"அதை" சாப்பிட்டா ஆண்மை பெருகுமா.. ராமநாதபுரம் வீட்ல அந்த "அண்டா"க்குள்ளே என்ன இருக்குனு பாத்தீங்களா
சென்னை: கடல் அட்டைகளை கடத்துகிறார்களே எதற்காக தெரியுமா? அப்படி கடத்தி கொண்டுபோய் விற்கும் அளவுக்கு அதில் அப்படியென்னதான் இருக்கிறது?
கடல் அட்டைகளை, இந்தியாவில் சட்டவிரோதமாக பிடித்து அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதேபோல, இலங்கைக்கு கடல் வழியாக பல்வேறு பொருட்கள் கொண்டு செல்வதும், இலங்கையில் இருந்து பல்வேறு பொருட்களை கடத்தி வரும் நிகழ்வுகளும் தொடர் கதையாக உள்ளது..
இதில், அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளும், இலங்கைக்கு கடத்திச்செல்லும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.
மத்திய அரசு: ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி மற்றும் ராமேசுவரம், மண்டபம் பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள், தங்கம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட வன உயிரினங்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், பலமுறை ராமநாதபுரம் மாவட்டத்தில், பலபேர் வசமாக சிக்கியிருக்கிறார்கள்..
சமீபத்தில்கூட, மண்டபம் வேதாளை கடற்கரை அருகே ஒரு தோப்பில் 500 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தார்கள். அந்த தோப்பின் ஓனரையும் கைது செய்தார். இப்போதும் ஒருவர் சிக்கி உள்ளார்.

சஞ்சய் காந்தி: திருப்பாலைக்குடி அருகே ஒரு வீட்டில், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தேவிப்பட்டினம் கடற்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தி உள்ளனர்.. சஞ்சய் காந்தி என்ற இளைஞர், சுமார் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பது உறுதியானது.. இதையடுத்து, வனத்துறையினர் அதிரடியாக அட்டைகளை பறிமுதல் செய்து சஞ்சய் காந்தியையையும் கைது செய்தனர்.
அந்த கடல் அட்டைகளை ராமநாதபுரம் வனத்துறை ஆபீசுக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில், ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டு படகு மூலம் இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்துவதாக தெரிய வந்தது.
கைது: இலங்கையில் இந்த கடல் அட்டைகளை உணவுப் பொருளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் கூடுதலாக தெரிய வந்தது... இதையடுத்து, அரசால் தடை செய்யப்பட்ட வனவிலங்குகளையும், கடல் அட்டைகளையும். யாராலும் பிடிக்கப்பட்டாலோ, துன்புறுத்தினாலோ கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.. இப்போது சஞ்சய் காந்தி ஜெயிலில் உள்ளார்...!
ஆனால், இந்த கடல் அட்டைகளை ஏன் மீனவர்கள் பிடிக்கக்கூடாது? எதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது? எதற்காக பிற நாடுகளுக்கு மட்டும் கடல் அட்டைகளை கடத்தி விற்க வேண்டும்? இந்த அட்டைகளை வைத்து என்ன செய்வார்கள்? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுவது இயல்புதான்.
எதற்காக தடை: கடல் அட்டைகளை, "கடலின் இளவரசி" என்பார்கள்.. ஒருவித கடினமான உடல் தோலையும், உருண்டையான அமைப்பையும், அடர்ந்த கருப்பு அல்லது மணல் நிறத்தையும் பெற்றிருக்கும்.
கடல் வாழ் உயிரினங்கள் குறிப்பாக, கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு, பால் சுறா மற்றும் சங்கு வகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2001 ஜுலை 11ம் தேதி தடை விதித்தது.
அதில், கடல் அட்டைகளும் ஒன்றாகும்.. இந்த அட்டைகளை தடை செய்ய காரணம், இவை அதிகமாக பிடிக்கப்பட்டால் அந்த இனமே அழிந்துவிடும் என்கிறார்கள்.. அதனால்தான், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதற்கு அனுமதியே தரவில்லை.. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, இதற்கான போராட்டங்களை மீனவர்கள் கையில் எடுத்தாலும்கூட, இதற்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை..
அபராதம்: கடல் அட்டைகளுக்கு என்று தனியாக எந்த வலையும் கிடையாது. மீன் பிடிக்கும் வலையிலேயே, கடல் அட்டைகளும் வந்து மாட்டிக் கொண்டு விடும்.. அவைகளை கரைக்குக்கொண்டு வந்தாலே மீனவனுக்கு 7 ஆண்டு சிறைவாசமும் ரூபாய் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்..
பறிமுதல் செய்யப்படும் கடல் அட்டைகள், உயிருடன் இருந்தால் மறுபடியும் கடலில் விடப்படும். ஒருவேளை அவை இறந்த நிலையில் இருந்தால், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, அழிக்கப்படும்.
கடும் தடை: முக்கியமாக, சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில், இதுபோன்ற உயிரினங்களுக்கு நிறைய வரவேற்பு உண்டு.. உணவாகவும், மருந்தாகவும் என இந்த கடல் அட்டைகளை இரண்டு வகையான பயன்பாடுகளுக்காக உபயோகிக்கறார்கள். இதில் ராஜ கடல் அட்டையானது ரொம்ப காஸ்ட்லியாம்.. அதனால், இதற்கு தான் நிறைய கிராக்கி இருக்கிறதாம்.
உடல் சோர்வு: உடல் சோர்வு, இயலாமை, மலச்சிக்கல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் மூட்டு வலி இந்த வகை நோய்களுக்கு இந்த கடல் அட்டைகள் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இந்த கடல் அட்டைகளில் காண்டிரைட்டின் சல்பேட், கீழ்வாத நோயையும் குணப்படுத்த உதவும் என்றும் சொல்கிறார்கள்..
அதேபோல, கடல் அட்டை சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்களாம்.. கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே, இதுதான் என்கிறார்கள்.. ஆனாலும், இது மூடநம்பிக்கை என்றும், இதுவரை அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் சொல்கிறார்கள். யாரோ கிளப்பிவிட்ட வதந்தியால், இதற்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கியாம்.
எனினும் மற்ற சிறப்புகள் இருந்தாலும்கூட, இந்த அட்டைகளை பிடிப்பதற்கு உலக நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும்தான் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications