Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வளைகாப்பு".. மேட்டரே வேற போலயே.. எதுக்கு 7வது மாசம் வளைகாப்பு செய்றாங்க தெரியுமா? அற்புதம் சீமந்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்? அதிலும் 5, 7ம் மாதங்களில் வளைகாப்பு செய்வது எதனால்? இதற்கு பின்னணி காரணங்கள் இருக்கின்றனவா?

சாதாரண பெண்களைவிட, கர்ப்பிணி பெண்களின் ஹார்மோன்கள், தீவிரமாக செயலாற்றக்கூடியது.. நேர்வினை - எதிர்வினை எதுவானாலும், வீர்யத்துடன் செயல்புரியக்கூடியவை.. அதனால்தான் கர்ப்பிணிகள் எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், பாசிடிவ் மனப்பான்மையுடனேயே எதையும் அணுக வேண்டும், சிந்திக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.

health news and Do you know what are the health benefits of baby shower

வளைகாப்பு: வளைகாப்பு என்றாலே, கர்ப்பிணிகளுக்கு பிடித்ததெல்லாம் சாப்பிடுவது, கைகளில் வளையல்களை மாட்டிவிடுவது, வரிசைத்தட்டுகளை வைப்பது, சொந்த பந்தங்கள் ஒன்றுகூடி, அவளை ஆசீர்வதித்து, அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பது மட்டுமே கிடையாது.. இந்த அபரிமிதமான அன்புக்கு பின்னணியில், ஏகப்பட்ட அறிவியல் காரணங்களும் ஒளிந்திருக்கின்றன.

தலைப்பிரசவம் பெண்களுக்கு அதிக பயத்தை தரக்கூடியது.. இதனால், பெற்றோர், சொந்தங்கள், பந்தங்கள், நண்பர்கள் என அனைவரும் திரண்டு வந்து, கர்ப்பிணிக்கு நம்பிக்கையை ஊட்டக்கூடிய நிகழ்வாக வளைகாப்பு நடத்தப்படுகிறது. அதாவது மனதைரியத்தை ஊட்டுகின்ற விழாவாகும்.

மணிக்கட்டு: பொதுவாக, மனிதர்களின் மணிக்கட்டு பகுதி நிலையான செயல்பாட்டில் இருக்கும்.. அதனால்தான், டாக்டர்கள் இங்கு வைத்து, நாடி பிடித்து பார்த்து, வியாதிகளை கண்டறிகிறார்கள்.. பெண்களுக்கு, மணிக்கட்டில் வளையல்கள் அணியும்போது, அவைகள் உராய்வதால், ஓட்டம் அளவு அதிகரிக்கிறது... வளையல் உராய்வதால் ஏற்படும் ஆற்றல் தோலின் மேல்புறம் வழியாக வெளியேறி மறுபடியும் உடலுக்குள் அனுப்பப்படுகிறது.

வளையலின் சத்தம், கருவில் இருக்கும் குழந்தையின் கேட்கும் திறனை மேம்படுத்தும்.. கர்ப்பிணிகளுக்கு மனஅழுத்தம் நிறைய இருக்கும்.. இதுபோன்ற சத்தங்கள், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும்..

அதுவும் கண்ணாடி வளையல்களுக்குத்தான் இந்த ஸ்பெஷாலிட்டி உள்ளது. காரணம், கண்ணாடி வளையல்கள்தான், வளிமண்டலத்தில் இருக்கும் தூய்மையான சக்தி, இயற்கையான கூறுகளை உறிஞ்சி அவற்றை உடலுக்குள் செலுத்தும் திறன் படைத்தவை.. சிவப்பு அல்லது பச்சை நிற கண்ணாடி வளையல்கள் அமைதியை தூண்டக்கூடியவை.

வளையல்கள்: கைகளில் வளையல் போடும் இந்த இடம், வயிற்றுடன் குறிப்பாக, இரைப்பை மற்றும் குடல் பாகங்களுடன் சம்பந்தப்பட்டவை.. 6 மாதங்களுக்கு மேல், மாதம் ஆனா கர்ப்பிணி பெண்களுக்கு மலசிக்கல் ஏற்படும் ..இந்த வளையல்கள் போடுவதால் அந்த இடங்களில் சிறிய அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது.. அதனால் மலசிக்கல் சிரமம் குறைகிறது .

health news and Do you know what are the health benefits of baby shower

கர்ப்பிணியின் ஏழாவது மாதத்தில், குழந்தையின் எல்லா உறுப்புகளும் உருவாகப்பட்டுவிடுகிறது.. இந்த 7வது மாதத்தில்தான், குழந்தைக்கு கண் விழியிலிருந்து ஆப்டிகல் நெர்வ் (optical nerve) என்ற நரம்புமண்டலம், மூளையுடன் முழுவதுமாக இணைகிறது... இந்த 7ம் மாதத்தில் கர்ப்பிணிகள் எந்த பிம்பங்களை அடிக்கடி பார்க்கிறார்களோ, அவற்றின் உருவங்கள், அமைப்புகள் அந்த குழந்தைக்குப் பின்னாளில் ஏற்கனவே பரிச்சயமான உணர்வை தருமாம்.. அதனால்தான், கர்ப்பிணிகள், நிறைய நபர்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே வளைகாப்பு நடத்துகிறார்கள்.

7வது மாதம்: குமட்டல், வாந்தி போன்றவை எல்லாம், ஏழாவது மாதத்தில் நின்றுவிடும்.. அதற்குபிறகு, புளிப்பு உட்பட நாக்குக்கு ருசியாக சாப்பிட தோன்றும் என்பதால்தான், பல்வகையான சோறுகளை வளைகாப்பின்போது தட்டில் வைப்பார்கள்.

வளர்ச்சி: 7, 8, 9ம் மாதங்களில், குழந்தையின் வளர்ச்சியானது கர்ப்பத்தில் பன்மடங்கு பெருகுகிறது... இந்த காலகட்டத்தில், குழந்தையின் அத்தனை புலன்களும் முழுமையாகி, தயாராவது இந்த இறுதி மாதங்களில்தான்... கண்களுக்கு விருந்தாகவும், காதுகளுக்கும், நாக்குக்கும், செவிக்கும் என அத்தனை புலன்களும் விழித்துக்கொள்ளக்கூடிய நிகழ்வாகவே, வளைகாப்பு செய்யப்படுகிறது.

நம்முடைய முன்னோர்கள் எதை செய்தாலும், அதில் ஆயிரம் அறிவியல் ஒளிந்திருக்கும் என்பதற்கு, தமிழரின் வாழ்வியலில் கலந்திருக்கும் இந்த "வளைகாப்புகளும்" ஒரு உதாரணம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+