வெட்டிவேரின் வாசம், வீடு முழுக்க வீசும்.. ஸ்கின் கேன்சரை தடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த வெட்டிவேர்கள்
சென்னை: வெட்டி வேர்களை, வெற்றி வேர்கள் என்றே சொல்லலாம்.. உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்லாமல், சருமத்துக்கும் சேர்த்து பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் இந்த வெட்டி வேர்கள் தருகின்றன.
வெட்டி வேர்கள் மருத்துவ குணம் நிறைந்தவை.. முக்கியமாக, இரும்பு, மாங்கனீசு, B6 வைட்டமின், அடங்கியிருக்கின்றன.. இத்தனை சத்துக்கள் இருந்தாலும், வெட்டிவேரின் ஸ்பெஷாலிட்டியே அதிலுள்ள துத்தநாகம்தான்.. நம்முடைய உடலில் 300 க்கும் அதிகமான என்சைம்களின் செயல்பாட்டிற்கு காரணமானதுதான் இந்த துத்தநாகம்

இந்த சத்துக்கள் அத்தனையும், உடலிலுள்ள செல் பிரிவு, செல் வளர்ச்சி, காயங்களை விரைந்து ஆற்றுவதற்கு உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த இந்த வெட்டி வேர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.. திசுக்களை சேதாரமின்றி பாதுகாக்ககூடிய தன்மை இந்த வேர்களுக்கு நிறையவே உண்டு.
மண்பானை நீர்: வெட்டிவேர்கள் குளிர்ச்சி நிறைந்தவை என்பதால், கோடை காலத்தில்தான் இதன் பயன்பாடு அதிகமாக தேவைப்படுகிறது.. வெட்டிவேர்களை சுத்தம் செய்து, மண்பானை நீரில் போட்டுவைத்துவிட வேண்டும். இந்த தண்ணீரை வெயில் காலத்தில் குடித்து வந்தால், உடல் சோர்வு, உடல் சூடு உள்ளிட்ட உஷ்ண கோளாறுகள் நீங்கிவிடும்.
நீர்க்கடுப்பு, காய்ச்சல், சோர்வு என உஷ்ண பிரச்சனைகளை வெட்டி வேர்கள் தீர்க்கின்றன. அதிலும் ரத்தம் அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த தண்ணீரை குடித்து வரவேண்டும்.
அடிவயிறு வலி: உடலில் சூடு அதிகமாகிவிட்டதால், சிறுநீர் குறைவது, சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படும். இந்த சிக்கல் இருந்தால், வெட்டி வேர் பொடி என்று கடைகளில் விற்கப்படுகிறது. இந்த பொடியை சுப்பிட்டு வந்தாலே உடலில் சூடு குறைந்துவிடும்.. அடிவயிறு வலி என்றாலும், இந்த பொடியையும், கருஞ்சீரக பொடியையும், அரை கிளாஸ் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.
உடம்பில் எங்கு வலி இருந்தாலும், வெட்டி வேர் எண்ணெய்யை பூசலாம். அதாவது, வெட்டிவேர்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அப்படியே 2 நாட்களுக்கு விட்டுவிட வேண்டும். 3வது நாள் இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து கொண்டால், எப்போது உடலில் வலி, அரிப்பு, தொந்தரவு இருந்தாலும், அங்கு பூசிவரலாம். மூட்டுவலி, முழங்கால் வலி, வீக்கங்கள் போன்றவற்றுக்கு தடவி வரலாம்.. கால் எரிச்சல், கால் வலி இருந்தாலும், அதற்கும் வெட்டிவேர்கள் மருந்தாகின்றன.
வெட்டிவேர் எண்ணெய்: பொதுவாக வெட்டிவேர் கலந்த எண்ணெய்யை, சருமத்துக்கு தடவி வருவது பாதுகாப்பானது. முகப்பரு, முகத்தில் சிறு சிறு கொப்புளங்கள் இருந்தாலும், தோலில் நச்சுக்கள் இருந்தாலும் இந்த எண்ணெய் போக்கிவிடும். தோலின் சில வகையான தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க, வெட்டிவேர் எண்ணெய் இன்றுவரை மருத்துவத்தில் உதவி கொண்டிருக்கிறது.
ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த வெட்டிவேர்கள், முகப்பருவுக்கு சிகிச்சை தர உதவுகிறது. குறிப்பாக தோல் புற்றுநோயை அண்டவிடாமல் தடுக்கும் சக்தி இந்த வெட்டி வேர்களுக்கு உண்டு. வெட்டி வேர்களை குளிக்கும் சுடுநீரில் கலந்து குளித்து வரும்போது, தோல் அரிப்பு, உடலில் துர்நாற்றம் போன்றவை நீங்கி உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். அதிக வியர்வை, அரிப்பு தொந்தரவு இருந்தாலும், வெட்டிவேர்களை நீரில் ஊறவைத்து, அரைத்து குளித்து வரலாம்..
நிம்மதியான தூக்கம்: தூக்கம் சரியாக வராவிட்டால், தலையணைக்கு அடியில் சிறிது வெட்டி வேர்களை வைத்துவிட்டால் போதும், நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.. சிறிது வெட்டி வேர்களை வீட்டில் ஆங்காங்கே வைப்பது வீட்டில் நல்ல மணத்தை தருவதுடன், மன அழுத்தத்தை போக்கி மனதுக்கு அமைதியை தரும்.












Click it and Unblock the Notifications