புருஷன் ஜெயில்ல.. "விந்தணுக்களை" திருடி.. ஆமா, அதென்ன பாட்டிலில்? கர்ப்பமாகும் மனைவிகள்.. ஒரே பகீர்
டெல் அவிவ்: விந்தணுக்களை திருடி, குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் போக்கு இஸ்ரேல் நாட்டில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.. இதுகுறித்த செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டும் வருகின்றன.
கடந்த வருடம் ஒரு அசாத்திய திறமையை இஸ்ரேல் செய்திருந்தது.. அதாவது, விந்தணு, கருமுட்டை இல்லாமலேயே உலகின் முதல் செயற்கை கரு உருவாக்கப்பட்டது..
இதில் ஆன்மாவின் இதயமும் துடிக்க, மூளையும் முழு வடிவம் பெற்றிருக்கிறது.. இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கரு முட்டைகளோ, விந்தணுகளோ இல்லாமல் இந்த செயற்கை கருவை உருவாக்கி காட்டியிருந்தார்கள்..

கருமுட்டைகள்: அதாவது, குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு இன்-விட்ரோ கருத்தரித்தல், அதாவது IVF நம்பிக்கையாக இருந்து வரும்நிலையில், இன்னும் ஒரு படி மேலே போய், கருவை தயாரிக்க விந்தணுவோ கரு முட்டையோ கூட தேவையில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.. கருமுட்டை மற்றும் கருப்பை இல்லாத ஒரு கருவை உருவாக்குவது அறிவியல் உலகிற்கு ஒரு மைல்கல்லாகவும் கருதப்படுகிறது. இஸ்ரேலின் இந்த சாதனையை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்த்தன.
ஆனால், இதே இஸ்ரேலில் இன்னொரு சம்பவம் நடந்து அதிர்ச்சியை தற்போது கிளப்பி வருகிறது. பாலஸ்தீனிய கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கைதிகளின் மனைவிகள் தங்களது கணவனின் விந்தணுக்களை திருடுகிறார்களாம்.. அந்த விந்தணுக்களை மறைமுகமாக பெற்று அதன் மூலமாக கருவுறும் நிகழ்வுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறைக்கைதிகள்: இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியில் ரேமன் சிறை உள்ளது... இதில், பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.. இங்குள்ள பாலஸ்தீனியர் ஒருவர், ஜெயிலில் உள்ள இன்னொரு பாலஸ்தீனிய கைதியின் விந்தணுக்களை பாட்டில் ஒன்றில் வைத்து கடத்தி சென்றிருப்பதாக தெரிகிறது.. ரேமன் சிறைக்கு வெளியே உள்ள சீர்திருத்த இல்லத்தில், அந்த பாலஸ்தீனியர் தங்கியிருக்கிறார்..
இதுபற்றிய தகவல் தெரிந்ததுமே, இஸ்ரேலிய போலீசார், அந்த நபரை பிடித்து, விசாரித்திருக்கிறார்கள்.. அப்போதுதான் விஷயம் புரிந்துள்ளது.. விந்தணுக்களை வழங்கிய, சிறையில் உள்ள இன்னொரு பாலஸ்தீனிய கைதியையும் அடையாளம் கண்டு, அவரையும் தனிமைப்படுத்தி உள்ளனர். பாலஸ்தீனிய சிறை கைதிகளின் விந்தணுக்களை வெளியே கடத்தி சென்று, குழந்தைகள் பிறப்பது என்பது பாலஸ்தீனிய நாட்டில் பரபரப்பான சம்பவமாக மாறி வருகிறது..
என்ன காரணம்: இஸ்ரேலிய ஜெயிலில் இருந்து விந்தணுக்கள் கடத்தி கொண்டு வரப்பட்டு, இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வரை கைதிகளுக்கு பிறந்திருக்கிறதாம்.. ஐவிஎப் என்ற சிகிச்சை முறையில், இந்த விந்தணுக்களை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட கைதிகளின் மனைவிகள் கர்ப்பமடைகிறார்கள். இதற்காக ரூ.8.2 லட்சம் செலவாகும்... சில சமயங்களில் இதைவிடஅதிக பணமும் செலவாகும்.. ஆனால், பாலஸ்தீன நாட்டில் இந்த சிகிச்சைகளை அளிக்க நிறைய கிளினிக்குகள் உள்ளன.

ஒரு கைதி நீண்டகாலம் ஜெயிலில் அடைப்படும்போது, இந்த நடைமுறையை கிளினிக்குகளே பின்பற்றுகின்றன... பாலஸ்தீன மதகுருக்களின் அனுமதியுடன் இது நடப்பதாக சொல்கிறார்கள்.. இருந்தாலும், இந்த குழந்தைகள் சட்டவிரோதம் ஆனவை என்று இஸ்ரேலிய அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது.
காரணம், ஜெயிலிலிருந்து கிளினிக்குக்கு கொண்டு செல்லும் வரை அந்த விந்தணுக்கள் உயிர் பிழைக்க முடியாது... அதற்கான சிறப்பான சூழல் இருக்க வேண்டும்... அதனால், இந்த குழந்தைகள் எல்லாம் மற்றொரு தந்தையால் உருவாக்கப்படுபவை என்கிறார்கள்.. இதனாலேயே இதனை தடுக்க அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சட்டவிரோதம்: இதுபோன்று பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் அரசால் சட்ட விரோதமானவை என அறிவிக்கப்பட்டாலும், இஸ்ரேலில் உள்ள சிறைகளில் இருந்து விந்தணு கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. கடந்த 2012-ம் ஆண்டுதான், இந்த முறையில், முதன்முறையாக பாலஸ்தீனிய குழந்தை பிறந்ததாம்.












Click it and Unblock the Notifications