பட்டினப்பாக்கத்தில் ஒரே ஆச்சரியம்.. அதென்ன ஆரஞ்சு கலர்ல.. திரண்ட சென்னைவாசிகள்.. கிட்டபோய் பார்த்தால்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டினப்பாக்கத்தில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. அங்குள்ள கடற்கரை கடைகளிலும், பொதுமக்கள் திரண்டு சென்றனர்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னையில் மீன்பிடி காலம் இந்த வருடமும் அமல்படுத்தப்பட்டது.. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க போகவில்லை.. இதனால், சிக்கன், மட்டன் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.

கடைசியில், மீன்பிடி தடைக்காலம் சமீபத்தில்தான் முடிந்து, மீனவர்களும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்... அந்தவகையில், சங்கரா, வஞ்சிரம், சுறா, மத்தி, கவலை உள்ளிட்ட பலவகை மீன்களை அள்ளிக்கொண்டு வர துவங்கிவிட்டனர்.

health news and Do you know what are the health benefits of Sangu Sathai fish

பட்டினப்பாக்கம்: அப்படித்தான் நேற்றும் கடலில் இருந்து மீன் பிடித்து வந்திருக்கிறார்கள்.. பலவகை மீன்களில் பலரையும் கவர்ந்தது, சங்கு சதை மீன்கள்தான்.. இந்த மீன் அவ்வளவாக மீனவர்களுக்கே கிடைக்காதாம்.

சங்கு சதை மீன்கள் கிடைப்பது மிகவும் அரிது என்கிறார்கள்.. பட்டினப்பாக்கம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில், இந்த சங்கு சதை மீன்கள் சிக்கியுள்ளன... இந்த மீன்கள் பட்டினப்பாக்கம் மீன் கடைகளில் உடனடியாக விற்பனைக்கும் வந்தன.. இதைப்பார்த்ததுமே, பொதுமக்கள் திரண்டு சென்று வாங்க துவங்கிவிட்டடார்கள்.. ஒரு சங்கு சதை மீன் 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மருத்துவ குணம்: காரணம், இதன் மருத்துவ குணம் அந்த அளவுக்கு அபரிமிதமானது.. ஆனால், பெரும்பாலும் மீனவர்களுக்கு இந்த மீன் சிக்குவதில்லையாம்.. கடல் அலைக்கு ஏற்றாற் போல்தான், இந்த சங்கு சதை மீன்கள் வரும் என்கிறாக்ள..

அதேபோல, சாதாரணமாக இந்த மீன்கள் வலையில் சிக்காது.. இதில், விஷ சங்கு சதை மீன்களும் இருப்பதால், அவற்றை மீனவர்கள் பிடிக்க மாட்டார்களாம்.. இதன் மருத்துவ குணம் அறிந்தவர்கள், இதை தேடிப்பிடித்து விரும்பி சாப்பிடுகின்றனர். இதன் விலை அதிகம் என்பதால், இதற்கு கிராக்கியும் அதிகமாகவே இருக்கிறது.. எளிதில் கிடைக்காத மீன் என்பதால், மீனவர்களிடம் முன்கூட்டியே சொல்லி வைத்து, மீன்பிரியர்கள் வாங்கி சாப்பிடுவார்கள்.

health news and Do you know what are the health benefits of Sangu Sathai fish

இதை சுத்தம் செய்வதும் கடினமானது.. இந்த மீனை வெட்டுவது மிகவும் சிரமமாம்.. பொறுமையாகவும், நன்றாக சுத்தப்படுத்த வேண்டுமாம்.. மீன்வகையிலேயே இந்த சங்கு சதை மீனுக்குதான், ருசியே தனியாக இருக்கும் என்கிறார்கள்.. சங்கு சதை மீனை, காயவைத்து, அப்பளம் போல பொரித்து சாப்பிட்டால், அதைவிட ருசியாக இருக்குமாம்.

அப்பளம்: மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய் கலந்து இந்த மீனை சமைத்து, சங்கு கறி என்று சில ஓட்டல்களில் விற்கிறார்கள்.. பலர் வீடுகளில் இதை கிரேவியாக சமைக்கிறார்கள்.. ஆனால், தூத்துக்குடி பக்கம், இந்த மீனை மெல்லியதாக சீவி, வெயிலில் நன்றாக காயவைத்து, அப்பளம் போல பொரித்தும் சாப்பிடுகிறார்கள்.. இப்படிப்பட்ட அரிய வகை மீன், சென்னை கடலில் கிடைத்ததால், பட்டினப்பாக்கமே பரபரத்துவிட்டது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+