ஆட்டுக்கால் ஆபத்தா.. மட்டன் சூப் குடிக்க போறீங்களா.. இதை முதல்ல தெரிஞ்சுக்குங்க.. பயங்கர ஆச்சரியம்
சென்னை: சூப் என்றாலே அது ஆட்டுக்கால் சூப் என்றாகிவிடுகிறது.. அந்த அளவுக்கு மட்டன் சூப் பல்வேறு நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. அப்படி என்ன நன்மைகள் மட்டன் சூப்களில் உள்ளன?
பொதுவாகவே சூப் சாப்பிட்டால், நம்முடைய உடம்பில் உள்ள என்சைம்களை தூண்டுவதால், செரிமானம் சரிவர நடக்கும். அசிடிட்டியை குறைத்து, பசியை தூண்டும்.

அதனால்தான், ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு முன்பு முதலில் சூப் தருவார்கள்.. காய்கறி சூப் முதல் மூலிகை சூப், அசைவ சூப் வரை எல்லாமே ஆரோக்கியம்தான்.. ஒவ்வொரு வகையில் நமக்கு உபயோகப்படக்கூடியவையே. மொத்தம் 3 வகையான சூப்கள் இருக்கிறதாம்..
3 வகையான சூப்கள்: ஒன்று கிளியர் சூப் (clear soup), அடுத்து திக் சூப் (thick soup) அடுத்து, தீசிஸ் சூப் (thesis soup) என்பதுதான்.. இதில் கிளியர் சூப் என்பது தாது உப்புகள் அதிகம் இருக்கக்கூடியவை.. உடம்பு சரியில்லாமல், சரியாக திட உணவை எடுத்துக் கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கு தரவேண்டிய ஊட்டச்சத்து சூப்.. திக் மற்றும் தீசிஸ் சூப்கள் எல்லாருமே சாப்பிடலாம்.. வைட்டமின்களும் சுவையும் கொண்டவை. சிக்கன் சூப்பில் புரதம், கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும்.. மட்டன் சூப்பை பொறுத்தவரை, நெஞ்செலும்பு, ஆட்டுக்கால் என தனித்தனி வகைகளில் சூப் செய்யப்படுகிறது.. இரும்புச்சத்து, பி 12 போன்ற சத்துகள் உள்ளன.. கொழுப்பு சத்தை அதிகரிக்கச்செய்து, வேறு பிரச்சனைகளில் கொண்டுபோய்விடும். அதனால், அசைவ சூப்களை தொடர்ந்து குடிக்கக்கூடாது என்கிறார்கள்..
முதுகுவலி: கால் எலும்புகளை வைத்து சூப் செய்து சாப்பிடுவது, ஆண்களுக்கு மிகவும் பலத்தை தருகிறது. கலோரி கட்டுப்பாட்டை இந்த ஆட்டுக்கால் சூப் ஊக்குவிக்கிறது. பொதுவாக மூட்டுவலி முதுகுவலி மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்களுக்கு இந்த ஆட்டுக்கால் சூப் மிகவும் நல்லது. இருதய தசைகளையும் பலப்படுத்தும்..
இந்த சூப், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்களின் ஆதாரமாக விளங்குகிறது.. அத்துடன், கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலம் போன்றவையும் அதிகமாக உள்ளது.. கொலஸ்ட்ரால் அளவு மேம்படுகிறது . இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உடம்பில் உள்ள நச்சுகள் நீங்குகிறது.. ரத்த சர்க்கரை அளவு சீராகிறது. நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது.
எலும்பு சூப்: எப்படியென்றால், இந்த எலும்பு சூப்பில் குறைந்த கலோரியும், ஊட்டச்சத்தும் இருக்கிறது.. அதேபோல, நிறைய புரதமும் உள்ளது.. மேலும், எலும்பு சூப்பில் ஜெலட்டின் உள்ளதால், பசி உணர்வை அடக்கி, திருப்தியுடன் பராமரிப்பதால், பசி குறைகிறது.. எடை இழப்புக்கு இது உதவுகிறது.. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்து, சருமத்தை பளபளக்க வைக்கிறது. சுருக்கங்கள் குறைந்து வயது முதிர்வும் குறைகிறது.
பொதுவாக சூப்களை சாப்பிட வேண்டுமானால், அதற்கும் குறிப்பிட்ட காலநேரம் உள்ளதாம். காலை 11 மணிதான் சூப் சாப்பிட சரியான டைம் என்கிறார்கள்.. அப்போதுதான், இந்த சூப் நம்முடைய உடலில் வேலை செய்து, செரிமானத்தை தூண்டி அடுத்த வேளைக்கான உணவு எடுத்துக்கொள்ள நம்மை தயார்படுத்துமாம்.
அமினோ அமிலங்கள்: தோல் ஆரோக்கியம் ஆரோக்கியத்துக்கு சிறந்தது எலும்பு சூப் ஆகும்.. எலும்பு சூப் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது.. இதய நோய், புற்றுநோய், நீரிழிவு போன்ற பல நாட்பட்ட நோய்களுக்கு அழற்சியே அடிப்படைக் காரணம். எலும்பு சூப் உட்கொள்வது அத்தகைய நோய்களின் அபாயத்தை தடுத்துநிறுத்துகிறது. எலும்பு சூப்பில் குளுட்டமைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வழக்கமாக, சூப் மாதிரி அல்லாமல், முருங்கைக்காயுடன் சேர்த்து செட்டிநாடு எலும்பு குழம்பு சமைப்பார்கள்.. அதாவது, அரை கிலோ எலும்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு, துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து, 4 விசில் விட்டு எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் பிரியாணி இலை - 1, சோம்பு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - 1 கொத்து, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, இதெல்லாம் சேர்த்து பொறிக்கவிட்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
நஞ்சுதானே: பிறகு, தக்காளியை நன்றாக வதக்கி, குக்கரில் உள்ளதை இதனுடன் கொட்டி கலக்கவும். பிறகு, மசாலா தூள் சேர்த்து, முருங்கைக்காய், சிறிது உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவிட வேண்டும்.. இறுதியில், புளித்தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், தேங்காய் விழுதையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் ரெடி. எவ்வளவுதான் சத்துக்கள் இருந்தாலும், குறைந்த அளவு எடுத்து கொள்வதே நல்லது.. அளவுக்கு மிஞ்சினால் எதுவானாலும் நஞ்சுதானே?












Click it and Unblock the Notifications