"செருப்பு" போட்டுக்கிட்டு வீட்டுக்குள் வரலாமா? வீட்டிலே செருப்பு காலுடன் நடப்பவரா நீங்க.. இதை படிங்க
சென்னை: செருப்பை போட்டுக்கொண்டு நாம் வீட்டுக்குள் வரலாமா? அல்லது வீட்டுக்குள்ளேயே செருப்பை உபயோகிக்கலாமா? என்ற சந்தேகம் நிலவி கொண்டேயிருக்கிறது.. இதற்கு பதில் என்ன?
முன்பெல்லாம் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினால், வாசலில் கை, கால்களை நன்றாக கழுவிவிட்டுதான் வீட்டுக்குள் நுழைவார்கள்.. ஆனால், இந்த பழக்கமெல்லாம் இப்போது மங்கி போய்விட்டது..
வாஸ்து சாஸ்திரம்: செருப்பை கழட்டி வாசலில், எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதுகூட, வாஸ்து சாஸ்திரத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.. அதாவது, பொருளாதார பிரச்சனை, குடும்ப பிரச்சனை, நிம்மதியின்மை இவைகள் ஏற்படுகிறதென்றால், இதற்கு செருப்பு வைக்கும் திசையும் ஒரு காரணியாக இருக்கும் என்கிறார்கள்..

அதாவது, நாம் வெளியில் சென்று விட்டு திரும்பும்போது கழற்றி வைக்கும் செருப்பு, நேராக மட்டுமே இருக்க வேண்டுமாம்.. தலைகீழாக இருக்க கூடாதாம்..
செருப்புகள்: செருப்புகளை வாசலில் நேராக அடுக்கி வைக்க வேண்டுமே தவிர, கலைத்தோ சிதறியோ கிடக்கும்படி வைக்கக் கூடாது... செருப்புக்கும், சனிக்கும் தொடர்பு உண்டு என்பதால், இந்த தவறை செய்யக்கூடாது.. சரியாக அடுக்காவிட்டால் வீட்டில் பிரச்சனைதான். முக்கியமாக, மேற்கில் செருப்பை அடுக்கி வைத்து கொள்ளவேண்டும்.. பயன்படாத செருப்பை, உடனடியாக தூக்கி எறிய வேண்டும் என்றெல்லாம் வாஸ்துவில் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல, வெளியில் நடந்து செல்லும்போது பலவற்றை அசுத்தங்களை மிதிக்கிறோம்.. அதில் பல விஷக்கிருமிகள் இருக்கும். அவற்றை வீட்டிற்குள் கொண்டு வந்துவிட கூடாது என்பதற்காகவே, நம் முன்னோர்கள் செருப்பை வெளியே போட சொன்னார்கள்..!!
ஆனால், நவீனயுகத்தில், வாயில்கூட நுழையாத அளவுக்கு புதுப்புது பெயர்களில் நோய்கள் பெருகி கொண்டிருக்கும்போது, இயல்பாக தரையில் நடப்பதே பல சிக்கலை தந்துவிடுகிறது..

வெறும் கால்: இன்றைய சூழலில், பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படை காரணமே வெறும் காலில் நடப்பதுதான் என்கிறார்கள் டாக்டர்கள்.. அதாவது, சில தொந்தரவுகளை தவிர்க்க வேண்டும் என்றால் செருப்புகளை வீட்டிற்குள் அணியலாம் என்கிறார்கள்.. ஆனால், வீட்டிற்குள் ஒன்று, வெளியே ஒன்று என தனித்தனி செருப்புகளை பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே இதை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
குறிப்பாக, பாதத்தில் பித்தவெடிப்பு, கால் ஆணி, தோல் வறட்சி, நகச்சுத்து, சேற்றுப்புண் இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் ஒவ்வொன்றாக குடியேறிவிடும்.. வெறுங்கால்களில் நடந்தால், குடல் புழுத்தொல்லையும் ஏற்படும்.. குதிகால் வலியும் வரலாம்.. அதனாலேயே காலில் செருப்பை அணிய வேண்டியிருக்கிறது. வயதான பெண்கள், வாதநோய் உள்ளவர்கள், குளிரான இடங்களிலும், ஈரத்தன்மை உள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக்கூடாது...
பாதவலிகள்: அதேபோல, சிலர் வீட்டிற்குள் எந்நேரமும் நடந்தே பழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.. இவர்களுக்கு காலில் வலி, பாத வலி ஏற்படும். அதிலும் டைல்ஸ், மார்ப்ள்ஸ், கிரானைட் போன்ற கற்கள் தரையில் பதிக்கப்பட்டிருந்தால், கால் வலி, பாத வலி வரும்-. இவர்கள் எல்லாம் செருப்பு அணிந்து கொள்வதன் மூலம் இந்த தொந்தரவுகளை தவிர்க்கலாம்.
மற்றபடி சிமெண்ட் தரையாக இருந்தால் செருப்பு அணிய வேண்டிய அவசியமில்லை. மொசைக், கிரானைட், மார்பில் போன்ற தரைதளத்திற்கு வழுக்கிவிடாத செருப்பு அணிந்துகொண்டு நடப்பது கால்களுக்கு ஆரோக்கிமானது

இதில் அதிகம் கவனிக்க வேண்டியவர்கள் சர்க்கரை நோயாளிகள்.. இவர்கள் பாத்ரூமிற்கு என்று கட்டாயம் தனியாக செருப்பைப் பயன்படுத்துவது நல்லது.. சிறிய அளவில் காயம் ஏற்பட்டாலும்கூட, இவர்களுக்கு மிகவும் சிரமம்... வீட்டுக்குள்தானே செருப்பை போடுகிறோம் என்று, தோட்டத்துக்கும் செல்கிறார்கள், வாசலுக்கும் செல்கிறார்கள்.. தெருமுனையில்தானே கடை உள்ளது என்று பால், காய்கறி வாங்கவும் செல்கிறார்கள்.. அத்துடன் காலோடு, வியாதியையும் சேர்த்து வீட்டுக்குள் அழைத்து வந்துவிடுகிறார்கள்.
நோய்களின் தாக்கம்: இதைத்தவிர்த்தாலே போதும்.. அதுமட்டுமல்ல, கால்களை அழகுபடுத்த நினைக்கும் அளவுக்கு செருப்பை சுத்தப்படுத்த பலரும் நினைப்பதில்லை என்பதே வருத்தமான உண்மை.. அசுத்த செருப்போடு அலையும்போது, நோய்களின் தாக்கமும் அதிகமாகிறது.. அதிலும், வாரம் ஒரு முறை சுடுநீரில் டெட்டால் விட்டு காலனியை ஊறவைத்து சுத்தப்படுத்திக்கொண்டால் இன்னும் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications