வசம்பு வாசம்.. நோய்களை துவம்சம் செய்யும் வசம்பு பவுடர்.. மூலிகை வசம்புவை இப்படியும் பயன்படுத்தலாம்
சென்னை: குழந்தைகளுக்கு வசம்பு ஏன் தரப்படுகிறது தெரியுமா? வசம்புவுடன் என்னென்ன பொருட்களை சேர்த்து சாப்பிட்டால், என்னென்ன உடல்நல பாதிப்புகள் குணமாகும் தெரியுமா? இயற்கை மூலிகையான வசம்புவை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..!!!
வசம்பு என்றாலே அது குழந்தைகளுக்கான மருந்து என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், பெரியவர்களுக்கும் மருந்தாகி பலவித உடல்நலகோளாறுகளை இந்த வசம்பு குணப்படுத்துகிறது.

அஜீரணம்: குழந்தைகளுக்கு அஜீரணம், மந்தம் இருந்தால், நம்முடைய முன்னோர்கள் இந்த வசம்புவைதான் மருந்தாக தருவார்கள்.. இப்படி வயிற்றுக்கு மருந்தாக தரும்போது, அரை மணி நேரத்துக்கு குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டாம் என்பார்கள்..
அதேபோல, குழந்தைகள் தூங்கும் அறையில் பூச்சிகள் இருந்தால், அந்த அறையை சுற்றிலும், வசம்பு பொடியையும் ஆங்காங்கே தூவி வைத்துவிடுவார்கள்.. இதனால் பூச்சிகள் முதல் நுண்ணுயிரிகள் நுழைவது தடுக்கப்படும். குழந்தைகளை குளிக்க வைக்கும்போதுகூட, அந்த தண்ணீரில் வசம்பு பொடியை கலந்து பயன்படுத்துவார்கள்.
தோல் நோய்கள்: கைக்குழந்தைகளின் கைகளில் தாயம் போல இந்த வசம்பினை திருஷ்டி கயிறாக கட்டிவிடுவார்கள்.. இதனால், தோல் நோய்த்தொற்றுகள், ஒவ்வாமை, சரும தடிப்புகள் குழந்தைகளுக்கு வராது. பூச்சிகளும் குழந்தைகளை நெருங்காது.
அதேபோல, வசம்பை தீயில் கரி போல சுட்டு, அந்த எரிந்த வசம்பை தண்ணீரில் தேய்த்து, அந்த விழுதினை குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டாக, கண் மை போல வைப்பார்கள். குழந்தைகளின் கன்னம், உள்ளங்கை, உள்ளங்கால்களிலும் இதனை பொட்டு போல வைத்தால் தொற்றுகள் நெருங்காமல் இருக்கும். அதனால்தான், வசம்புவிற்கு, பிள்ளை மருந்து, பிள்ளை வளர்த்தி என்றெல்லாம் பெயர்கள் உள்ளன. சில குழந்தைகள் உரிய பருவம் வந்தும், சரிவர பேச்சு வராமல் இருந்தால், வசம்புவை குழைத்து நாக்கில் தடவினால் தீர்வு கிடைக்கும்.
வலிப்பு நோய்: அதேபோல குழந்தைகளுக்கு இடுப்பில் இந்த வசம்புவை கட்டுவார்கள்.. இப்படி உடலில் வசம்புவை கட்டிவிடுவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய் தடுக்கப்பட்டுவிடுமாம். குழந்தைகளின் சரியான மூளை வளர்ச்சிக்கும், பார்வை திறனுக்கும், இந்த வசம்பு உதவுகிறது. எனினும், சிறு குழந்தைகளுக்கு மருந்தாக கொடுக்கும்முன்பு, அதற்கான அளவு என்ன என்பதை டாக்டர்களிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
பெரியவர்களுக்கும் வசம்பு மருந்தாகிறது.. விஷம் குடித்துவிட்டவர்களை, உயிர்காக்க இந்த வசம்பு உதவுகிறது.. 3 ஸ்பூன் அளவுக்கு வசம்பு தந்தால், குடலிலுள்ள விஷம் வெளியே வந்து விடுமாம்... கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் இந்த வசம்பு பயன்படுத்தப்படுகிறதாம்.
வாயு பிடிப்பு: வாயு பிடிப்பு, வாயு தொந்தரவால் அவதிப்படுபவர்கள், ஒரு பாத்திரத்தில் வசம்பு பொடி, கடுக்காய் பொடி, சுக்குப்பொடி, மிளகுப்பொடி, திப்பிலி பொடி, பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து குடித்தால், வாயு தொந்தரவு நீங்குவதுடன், சளி, இருமல், தலைபாரமும் குறையும். வயிற்று வீக்கம், வயிற்று போக்கும் நீங்கும்.
கால்நடைகள்: வசம்பு பவுடர் 2 ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வரும்போது, எந்த தொற்று நோய்களும் அண்டாது.. மனிதர்களை போலவே, கால்நடைகளுக்கும் இந்த வசம்பு பவுடரை பயன்படுத்தலாம். அதேபோல கால்களில் ஆணி இருந்தால், சிறிது மஞ்சளுடன், வசம்பு, கற்பூரம், மருதாணி இலைகள், நெல்லிக்காய் இலைகள் போன்றவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து அரைத்து, கால் ஆணி மீது இரவில் கட்டி வர வேண்டும். 3 நாட்கள் இப்படி செய்தால், கால் ஆணி உதிர்ந்துவிடும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications