Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பசலைக்கீரை" பச்சை பசேல் பாலக்கீரை.. பசலைக்கீரை கிட்ட இருந்தாலே பாதி பிரச்சனை காலி.. வேற லெவல் கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பசலைக்கீரையை சாப்பிட்டாலே பாதி நோய்கள் பறந்து போய்டுமாம்.. அந்த அளவுக்கு ஆரோக்கியமானது.. சத்தானது.. மலிவானது.. அன்றாட சமையலில் தவிர்க்க முடியாதது..!!
பசலைக்கீரை அல்லது பாலக்கீரை என்பார்கள்.. 100 கிராம் பசலையில், 23 கலோரிகள், 3.6 கிராம் கார்போஹைட்ரேட், 2.9 கிராம் புரதம், 2.2 கிராம் நார்ச்சத்து, 0.4 கிராம் கொழுப்புக்கள் உள்ளன..

வைட்டமின்கள்: இதைத்தவிர, வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி9 மற்றும் கணிசமான அளவு வைட்டமின் சி, கே மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன.. மேலும், மாங்கனீசு, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவ்வளவும் அடங்கியுள்ளதால்தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசலைக்கீரையை கட்டாயம் சாப்பிட சொல்கிறார்கள்.

health news and Do you know what are the health benefits of spinach

உடல் எடை குறைப்பவர்களுக்கு அருமருந்து இந்த கீரை.. இதிலுள்ள உள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக்கொண்டவை. இதனை உணவில் சேர்க்கும்போது, கெட்ட கொலஸ்ட்ரால் நம் உடலில் தங்குவதை தவிர்க்கலாம். தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பசலைக்கீரை: இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபொலிக் சத்து உள்ளதால், மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. மேலும் பசலை கீரையில் நிறைவான ப்ளவனாய்டு நிரம்பியிருப்பதால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.. நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கீரை என்பதால், இதை உணவில் தவிர்க்கவே கூடாது..

குழந்தைகளுக்கு உணவில் இதை அடிக்கடி சேர்த்து தர வேண்டுமாம்.. சுண்ணாம்பு சத்தும், வைட்டமின் K சத்தும், அதிகம் உள்ளதால், எலும்புகளையும் பற்களையும் வலிமைபடுத்த செய்கிறது. வளரும் குழந்தைகளுக்கு இந்த பசலைக்கீரையை காரம் அவ்வளவாக இல்லாத குழம்பாகவோ, அல்லது சூப் போன்றோ தந்தால், எலும்பும், பற்களும் உறுதிப்படும்.

தலைமுடி: பெண்களுக்கான இரும்புச்சத்துக்கள் இதில் இருக்கிறது.. எனவே, முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், ரத்த உற்பத்திக்கும் துணைபுரிகிறது.. ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்யும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை, இந்த கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலமாக சரிசெய்யலாம்..

அதேபோல, கால், கை, மூட்டுக்களில் வரக்கூடிய வாதத்தையும், இந்த பசலை போக்குகிறது.. எந்த கீரைகளுமே, குடலில் அடைத்திருக்கும் கழிவுகளை வெளியேற்ற கூடியவை என்றாலும், பசலைக்கீரை இதில் சிறப்பாக வேலைசெய்கிறது... உடல் கழிவுகளை வெளியேற்றி வயிற்றுக்கு குளிர்ச்சியை தருகிறது.. வயிற்றில் இருக்கும் புண்களையும் ஆற்ற உதவுகிறது..

மலச்சிக்கல்: பசலைக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் சரும பிரச்சனைகளை தீர்க்கின்றன.. மலச்சிக்கல், தொப்பை பிரச்சனை போன்றவற்றிற்கு இந்த கீரை நல்ல நிவாரணியாக திகழ்கிறது.. இதில் அதிக அளவு பொட்டாசியமும் உள்ளது.. உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கீரையைதான் பரிந்துரைக்கிறார்கள்..

கோடைக்காலங்களில் ஏற்படும் உஷ்ணத்தின் காரணமாக வரும் அனைத்து கோளாறுகளையும் இந்த கீரை சரிசெய்கிறது.. பசலைக்கீரை தாகம் தணிக்கும் வல்லமை கொண்டவை.. அதனால்தான், கோடைக்கால நோயான சூட்டு கொப்புளங்கள், வியர்க்குரு பிரச்சனைகளுக்கு பசலைக்கீரை நல்ல தீர்வாக இன்றுவரை அமைந்து வருகிறது. அதுமட்டுமல்ல, வெயில்காலத்தில் சிறுநீர்க்கட்டு, சிறுநீர் கடுப்பு உட்பட பல்வேறு உபாதைகள் ஏற்படும்.. இதற்கெல்லாம் பசலைக்கீரையே தீர்வாக உள்ளது..

health news and Do you know what are the health benefits of spinach

உணவு: ஆசன வாய் பகுதியில் உண்டாகும் புண், எரிச்சல் போன்றவற்றையும் இந்த கீரை குணப்படுத்துகிறதாம். மூட்டு வலி, வீக்கம் இருப்பவர்கள் பசலைக்கீரையை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.. வெயில்காலத்தில் இந்த கீரையை அதிகம் பயன்படுத்த சொல்கிறார்கள்.. பசலைக்கீரையில் இருக்கும் லுடின் கண்களுக்கு குளிர்ச்சியையும், கண் பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது.இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள்.

அக்கி நோயால் அவதிப்படுபவர்கள், தீப்புண், வெந்நீர் காயம், சொறி, சிரங்கு, காயங்கள் ஏற்பட்டாலும், பசலை இலையை நன்றாக நசுக்கி அவைகளின் மீது தொடர்ந்து தடவிவந்தால் மெல்ல நிவாரணம் கிடைக்கும். பசலைக்கீரையின் தண்டை அரைத்து, வேர்க்குரு, கை, கால்களில் ஏற்படும் தோல் எரிச்சலுக்குப் பற்று போட்டாலும், தீர்வு கிடைக்கும்.

பசலை கூட்டு: டயட் இருப்பவர்கள், எண்ணெய் குறைவாக சேர்த்து இந்த கீரையை, சப்பாத்திக்கு கூட்டு போல செய்து சாப்பிடலாம். பசலைக் கீரையை அலசி குக்கரில் போட்டு ஒரு விசில் வர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.. ஒரு குக்கரில் வாணலியில், எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பொறித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இப்போது பின் கழுவி வைத்துள்ள துவரம் பருப்பு, உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி இறக்கி, குக்கரை விசில் போட்டு மூடிவிடவும். பிறகு, பசலைக் கீரையை அதில் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய், சீரகம், கடுகு , காய்ந்த மிளகாய், பூண்டு போட்டு தாளித்து பருப்பில் கொட்டினால், பசலைக் கீரை பருப்புக்கூட்டு தயார். தேவையானால் இதில் எலுமிச்சம் சாறு சேர்த்து கொள்ளலாம்.

தோசை: இந்த பசலைக்கீரையை குழந்தைகள் குழம்பு போல வைத்து தந்தால் சாப்பிட மாட்டார்கள்.. அதனால் தோசை போலவும் செய்து தரலாம்.. பசலை கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதேபோல வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பிறகு, பசலைக் கீரை, சிறிது உப்பு சேர்த்து, வெந்ததும் இறக்கவும். இவை அனைத்தையும், இட்லி மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.

இதில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்கிறது.. குழந்தைகளுக்கும் வலு சேர்க்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+