தவெக ஆட்சியில் அதிகாரிகள் ஆதிக்கமா? விஜய் என்னதான் செய்கிறார்? எச்சரிக்கும் சீனியர் தலைவர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்து இன்னும் ஐந்து மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே அரசு பிறப்பித்த ஐந்துக்கும் மேற்பட்ட முக்கியமான அரசாணைகள் மற்றும் துறை சார்ந்த உத்தரவுகள் அடுத்தடுத்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஒரு அரசில் புதியதாக ஒரு அரசாணை பிறப்பிக்கப்படுகிறது என்றால், அதற்குப் பின்னால் பல்வேறு நிலைகளில் விரிவான ஆய்வுகளும், தீவிர ஆலோசனைகளும் நடக்க வேண்டும். துறையின் கீழ்மட்ட அதிகாரிகள் தயாரிக்கும் பரிந்துரைக் கோப்புகள், துறைச் செயலாளர்கள், தலைமைச் செயலாளர், துறைசார்ந்த அமைச்சர் மற்றும் இறுதியாக முதலமைச்சரின் நேரடிப் பார்வைக்குச் சென்று, மக்களின் நலனை பாதிக்காத வகையில் ஆராயப்பட்டு பிறப்பிக்கப்பட வேண்டும்.

TVK

ஆனால் விஜய் அரசு முடிவெடுத்து வெளியிடும் உத்தரவுகளை, மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குப் பின் உடனுக்குடன் திரும்பப் பெறுவது பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள விஜய் மற்றும் அவரது கட்சிக்கு ஆட்சி நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லையா, அல்லது அதிகாரிகளின் கைகளிலேயே ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டதா என்ற கேள்விகள் தற்போது வலுத்து வருகின்றன.

அதிகாரிகள் கொண்டுவரும் யோசனைகளை அரசு அப்படியே குருட்டுத்தனமாக ஏற்றுக்கொண்டு அமல்படுத்தக் கூடாது என்பது நிர்வாகத்தின் அடிப்படை விதி.

ஆனால், தமிழ்நாட்டில் சி. ஜோசப் விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றி கழக (தவெக) அரசில் நிலைமை தலைகீழாக உள்ளது என்கிற விமர்சனம் அரசியல் அரங்கில் பூதாகரமாக வெடித்துள்ளது. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்குப் பதில், அரசு உயர் அதிகாரிகளின் விருப்பு வெறுப்புகளும், அவசர முடிவுகளுமே முன்னுரிமை பெறுகின்றன என்ற குற்றச்சாட்டு இப்போது பரவலாக எழுந்துள்ளது.

இபிஎஸ் சட்டப்பேரவை பேச்சும்... அவசர அரசாணையும்!

சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம், சட்டம்-ஒழுங்கு துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (RTI) இருந்து விலக்கு அளிக்கப்பட்ட விவகாரம்தான்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ குற்றப் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி தவெக அரசை நேரடியாகக் கேள்வி கேட்டார். மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாக அரசுத் தகவல்களை வைத்தே அவர் முன்வைத்த வாதங்கள் ஆளுங்கட்சிக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தின.

இதனைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களிலேயே பொதுத்துறைக்கு உட்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்கள் பெறுவதிலிருந்து முழுமையாக விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அவசர அரசாணை வெளியிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்விகளுக்கு நிர்வாக ரீதியாகப் பதில் சொல்வதை விடுத்து, தகவல்களே மக்களுக்குக் கிடைக்காமல் மூடி மறைக்க அதிகாரிகள் கொடுத்த யோசனையை அரசு அப்படியே அமல்படுத்தியதுதான் இந்த உத்தரவு என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்கள் மற்றும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் இந்த முடிவுக்கு அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அரசாணை வெளியான சில நாட்களிலேயே, கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் அரசு அதை மீண்டும் ரத்து செய்து பின்வாங்கியது.

மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் நேரடியாகக் கலந்தாலோசிக்க வேண்டாமா?

அரசாங்கத்தின் இதுபோன்ற மிக முக்கியமான முடிவுகள் வெளியாவதற்கு முன்னால், முதலமைச்சர் நேரடியாக மூத்த அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் அமர்ந்து விரிவாக ஆலோசிக்க வேண்டும். ஒரு உத்தரவை வெளியிட்டால் அதனால் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானதா, இதனால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க வேண்டும்.

ஆனால், தவெக ஆட்சியில் அமைச்சர்கள் பலருக்கும் ஆட்சி நிர்வாகத்தில் போதுமான அனுபவம் இல்லை. அனுபவம் இல்லாததோடு மட்டுமின்றி, அதை மூத்த தலைவர்களிடமிருந்தோ அல்லது பொது அமைப்புகளிடமிருந்தோ கற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் அவர்களிடம் போதிய அளவில் காணப்படவில்லை என்ற புகாரும் நிலவுகிறது. இதனால், கோப்புகளில் அதிகாரிகள் என்ன எழுதித் தருகிறார்களோ, அதன் சாதக பாதகங்களை முழுமையாக யோசிக்காமல் ஒப்புதல் வழங்கும் சூழல் நிலவுகிறது. இதுவே தொடர்ச்சியாக அரசாணைகள் வெளியாகி, பிறகு மக்களின் போராட்டத்திற்குப் பயந்து அடுத்தடுத்து திரும்பப் பெறப்படும் அவல நிலைக்கு வழிவகுத்துள்ளது.

"அதிகாரிகள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்": முன்னாள் அமைச்சர்கள் எச்சரிக்கை

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் விஜய் அரசுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

பல ஆண்டுகள் ஆட்சி நிர்வாகத்தை நடத்திய அனுபவம் வாய்ந்த அவர்கள் கூறுகையில், "அரசியல் அனுபவமும் நிர்வாகப் பிடியும் ஒரு அரசுக்கு மிக முக்கியம். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அதிகாரிகள் நிர்வாக இயந்திரத்தை இயக்கும் கருவிகள் மட்டுமே. ஆனால், கொள்கை முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள்தான் எடுக்க வேண்டும். அதிகாரிகளின் ஆதிக்கத்தை அனுமதித்து, அவர்கள்தான் அரசை வழிநடத்துகிறார்கள் என்ற நிலை உருவானால், அந்த அரசு விரைவில் பெரும் முட்டுச்சந்தில் போய் நிற்கும்" என்று வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு தனது அமைச்சரவையை வழிநடத்த வேண்டும் என்றும், அனைத்து விவகாரங்களிலும் அதிகாரிகளின் கை ஓங்குவதை உடனே கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இல்லையேல், அரசின் மீதான நம்பகத்தன்மையை மக்கள் முழுமையாக இழந்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கையும் எழுந்துள்ளது.

பாடம் கற்பாரா முதல்வர் விஜய்?

விஜய் கட்சி ஆட்சிக்கு வந்து குறுகிய காலமே ஆகியுள்ள நிலையில், மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் அரசு காட்டும் தடுமாற்றம் அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அதிகாரிகள் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக ஏற்று அரசாணைகளாக மாற்றுவதை அரசு தவிர்க்க வேண்டும்.

அரசியல் முதிர்ச்சியுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் கோப்புகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் புதிய நிர்வாகப் பாதையை முதலமைச்சர் விஜய் விரைவாக உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளுக்கு அரசு பலியாகாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் இயங்குவதை உறுதி செய்வதே தவெக அரசுக்கு இப்போதைய முதன்மையான தேவையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+