சேப்பங்கிழங்கி்ல் இத்தனை நன்மையா? கர்ப்பிணி சாப்பிடலாமா? இவங்க மட்டும் தொடாதீங்க.. செம ஹெல்த் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பங்கிழங்குகளை உணவில் தவிர்க்க கூடாது என்று சொல்ல என்ன காரணம்? இதயத்துக்கு எந்த வகையில் சேப்பங்கிழங்கு நன்மை தருகிறது? குழந்தைகளும் சர்க்கரை நோயாளிகளும், கர்ப்பிணிகளும் இந்த கிழங்கை சாப்பிடலாமா? பிரபல உணவு நிபுணர் சுஷ்மா, சேப்பங்கிழங்குகளின் நன்மைகள் பற்றி சொல்வதென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

சேப்பங்கிழங்குகளில் வைட்டமின்கள் A, B6, C, E, மற்றும் கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கலோரிகள், இரும்புச்சத்து, துத்தநாகம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன..இந்த சேப்பங்கிழங்கு குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.. செரிமான கோளாறை சரிசெய்யக்கூடியது. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய்க்கு எதிராகவும் பாதுகாப்பதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

சேப்பங்கிழங்கிலுள்ள சத்துக்கள்

பூஞ்சைகள், பாக்டீரியாக்களுக்கு எதிரானது.. கொலஸ்ட்ரால் பிரச்சனையும் தீரகிறது.. நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள், இந்த கிழங்கினை கட்டாயம் சாப்பிட வேண்டும்.இக்கிழங்கிலுள்ள வைட்டமின் A, E சத்தானது சருமத்துக்கு நல்லது.. வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இருப்பதும் பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது..

ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை பெருக்கி, நோய் எதிர்ப்பு சக்தியும் இதனால் அதிகமாகிறது.. பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளதால், கண் சம்பந்தமான பிரச்சனைகள் நெருங்குவதில்லை.2 வயதுக்கு பிறகே குழந்தைகளுக்கு தர வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

உணவு நிபுணர் சொல்வதென்ன

சமீபத்தில், ஹைதராபாத்தை சேர்ந்த கேர் ஹாஸ்பிடல் உணவு நிபுணர் சுஷ்மா பேட்டி ஒன்றில் சேப்பங்கிழங்கின் நன்மைகள் குறித்து பேசியிருந்தார்..

அதில், "சேப்பங்கிழங்கில் நீர் உள்ளடக்கம் நிறைந்துள்ளதால், கோடைகாலத்தில் டயட்டில் இக்கிழங்கை சேர்த்து கொள்ளலாம்.. குளிர்ச்சி பண்புகள் உள்ளதால், உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துகிறது..சர்க்கரை நோயாளிகள் இக்கிழங்கை மிதமான அளவில் எடுத்து கொள்ளலாம்.. ஆனாலும், ஒருவரின் டாக்டர்களின் ஆலோசனையை பெறாமல் சாப்பிடக்கூடாது.. மற்றபடி டயட்டில் உள்ளவர்கள், வறுவலாக இல்லாமல், வேக வைத்து, ஸ்டீமிங் அல்லது பேக்கிங் செய்து சாப்பிடலாம்.

இதயத்துக்கு ஆரோக்கியம்

அதேபோல, கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை மெதுவாக்குவதற்கு புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள் அடங்கிய இந்த கிழங்கை எடுத்துக் கொள்ளலாம்.. நார்ச்சத்து அதிகம் என்பதால், அஜீரண கோளாறுகள் நீங்குகிறது.. வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது..

சேப்பங்கிழங்கிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.மேலும் வைட்டமின் C சத்தானது, ஃப்ரீரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராட உதவுவதன் மூலமும், வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாட்டை ஆதரிப்பதன் மூலமும் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க செய்கிறது.

ர்ப்பிணி சாப்பிடலாமா

கர்ப்பிணிகளும் சேப்பங்கிழங்கு சாப்பிடலாம்.. காரணம் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இந்த கிழங்கில் உள்ளன.. முக்கியமாக ஃபோலேட் அதிகம் இருப்பதால்,கருவிலுள்ள குழந்தைக்கு நரம்பு குழாய் குறைபாடுகள் ஏற்படுவதை இந்த கிழங்கு தடுக்கிறது" என்றெல்லாம் சொல்கிறார் உணவு நிபுணர் சுஷ்மா

எப்போதுமே மண்ணிலிருந்து எடுத்ததுமே இந்த கிழங்கை சமைத்தால், அரிப்பு அதிகமாகிவிடும்.. எனவே, கிழங்கை வெயிலில் காயவைத்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ பயன்படுத்துவதால் அரிப்புத்தன்மை குறையும்.. மேலும், புளி மற்றும் எலுமிச்சையையும் சேர்த்து சமைக்கும்போது, அரிப்புத்தன்மை மேலும் குறையும். ஆனால் எக்காரணம் கொண்டும் பச்சையாக இந்த கிழங்கை சாப்பிடக்கூடாது..

யார் யார் தவிர்க்கலாம்

ஜீரண குறைபாடு இருந்தால், அல்லது உடல் பருமன் இருந்தால், இந்த கிழங்கை தவிர்த்துவிடலாம்.. அதேபோல, நரம்பு தளர்ச்சி பிரச்சனை, சரும பிரச்சனை உள்ளவர்கள், ரத்த ஓட்டம் சீராக இல்லாதவர்களும், இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்..பக்கவாதம் உள்ளவர்களும், இதயம் பலவீனமானவர்களும் இதனை தவிர்ப்பது நல்லதாகும். அதேபோல 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கிழங்கை கொடுத்து பழக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+