தேங்காய் பாறை மீனின் அற்புதம்.. பெண்களுக்கு வரப்பிரசாதம்.. பாறை மீன் வாங்கினால் இப்படி செய்யுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாறை மீன்கள் என்றாலே ருசியானவை என்றாலும், தேங்காய்ப்பாறை மீனை பலரும் வாங்க என்ன காரணம் தெரியுமா? தேங்காய் பாறை மீனிலுள்ள நன்மைகள் என்னென்ன?

பாறை மீன்கள் பொதுவாக, பாறைகளிலேயே மறைந்து கொள்ளுமாம்.. பாறை என்பது பொதுவான பெயராகும். அதில் ஒன்றுதான் தேங்காய் பாறை மீன்கள். இந்த தேங்காய் பாறையில் குழம்பு வைத்தாலும், வறுவல் செய்தாலும், இரண்டுமே சுவையாக இருக்கும்.

Health Benefits of Thengai Paarai Fish and Excellent Medicine in the Paarai Fish

நன்மைகள்: அதனால்தான், தென்மாநிலங்களில் பாறை மீனுக்கென்று ஸ்பெஷல் இடம் உண்டு. இதன் விலையும் மிகவும் குறைவு.. தட்டுப்பாடின்றி கிடைக்கக்கூடிய மீனில் இதுவும் ஒன்றாகும். தேங்காய் பாறையின் நன்மைகள் என்னவென்றால், இதில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன.. அதனால், உடல் எடை குறைய நினைப்பவர்கள், இந்த பாறை மீனை சமையலில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்..

அத்துடன், கலோரிகளும் இதில் குறைவாக உள்ளன. இந்த பாறை மீன்களில் இருந்துதான், கால்சியம் மாத்திரைகள் தயாராகின்றன.. வைட்டமின் A, D, B 12 இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..

அதாவது, 100 கிராம் பாறை மீனில், புரோட்டீன் 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9, நீர்ச் சத்து 66.70 கிராமும் இருக்கிறதாம்.. வைட்டமின் A உள்ளதால், கண்களுக்கு மிகவும் நல்லது. வாரம் 2 நாள் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளே வராதாம்.

கெட்ட கொழுப்புகள்: உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைவதால், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும். அத்துடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால், இதய நோய் ஏற்படும் வாய்ப்பு தடுத்து நிறுத்தப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த மீனை தாராளமாக சாப்பிடலாம்,

செட்டிநாடு ஸ்டைலில், இந்த தேங்காய் பாறை மீனை குழம்பு வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.. ஒரு வாணலில், எண்ணெய் விட்டு வெங்காயம், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு, பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்க வேண்டும். இதிலேயே சிறிது தேங்காய், புளிளையும் சேர்த்து வதக்கி எடுத்து ஆற வைத்து, பிறகு மொத்தத்தையும் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

செட்டிநாடு குழம்பு: ஒரு வாணலில் எண்ணெய், கடுகு, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், மீன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து, கறிவேப்பிலை, மல்லி சேர்த்து இறக்கினால் செட்டிநாடு குழம்பு ரெடி.

மண் சட்டியில், தேங்காய் ஊற்றாமலும் இந்த பாறையை குழம்பு வைக்கலாம்.. மண்சட்டியில் எண்ணெய், வெந்தயம், சோம்பு சேர்த்து பொரிந்ததும், கருவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். சிறிது பூண்டு பற்கள் சேர்த்து, கனிந்த தக்காளி பழத்தையும் பிழிந்து போட்டு வதக்க வேண்டும்.

மண்பானை : இப்போது புளி கரைசலில் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிது மீன்குழம்பு மசாலா என அனைத்தையும் சேர்த்து கரைத்து, வாணலில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, தேங்காய் பாறை மீனை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியை தூவினால், ருசியான மண்பானை மீன் குழம்பு ரெடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+