செவ்வாழை பழத்தின் நன்மை.. அடுத்த 48 நாளில் அதிசயம் பாருங்க.. செவ்வாழையின் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க
சென்னை: செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கும் உரிய நேரம் உள்ளது.. ஏன் தெரியுமா? செவ்வாழை பழத்தோலின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? எப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள் என்னென்ன?
செவ்வாழையில் வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கின்றன.
ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் 1 அல்லது 2 பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அளவையும், புதிய ரத்தத்தையும் உற்பத்தி செய்ய பெரிதும் உதவுகின்றது. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் சுமார் 1 மாதம் வரை தொடர்ச்சியாக செவ்வாழை சாப்பிட்டுவந்தால் அந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். செவ்வாழை பழத்தில் ஏராளமான நன்மைகளும், பல நோய் தீர்க்கும் மருத்துவ தன்மையும் உள்ளது.

தினமும் 100 கிராம் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், கண் கோளாறுகள் ஏற்படுவதில்லை. இந்த பழத்தில் நியூட்டின் (Nutein), ஸியான்தினின் (zeaxanthin), பீட்டா கரோட்டின், வைட்டமின் A உள்ளதால், மாலைக்கண் நோய், கண் எரிச்சல், கண் வலி , கண்களில் உள் அடுக்குகளில் உள்ள தசைகள் பிரச்சனை உள்ளிட்ட பார்வை குறைபாடுகளை நெருங்க விடுவதில்லை.
48 நாட்களுக்கு செவ்வாழையை சாப்பிட்டு வருபவர்களுக்கு, நரம்புத்தளர்ச்சி நீங்கி, நரம்புகள் பலப்பட்டு, ஆண்மை கோளாறுகள் சீராகும்.. ஒருநாளைக்கு 2 செவ்வாழையை அரை டீஸ்பூன் தேனுடன், 48 நாள் இரவில் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான நரம்புகள் பலம்பெற்று, ஆண்மைக்கோளாறுகள் நீங்கிவிடும்..
பெண்கள் இந்த பழத்தை சாபபிட்டால், கர்ப்பப்பை பலப்படும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் B6 கருவுறுதலின் விகிதத்தை அதிகரிக்க செய்வதுடன், கருமுட்டைகள் சிதையாமலும் பாதுகாக்கின்றன.. எனவே, குழந்தைபேறு இல்லாத தம்பதிகள், தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், 40 நாட்களுக்குள் கருத்தரிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல, தினந்தோறும் செவ்வாழை சாப்பிடுவதால், உடலுக்கு சத்துக்களில் 60 சதவீதத்தை பெறலாம். செவ்வாழை ஜீரணமாக 7 மணி நேரம் ஆகும் என்பதால் காலையிலேயே 6 மணிக்கு அல்லது 11 மணிக்கு அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிட்டுவிடுவது நல்லது.
செவ்வாழை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பார்கள்.. அஜீரண கோளாறு ஏற்படும் என்பார்கள்.. நீர்ச்சத்து அதிகம் என்பதால் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம் என்றாலும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லையாம்.
ஆனால், கடந்த 2022ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாழைப்பழங்களை உட்கொள்வது சில சமயங்களில் வாழைப்பழத்தில் உள்ள புரதங்களின் காரணமாக அசாதாரணமான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் வாழைப்பழத்தில் ஒவ்வாமை ஏற்படலாம் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம்..
சிவப்பு வாழைப்பழத்தை அதிகமாக உட்கொள்வதால் வாந்தி, வீக்கம், வாய்வு, குமட்டல் போன்றவை ஏற்படலாம்.. எனவே, சிவப்பு வாழைப்பழத்தில் ஏதாவது பாதகமான எதிர்விளைவுகளை நீங்கள் சந்தித்தால், அதை உட்கொள்வதை நிறுத்திவிட்டு, மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம்.
செவ்வாழை தோல்: இந்த செவ்வாழையின் தோலில் அதிக சத்துக்கள் உள்ளன.. எனவே, இந்த தோலை கீழே வீசிவிடாமல், அதை மிக்ஸியில் அரைத்து முகத்திற்கு தடவி வரலாம். இதனால் முகம் பொலிவு பெறுவதுடன், குளிர்ச்சியாகவும் இருக்கும்.. பருக்கள், மரு உள்ளிட்டவை நெருங்காது. அல்லது இந்த தோலை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, முகத்தில் வைத்து லேசாக மசாஜ் செய்யலாம்..
இந்த தோலில் உள்ள வைட்டமின்கள் A, B, C, மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் நிறைந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் சருமத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்கக்கூடியவை. எனவே, கண்களின் மீது இந்த தோல் அல்லது செவ்வாழைப்பழத்தை சிறிது வெட்டி வைக்கலாம். இதனால் கண்களும் குளிர்ச்சி பெறும், கண்ணில் நீர் வடிவதும் நின்றுவிடும்.
சர்க்கரை நோயாளிகள், செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், அது நோயை நிர்வகிக்க உதவலாம். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறைந்த க்ளைசெமிக் உணவுகள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க செய்யக்கூடியவை.. எனவே, செவ்வாழை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மைகளை தரக்கூடியவைகளாக உள்ளதாகவும், இந்த பழங்கள் அமிலேஸ் மற்றும் குளுக்கோசிடேஸின் செயல்பாட்டை தடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல, வைட்டமின் C நோய்த்தொற்றின் அபாயத்தை குறைக்க செய்வதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications