் எரிச்சலை தணித்து, சிறுநீர் போக்கை அதிகப்படுத்தக்கூடியது. ஆனால், சளி, கபம் இருக்கும்போது மட்டும், இந்த குளிர்ச்சி கீரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு இந்த கீரை மிகவும் உகந்தது.. இதனால், வயிற்றை சுற்றி இருக்கும் திரவம் சுத்தமாகும்...

சரும அழகிற்கும் இந்த கொடிபசலை நன்மை தருகிறது.. இந்த கீரையின் சாறு எடுத்து குடித்து வந்தால், அல்லது 10 முதல் 20 மி.லி. வரை பூசிவந்தால், ஆணுறுப்பில் ஏற்படும் புண்கள் விரைவில் ஆறிவிடும். மற்றொரு கீரை, புளியங்கீரை.. சமையலுக்கு புளி மட்டுமே பயன்படுத்துவதால், புளிய மரத்தின் இலைகளை தவிர்த்து விடுகிறோம். ஆனால், இந்த புளி இலையும் உடலுக்கு மருந்தாகின்றன.
கொழுந்து: இந்த இலையின் தளிர்கள், கொழுந்து போன்ற இலைகள், உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. இந்த தளிர் இலைகளை சிலர் துவையல் செய்து சாப்பிடுவார்கள். இதனால், பித்தம் நீங்கும்.. சிலர் பிஞ்சு புளியங்காயை எடுத்து அதிலும் துவையல் செய்யும்போது, இந்த புளியங்கீரையையும் சேர்த்து சமைப்பார்கள். இந்த புளியங்கீரையை சித்த மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

குடல் தொடர்பான பிரச்சனை, செரிமான பிரச்சனை போன்றவற்றுக்கு இந்த கீரை மிகவும் நல்லது.. இதனால், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இயல்பாகவே இந்த கீரையில் வைட்டமினி C கிடைத்துவிடும் என்பதால், மஞ்சள் காமாலை, தொண்டை புண், மலேரியா காய்ச்சலி போன்றவற்றை இந்த கீரைகள் குணப்படுத்தக்கூடியது..

Health benefits of Puliyan Keerai and Do you Tamarind Leaves are the Best for Anemia

கொழுப்புகள்: அத்துடன், உடலுள்ள கொழுப்புகளை குறைக்கவும் துணைபுரிகிறது. புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இந்த கீரைகள் துணை புரிகின்றன.சரும தொந்தரவுகளுக்கும் தீர்வை தருகின்றன..

புளியங்கீரையை உணவில் எடுத்து கொள்ளும்போது, எலும்புகள் பலப்படுகின்றன.. ரத்த சோகை இருப்பவர்களுக்கு இந்த கீரை, மிகச்சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த கீரையில் துவையல் செய்யலாம்.. சட்னி செய்து சாப்பிடலாம்.. அல்லது குழந்தைகளுக்கு கீரை சாதம் போல செய்து தரலாம்.

கீரை சாதம்: புளியங்கீரையை கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில், நல்லெண்ணெய், பச்சை மிளகாய், சுத்தம் செய்யப்பட்ட கீரையை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து, விழுது போல எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இப்போது மற்றொரு வாணலில், எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கி, கீரை பேஸ்ட்டையும், உதிரியான சாதத்தையும் அதனுடன் சேர்த்து கலக்கினால், சுவையான கீரை சாதம் ரெடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+