குடல் புற்றுநோய்.. ஆண்மை குறைபாடு முதல் நீரிழிவை வரை ஓட்டும் சேப்பழங்கிழங்கு இலைகள்.. ஆரோக்கிய மூலிகை
சென்னை: பெண்களை அதிகம் மிரட்டி கொண்டிருக்கும் மார்பக புற்றுநோயை அண்டவிடாமல் தடுக்கக்கூடிய, சேப்பங்கிழங்கு இலைகளை பற்றி தெரியுமா? சர்க்கரை நோயாளிகள் இந்த கீரையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்
பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய்க்கு எதிராக சேப்பங்கிழங்கு பாதுகாப்பதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்குகள் எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை தருகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள கிழங்கு என்பதால், செரிமான கோளாறுகளை நீக்கக்கூடியது.. குடல் புண்களையும் ஆற்றக்கூடியவை.

சேப்பங்கிழங்கு: சேப்பங்கிழங்கில் வைட்டமின் A, E சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வரவிடாமல் தடுக்கக்கூடியது. வைட்டமின் A, E உள்ளதால், சருமத்தில் உள்ள காயங்களையும் விரைந்து ஆற்றக்கூடியவை.
வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிஜென்டுகள் நிறைந்துள்ளதால், ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது.. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியும் பெற முடிகிறது. பீட்டா கரோட்டின் நிறைந்த சேப்பங்கிழங்குகள், கண் நோய்களை நம்மிடம் அண்ட விடுவதில்லை.. ஆனால், சேப்பங்கிழங்குகளைவிட, அதன் இலைகளிலேயே அதிக மருத்துவ குணம் நிறைந்திருக்கின்றன.
வியப்பு இலைகள்: இதய வடிவில் காணப்படும், சேப்பங்கிழங்கு இலைகளில், புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், மிகச்சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது. வைட்டபின் B அதிகமாக உள்ளதால் நரம்புத்தளர்ச்சி பாதிப்புள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம்..
வழக்கமாக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள் சாப்பிடுவதால் உடலில் ரத்த விருத்தி அதிகமாகும் என்றாலும், இந்த சேப்பங்கிழங்கு கீரைகள் கிட்டத்தட்ட முருங்கைக்கீரை போலவே, செயல்படுகிறதாம். இதனால், எடை குறைய முயற்சிப்பவர்களும், ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களும், இந்த இலையை சமைத்து சாப்பிட வேண்டும்.
புற்றுநோய் செல்கள்: வைட்டமின் C, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த இலைகளில் நிறைந்துள்ளதால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. முக்கியமாக குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்கும் ஆற்றல் இந்த சேப்பங்கிழங்கு இலைகளுக்கு இருக்கிறதாம்.
அதேபோல, பெண்களை அதிகமாக பாதிக்கக்கூடிய மார்பக புற்றுநோயையும் நெருங்க விடாமல் தடுக்க செய்யும் சக்தி இந்த இதய வடிவ இலைகளுக்கு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ரத்த அழுத்தம்: ரத்த அழுத்த தொந்தரவு உள்ளவர்கள், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், சேப்பங்கிழங்கு இலைகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.. காரணம், இந்த இலைகளில் சபோனின், டேனின்ஸ், கார்போஹைட்ரேட், ப்ளோனாய்டுகள் போன்றவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவக்கூடியவை.. எனவே, சேப்பங்கிழங்கு இலையில் ஜூஸ் தயாரித்து குடித்து வருவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென சர்க்கரை அதிகரிக்கவும் செய்யாது.
அல்லது இந்த இலைகளை சமைத்து சாப்பிடலாம். ஆனால், பச்சையான இலையாக சாப்பிடாமல், இந்த இலைகளை கழுவி தண்ணீரில் கொதிக்க விட்டு, அந்த நீரை வடிகட்டிவிட்டு, வெறும் வேக வைத்த இலைகளை வைத்து, சமைத்து சாப்பிடலாம். சிலருக்கு தோல் அலர்ஜி உள்ளிட்ட உபாதைகள் வரலாம் என்பதால் டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று சாப்பிடுவதே சிறந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications