மீனில் "பெஸ்ட்" இதுதான்.. பார்க்க ஒருமாதிரியா இருக்கே.. கும்மிருட்டில் குபீர்னு வெளிச்சம்.. வாவ் மீன்
சென்னை: பெண்களுக்கு அருமருந்து என்று ஒரு மீன் உண்டென்றால், அது திருக்கை மீன்தான்.. இதிலுள்ள மருத்துவம் தெரிந்தால், இந்த மீனை விட மாட்டீங்க.
பொதுவாகவே மீன்கள் என்றாலே நல்லதுதான்.. சத்துக்கள் அந்த மீனை சாப்பிட்டால், உடம்பை முறுக்கி பிழிந்து, கெட்ட நீர், கசடுகளை எல்லாம் வெளியேற்றக்கூடியது.. உடம்பையே திருகி கெட்ட கழிவுகளை வெளியேற்றுவதால்தான், திருக்கை மீன் என்று சொல்வார்களாம்.

வித்தியாச தோற்றம்: இது ஒரு வித்தியாசமான மீன்.. உருவ அமைப்பே, மற்ற மீன்களிலிருந்து வேறு மாதிரியாக இருக்கும்.. தட்டையான உடலமைப்புடன் காணப்படும். இதன் மேல்புறத்திலேயே 2 கண்கள் இருக்கும்.. இதன் பற்கள் கூர்மையான ரம்பம்போல இருக்கும்.. வாலின் முன்பகுதியில் 2 கொடுக்குகள் இருக்கும்.. இந்த கொடுக்குகள்தான், திருக்கையின் ஆயுதம் ஆகும்.. இதை வைத்துதான் எதிரிகளை வேட்டையாடும்.
திருக்கையின் வால், அதன் உடலைவிட நீளமாக இருக்கும்... அந்த வாலில், கூர்மையான நுண்ணிய முட்கள் ஏராளமாக இருக்கும். இந்த மீன், தன்னுடைய கண்களை மட்டும் வெளியில் தெரியும் படி ஒளிந்து கொள்ளும்..
வெளிச்ச அதிர்வு: கடலுக்கு அடியில் கும்மிருட்டில்கூட இந்த மீன்கள் வாழும்.. அப்போது, திடீரென ஒருவித ஒளியை உமிழ்ந்து மின்சார அதிர்வை ஏற்படுத்தி வெளிச்சத்தை உண்டுபண்ணி விடும்.. இந்த திடீர் வெளிச்சத்தை பார்த்து, எதிரி மீன்கள் பயந்து தெறித்து ஓடிவிடுமாம். அந்த காலத்தில் கிரேக்கர்கள் இந்த மீன்களை பிடித்து, அதன் அதிர்வலைகளை பயன்படுத்தி தலைவலிக்கு வைத்தியம் பார்த்து கொண்டதாக வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளதாம்.

இந்த திருக்கையில் 500 -க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறதாம். ஆனால், வவ்வால், புள்ளி, முள்ளம் திருக்கை போன்ற வகை திருக்கைகளை பிடிக்க மட்டும் அரசு தடை விதித்துள்ளது..
ரத்த அழுத்தம்: இந்த முட்களை நீக்கிவிட்டு, உணவுக்காக மீனை பயன்படுத்துவார்கள்.. ஆனால், இந்த முட்களிலிருந்துதான், நிறைய மருந்து பொருட்கள் எடுக்கப்படுகின்றன.. குறிப்பாக, ரத்தம் உறைதலை தடுக்கவும், கேன்சர் செல்களை அழிக்கும் மருந்தாகவும் இந்த திருக்கைகள் பயன்படுகின்றன.. திருக்கை மீனில் ஒமேகா-3 சத்து அதிக அளவில் உள்ளது. எனவே, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் சக்தி இந்த மீனுக்கு உள்ளது.
தலைசுற்றல், பித்தம், வாந்தி, போன்றவை இருந்தாலோ அல்லது ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றாலோ, கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டும் என்றாலோ, இந்த திருக்கையில் நிறைய பூண்டு சேர்த்து குழம்பு செய்வார்கள். இதனால் ரத்த விருத்தியும் அதிகரிக்கும்,, தலைமுடி உதிர்வும்சரியாகும்.
தாய்ப்பால்: திருக்கை என்றாலே, அது தாய்மார்களின் உணவு என்பார்கள்.. பாலூட்டும் தாய்மார்கள், இந்த மீனை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரக்கும்.. ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகள் மிக குறைவாகவும், மிக ஆரோக்கியமான நல்ல கொழுப்பு ஒமேகா 3 அதிகமாகவும் இந்த மீனில் உள்ளதால், மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு, வயதாகும்போது பார்வைத்திறனும் மேம்படும்..
திருக்கை மீனில் வைட்டமின் D,E,B1,B2,B6,B12 மற்றும் வைட்டமின் C சத்துக்கள் உள்ளன., இந்த மீனை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன், மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இந்த மீனில் உள்ள கால்சியம், நம்முடைய எலும்புகளை பாதுகாக்கிறது.. மேலும், இதயநோய், ஆஸ்துமா, புற்றுநோய், நீரிழிவு போன்ற அபாயத்தையும் குறைக்கிறது.

ஆவியில் மீன்: திருக்கையின் சதையானது, மற்ற மீன்களின் சதையைவிட சற்று கடினமாக இருக்கும். அதனால், இந்த மீன் வெந்துவர நேரம் பிடிக்கும்.. சிலர், இந்த மீனை சுத்தம் செய்து, குக்கரில் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொண்டு, அதற்கு பிறகுதான் விருப்பமானதை சமைப்பார்கள்..
இதன் துடுப்புகளில் இருக்கும் மெல்லிய தண்டுகளுடன் கூடிய சதையை குழம்பு வைப்பார்கள்.. சிலர் அந்த சதையை வேகவைத்து, உதிர்த்து, புட்டு போல செய்வார்கள். ஆனால் எப்படி சமைத்தாலும், இந்த மீன் சாப்பிடுவதற்கு அப்படியே, சிக்கன் போலவே இருக்குமாம்.












Click it and Unblock the Notifications