கோயம்புத்தூரை சுற்றி வளைத்த போலீசார்! அதிகாலை 4 மணிக்கு களத்தில் இறங்கிய காவல்துறை! பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க இன்று அதிகாலை 4 மணியளவில் கோயம்புத்தூர் முழுவதும் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இதில் ஏராளமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

கல்லூரி விடுதிகள், PG ஹாஸ்டல்கள், லாட்ஜ்களில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். ரெய்டு குறித்தும், அதில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்தும் இன்று மாலை போலீசார் விரிவான அறிக்கையை அளிக்கின்றனர்.

Coimbatore

என்ன நடந்தது?

போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்பது முதலமைச்சர் விஜய்யின் குறிக்கோளாக இருக்கிறது. எனவே போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது கோவையில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார், இன்று அதிகாலை 4 மணிக்கு ரெய்டில் இறங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு உட்பட்ட காவல் நிலைய எல்லையில் உள்ள பகுதிகளில் இந்த ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

குறிப்பாக தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இந்த ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்கள், வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.

பேருந்து மற்றும் ரயில் மூலம் போதைப்பொருட்கள் உள்ளே வருவதும், அதை குறிப்பிட்ட இடத்தில் வைத்து பிரித்து சப்ளை செய்வதும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்துதான் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. ரெய்டில் கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் மெத்தப்பெட்டமைன், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இதில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் எவ்வளவு? கைது செய்யப்பட்டவர்கள் எத்தனைப்பேர்? போன்ற விவரங்களை மாலை 4 மணிக்கு காவல்துறையினர் தெரிவிக்க இருக்கின்றனர். இந்த திடீர் ரெய்டு காரணமாக கோயம்புத்தூரில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+