Sugarcane: கரும்பு சாப்பிட்டால் உடல் நச்சுகள் வெளியேறும்! யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
சென்னை: கரும்பில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கரும்பில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து காய்கறிகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் என்ற சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: தை மாதத்தில் அதிகமாக கிடைக்கும் கரும்பில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.

இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம்,
வைட்டமின் ஏ, பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் சி ஆகிய சத்துகள் கரும்பில் உள்ளன. எனவே கரும்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிகச் சிறந்த உணவாக பயன்படுகிறது.
கரும்பில் உள்ள அன்டிஆக்ஸடன்ட் குணங்கள் புற்றுநோய் செல்களுக்கு சிறந்த எதிர்ப்பு பொருளாக பயன்படுகிறது. கரும்புச்சாறு அடிக்கடி அருந்துபவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் மற்றும் சிறுநீரக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
கரும்புச் சாற்றை அருந்தி வரும்பொழுது உடலில் ஏற்படும் டி என் ஏ சேதத்தை தடுத்து உடல் உறுப்புகளை வலுப்படுத்துகிறது. சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்புச் சாற்றினை அடிக்கடி அருந்துவது நல்லது. இது சிறுநீரகங்களை சிறப்பாக செயல்பட உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது.
சிறுநீர் பாதை தொற்று மற்றும் எரிச்சலை சரி செய்யக் கூடியது. உடல் வறட்சி உள்ளவர்கள் அடிக்கடி கரும்புச் சாறு அருந்துவது சிறந்தது. இதில் உள்ள அதிக நீர்ச்சத்தும், மருத்துவ பண்புகளும் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து அளித்து உடல் வறட்சியை தடுக்கிறது.
கரும்பில் மஞ்சள் காமாலையை எதிர்த்துப் போராடும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளதால், கரும்பு சாற்றில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தி வந்தால், கல்லீரல் மற்றும் பித்தப்பையின் ஆரோக்கியத்தை அதிகரித்து, மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பை குறைக்கிறது.
கரும்பு செரிமான பிரச்சனைகளை சரி செய்யக்கூடியது. கரும்பு சாப்பிடுவதன் மூலமாக நாம் சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிமானம் அடைய உதவுகின்றது. பசியைத் தூண்டி, வயிறு மற்றும் குடல் போன்ற செரிமான உறுப்புகளை பலப்படுத்துகிறது.
கரும்பில் செங்கரும்பு மற்றும் வெண் கரும்பு என்ற இரு வகைகள் உள்ளன. வெண் கரும்பில் உள்ள பண்புகள் இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக கலக்கும் தன்மை கொண்டுள்ளதால், சர்க்கரை சத்து உள்ளவர்கள் இதனை அளவுடன் சாப்பிட்டு வருவது நல்லது.
கரும்பை கடித்து சாப்பிடும் பொழுது, பற்கள் மற்றும் வாய் பகுதியில் உள்ள கிருமிகள் அழிந்து பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது. கரும்பில் உள்ள இயற்கையான வேதிப்பொருள், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் பண்பு கொண்டது.
உடற்பருமன் உள்ளவர்களுக்கு கரும்பும் அதன் சாறும் சிறந்த உணவாக பயன்படுகிறது. உடலில் உள்ள அதிக அளவு பித்தத்தை சீராக்கி, சமநிலைப்படுத்துகிறது. உடல் சூட்டைக் குறைத்து, உடலின் தட்பவெப்ப நிலையை சீராக்குகிறது. இத்தனை நன்மைகளை அளிக்கக் கூடிய கரும்பு மற்றும் அதன் சாற்றை அனைவரும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும்.
நமது உடலில் அதிக பலம் தசை பகுதிகளில் உள்ளது. தசை பகுதி வலுவுடன் இருக்க குளுக்கோஸ் சத்து சமநிலையில் இருக்க வேண்டும். தினமும் கரும்புச் சாறு அருந்துவதால் உடலிற்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்கிறது.
நாம் தினசரி சாப்பிடுகின்ற உணவிலும், சுவாசிக்க கூடிய காற்றினிலும், அருந்தக்கூடிய நீரிலும் மாசு கலந்து இருக்கிறது. கரும்பானது உடலில் உள்ள நச்சுக்களையும் மாசுகளையும் நீக்க உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
கரும்பு சாப்பிடுவதனால் உடலில் உள்ள தேவைற்ற நச்சுகள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications