Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழையிலை ஜூஸூக்குள் இவ்ளோ இருக்கா.. வாழை இலையை விட்றாதீங்க.. என்றும் வாழ வைக்கும் வாழை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழையிலையில் சாப்பிடுவதே அவ்வளவு நன்மை என்றால், இந்த வாழையிலை ஜூஸை நாம் தினமும் பயன்படுத்தினால் இன்னும் எவ்வளவு நன்மை தெரியுமா?

நம் பாரம்பர்யத்தோடு நெருங்கிய தொடர்புடையது இந்த வாழை இலை... தொன்றுதொட்டு வரும் மரபும், பண்பாடும் இந்த இலையுடன் உள்ளது... இந்த இலை சுகாதாரமானது.. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. மருத்துவக் குணங்கள் நிரம்பியவை..

health news and Do you know what are the health benefits of banana leaves juice

இலையில் பாலிபினால்கள் நிறைந்திருக்கின்றன.. முக்கியமாக, ஈஜிசிஜி (Epigallocatechin gallate-EGCG) என்ற பாலிபினால் அடங்கியிருக்கிறது. இது ஓர் முக்கியமான இயற்கை ஆன்டிஆக்ஸிடன்ட்.. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்தான், நம் உடம்பில் உள்ள செல்களை சிதைக்கும் இதய நோய், புற்றுநோய் போன்றவற்றுக்கு செயல்படுகிறது..

வேதிப்பொருட்கள்: வாழை இலை சுத்தமாக இல்லை என்பதற்கு வாய்ப்பே இல்லை.. இயற்கையிலேயே சுத்தமான இலை.. நச்சுப்பொருள்களோ, வேதிப்பொருள்கள் கலப்போ அதில் காணப்படுவதில்லை.. நீர்ப்புகா தன்மையுடையதாக இருப்பதால்தான், இதில் குழம்பு, ரசம் போன்ற திரவ உணவுகளையும் பரிமாற முடிகிறது. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்த இலையை அப்படியே பச்சையாக சாப்பிட முடியாது.. செரிமானம் உடனே ஆகாது..

நன்மைகள்: வாழை இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து ஜூஸ் வடிவில் எடுத்து வைத்துக்கொண்டால், அதனால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

குறிப்பாக, சரும பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் இந்த வாழையிலை சாறை பயன்படுத்தலாம்.. காரணம், பெரும்பான்மையான சன் ஸ்கிரீன் லோஷன்களில், இந்த வாழை இலை சாறுதான் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. எனினும் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.. அதனால், டாக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டே சருமத்துக்கு பயன்படுத்த வேண்டும்.

தலைமுடி: பொடுகு தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு வாழையிலையை அரைத்து பூசி வந்தால், அவ்வளவும் தீர்வாகும்.. வாழையிலை ஜூஸை தலைமுடிக்கும் பயன்படுத்தலாம்.. இதனால் பொடுகு தொல்லை நீங்கி, குளிர்ச்சியை தரும்..

வாழை இலையில் லெட்டின் என்ற பொருள் இருப்பதால், அவ்வளவும் தனித்துவமான புரதம் ஆகும்.. இவைகளை நாம் ஏதாவது ஒரு ரூபத்தில் உடம்பில் சேர்த்து கொள்ளும்போது, இந்த புரதம் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பை வலுப்படுத்தும் செல்கள் டீ செல்களை அதிகரித்து உடலில் நோயை உற்பத்தி செய்யும் பி செல்களை குறைக்க செய்கிறது .

சருமத்தொந்தரவு: வாழையிலை சாற்றை வடிகட்டி, ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, அது ஐஸ்கட்டியாகும்வரை விட்டுவிட வேண்டும்.. பிறகு, அந்த ஐஸ் கட்டிகளை கொண்டு, சருமத்தில் தேய்த்து வந்தால், சருமம் மென்மையடையும்.. வேர்க்குரு உட்பட எந்தவித தொந்தரவும் முகத்துக்கு வராது. சீக்கிரமாக ஏற்படும் முதிர்ந்த தோற்றத்தை தடுக்கிறது.

வாழையிலையில் அழகை கூட்டும் அலட்டாயின் என்ற சத்து உள்ளது.. அதனால், அரைத்த வாழையிலை ஜூஸுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து சருமத்தில் பூசி வந்தால் சரும பொலிவு அதிகரிக்கும்.. காரணம், வாழை இலையின் சாறில் இருக்கும் உட்பொருட்கள் சூரியக் கதிர்வீச்சிலிருந்து வரும் புற ஊதாக்க கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகிற சரும பிரச்சனைகளை தீர்க்க பெரிதும் உதவி செய்யும்.

சமீபத்தில், வாழைப்பழ சாறு கேசரி பற்றின வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகியிருந்தது.. பார்ப்போரை இந்த வீடியோ ஆச்சரியப்படுத்தவும் செய்தது.

வாழையிலை: அதாவது, நடுத்தரமான 2 வாழை இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.. அதை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.. அடுப்பில் கடாய் வைத்து, சிறிது நெய் ஊற்றி, முந்திரி, பூசணி விதைகளை தனித்தனியாக போட்டு, நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்..

பிறகு, அதே கடாய்யில் இன்னொரு ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை விழுதைக்கொட்டி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து, வாழை இலை விழுது வதங்கி கெட்டியானதும், அதனுடன் இந்த சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் விழாமல் கிள வேண்டும். கடைசியாக, ஏலக்காய் பொடி, சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.. மீண்டும் கொஞ்சம் நெய்யை ஊற்றி கிளறினால் வாழையிலை அல்வா ரெடி..,

கேசரி: எப்போதுமே, அல்வாவை ஒரே கலரில் பார்த்து பழக்கப்பட்ட நமக்கு, இந்த பச்சை கலர் அல்வா வித்தியாசமாக இருந்தது.. அதேபோல, வாழை இலையின் சாறை எடுத்து அந்த நீரை சாப்பாட்டில் சேர்த்து சமைக்கலாம்..

இதைவைத்து, வாழைப்பழ சாறு கேசரி என்றும் செய்கிறார்கள்.. அதாவது, கேசரியில் தண்ணீருக்கு பதிலாக வாழை இலையின் சாறை சேர்த்துக்கொள்வது.. அவ்வளவுதான்.. இது கூடுதல் ருசியாக இருப்பதுடன், சத்துக்கள் நிறைந்தவை என்கிறார்கள். ஆக மொத்தம், வாழையிலை சாறை ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் பயன்படுத்தி கொண்டேயிருந்தால், வாழை நம்மை நிச்சயம் வாழவைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+