மோசமான ரத்த மூலத்தையும் குணமாக்கும் துத்திக்கீரை.. உடல் உஷ்ணத்தை துரத்தியடிக்கும் துத்தி இலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எலும்பு பிரச்சனை முதல் மூலநோய் வரை தீர்க்கக்கூடிய துத்திக்கீரையின் ஆச்சரியம் தெரியுமா? இந்த துத்தி இலைகளை எப்படி உணவிலை சேர்த்து கொள்ள வேண்டும்? துத்திக்கீரை தரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன? சுருக்கமாக பார்க்கலாம்.

சமையலில் அவ்வளவாக பயன்படுத்தப்படும் துத்திக்கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.. குளிர்ச்சியை தரக்கூடிய கீரை என்பதால்தான், மூலநோயையே விரட்டக்கூடியதாக உள்ளது.

thuthi keerai piles thuthi leaves

துத்திக்கீரை: துத்திக்கீரையை மற்ற கீரைகளை போலவே சமைக்கலாம். இந்த இலையில் ரசம் வைத்து குடித்தால் சிறுநீரக நோய்களும், கல்லீரல் நோய்களும் நெருங்காது. பாசிபருப்பு, சின்னவெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து கூட்டுபோல செய்து சாப்பிட்டால், ருசியாக இருக்கும்.. குளிர்ச்சியை தரக்கூடிய கீரை என்பதால், உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை இந்த கீரை தீர்க்கிறது.

வெறுமனே இந்த துத்தியிலைகளை சுத்தம் செய்து, அரைத்து வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வருவதால் மூலநோய் குணமாகும்.. சிறுநீர் எரிச்சல், வாய்ப்புண், குடல், உடலில் கட்டிகள், புண்கள், ஆசனவாய் புண்கள், வலிகள், எரிச்சல்கள் என ஒட்டுமொத்த உஷ்ணக் கோளாறுகளுக்கும் இந்த துத்திக்கீரைகள் மருந்தாகின்றன.

கட்டிகள்: கட்டிகள் உடம்பில் இருந்தால், அரிசி மாவுடன் துத்தியிலையின் சாற்றை கலந்து கட்டினால் தீர்வு கிடைக்கும். உடலில் சூடு அதிகமாக இருந்தால், பசும்பாலுடன் துத்திக்கீரையின் பொடியை கலந்து சாப்பிடலாம்.

எலும்பு முறிந்தாலும்கூட, அந்த இடத்தில் இந்த இலையை அரைத்து பூசி, ஒரு துணியால் கட்டிவிட்டு, அசையாமல் வைத்திருக்க வேண்டும். இதனால், முறிந்த எலும்புகள் விரைவாக கூடிவிடும்.

ஆண்மை குறைபாடு: ஆண்மை குறைபாட்டினை போக்கும் சக்தி இந்த துத்திக்கீரைக்கும், துத்திப்பூக்களுக்கும் உண்டு. தாது விருத்தி பெருக, துத்திப் பூவை ஒரு கைப்பிடி எடுத்து, பசும்பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, பனங்கற்கண்டு கலந்து குடிக்கலாம். அல்லது துத்தி இலையின் சாறு எடுத்து, பசுமோருடன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். துத்தியின் இலை, பூ, காய், வேர் போன்றவற்றை பறித்து சுத்தம் செய்து, கஷாயம் போல வைத்து குடித்தாலும் ஆண்மை கோளாறுகள் நீங்கும்.

கர்ப்பப்பை பிரச்சனைகளை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்யக்கூடியவை இந்த துத்தி இலைகள்.. மாதவிலக்கின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால், அல்லது வெள்ளைப்படுதல் தொந்தரவு இருந்தால், இந்த கீரையை கடைந்து நெய் விட்டு சாப்பிட்டால் போதும். அல்லது பாசிப்பருப்புடன் வேகவைத்து நெய் சேர்த்து வதக்கி 48 நாட்கள் சாப்பிடலாம்.

மாதவிடாய் கோளாறு: அதேபோல, மாதவிடாயின்போது வயிறு அதிகமாக இருந்தால், ஒரு கைப்பிடி துத்திக்கீரையை சுத்தம் செய்து, கழுவி நீர்விட்டு அரைத்து, சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சாற்றில் வசம்புவை சுட்டு அந்த கரியை சிறிது சேர்த்து வெறும் வயிற்றில் 3 நாள் குடித்தால் பலன் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+