வெறும் 30 நாளைக்கு "சர்க்கரை" இல்லாமல் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? இழுக்கும் வெள்ளை சர்க்கரை
சென்னை: வெள்ளை சர்க்கரை இல்லாமல் பழகிக்கொள்ள முடியுமா? 30 நாட்கள் சர்க்கரையை உணவில் பயன்படுத்தாமல் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?
இனிப்பாக உள்ளது எல்லாமே சர்க்கரை கலந்த பொருள் என்றோ, அல்லது சத்து என்று கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.. சர்க்கரை சத்து என்பது இயற்கையாகவே சில உணவுகளில் அடங்கி உள்ளது.

இயற்கை தித்திப்பு: குறிப்பாக, பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் இப்படி பல பொருட்கள் தித்திப்பாக இருக்கும்.. ஆனால், இவையெல்லாம் இயற்கையான சர்க்கரைகளாகும். நமக்கு ஆரோக்கியத்துக்கு தேவையான சர்க்கரையாகும்.
ஆனால், வெள்ளை சர்க்கரையை நாம் நேரடியாக உட்கொள்ளும்போதுதான், அது பல பிரச்சனைகளை கொண்டுவந்துவிடுகிறது. குறிப்பாக, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், அதிலும், டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்தை அதிகமாகிறது, பல் சொத்தை, ஊட்டச்சத்து பற்றாக்குறை, குடல்புண், சளித்தொல்லை, இதய நோய், ரத்தம் அழுத்தம், புற்றுநோய் என சிறிய பிரச்சனை முதல் பெரிய பெரிய நோய்கள் வரை வரக்கூடிய வாய்ப்புள்ளது.
கல்லீரல்: இங்கு கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறிப்பிட வேண்டி உள்ளது.. இந்த சர்க்கரையில் "பிரக்டோஸ்" நிறைய உள்ளதால், உடலில் கொழுப்பை உருவாக்க இதுதான் துணைபுரிகிறது.. அதனால், சர்க்கரையை நாம் அதிகம் எடுத்து கொள்ளும்போது, கல்லீரலில், கொழுப்பு அமிலங்களை உருவாக்கிவிடும். இதுவே கல்லீரலை நேரடியாக சேதப்படுத்தகூடிய அடிப்படை காரணமாகும்..
அதைவிட முக்கியமாக, உணவில் அதிக அளவில் சர்க்கரை கொண்டவர்கள், தங்களது உணவில் குறைந்த அளவு சர்க்கரை கொண்டவர்களை காட்டிலும், இதய நோய்களால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. அதனால், இதயத்துக்கும் சர்க்கரைக்கும் நேரடி தொடர்பு உள்ளதால், சர்க்கரையை குறைத்து, இதயத்தை காக்க வேண்டி உள்ளது.

பழக்கம்தான் காரணம்: இதற்கு முக்கியமான காரணம், சர்க்கரையில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்ற ரசாயனம்தான், மஞ்சள் கலராக மாறி, விஷமாக மாறிவிடுகிறது. அதுவும் இல்லாமல் இந்த சர்க்கரையில் எந்தவித கலோரிகளும் இருப்பதில்லை.. அதனால், சர்க்கரையை தவிர்க்க சொல்கிறார்கள்.. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், நாளடைவில் இது பழகிவிடும்..
ஜஸ்ட் ஒரு மாத காலம், சர்க்கரை இல்லாமல் பழகிகொண்டால், அதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா? கலோரியின் அளவு வெகுவாக குறைய துவங்கும்.. உடல் எடை குறைய துவங்கும்.. கொழுப்புகள் கரைய துவங்கும்..
கசப்பு + துவர்ப்பு: பற்களும் வலுவாகும்.. உடலில் ஆற்றலின் அளவு அதிகரிக்கும்.. கல்லீரல் பாதுகாக்கப்படும்.. சரும ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.. இதனால் முதுமை சுருக்கம் தள்ளிப்போடப்படும். தித்திப்பு சுவையில் எந்த ஒரு பலனும் இல்லாத நிலையில் கசப்பு, துவர்ப்பு சுவையில் எல்லா பலன்களும் நிறைந்துள்ளதையும், இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications