பாத்ரூமுக்குள்ளே போகும்போதும், செல்போனுடனே நுழையறீங்களா? அப்ப உங்களுக்குதான் இந்த தகவல்.. மிக கவனம்
சென்னை: பாத்ரூமுக்குள்ளும் செல்போனை கொண்டு செல்கிறீர்களா? பாக்கெட்களிலும், பைகளிலும் செல்போனை வைத்து கொண்டே, கழிவறைக்குள் நுழைகிறீர்களா?
செல்போன் மீதான மோகம் அதிகரித்து, இப்போது செல்போன் இல்லாத சூழ்நிலையே உருவாகிவிட்டது.. மனித பயன்பாடுகளுக்கு செல்போன்களின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. மற்றொருபக்கம் பொழுதுபோக்குவதற்கான முக்கிய சாதனமாகவும் செல்போன் மாறிவிட்டது.
நாளெல்லாம் செல்போன் பயன்படுத்துவதால், தூக்கமின்மை, கழுத்துவலி, மணிக்கட்டு வலி, முழங்கை வலி இப்படியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.. அதிலும், பாத்ரூமுக்கு போனாலும் செல்போனுடனேயே செல்லும் நிலைமையும் வந்துவிட்டது.

பாக்டீரியாக்கள்: ஆனால், கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதால், இன்னும் பல பிரச்சனைகள் வரக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்... கழிவறையில் போன் பயன்படுத்துவதால், தொற்றுநோய்கள் வரும், குறிப்பாக, சால்மோனெல்லா, இ கோலி பாக்டீரியா, போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது என்கிறார்கள். இவையெல்லாம், அதிகமாக செல்போன் மூலமாகவே பரவுகிறதாம்.
அதுவும், செல்போன் வைத்து கொண்டு ரொம்ப நேரம் கழிவறையில் உட்கார்ந்திருப்பதால், இந்த தொற்றுகள் வர முக்கிய காரணமாம்.. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, ஆசன வாயில், அழுத்தத்தை ஏற்படுத்தும்... இந்த அழுத்தத்தால், மலச்சிக்கல் பிரச்சனை வரும். நாளடைவில் இது மூல நோயாகவும் மாறக்கூடும்.. கழிவறையில் இருந்து வரும் ரசாயன வெப்பமும் மூல நோய் பிரச்சினையை ஏற்படுத்தும்.
கழிவறைகள்: அதனால், கழிவறையில் இருக்கும்போதாவது செல்போன் பயன்படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.. இந்த ஆய்வில், கழிவறைக்கு செல்லும்போது நிறைய பேர் செல்போனை எடுத்து செல்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
அப்படியே கழிவறைக்கு செல்போன் எடுத்துச் சென்றாலும், செல்போன்களை பலரும் சுத்தம் செய்வதில்லையாம்.. வெறும் 16.5 சதவிகிதம் பேர் மட்டுமே, தங்களுடைய செல்போனை சுத்தம் செய்து கொள்வதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.. கழிவறையில் இருக்கும் பாக்டீரியாக்கள் அந்த செல்போனில் தொற்றிக்கொண்டு நோய் பாதிப்பை உருவாக்கும் என்கிறார்கள்..

கிருமிகள் அதிகம்: ஆரிசோனா பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், ஒரு டாய்லட் சீட்டில் இருப்பதைவிட, கழிவறைக்கு எடுத்துச்செல்லும் செல்போனில் 10 மடங்கு அதிக கிருமிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை கூட்டிவருகிறது. இந்த தொற்றுக்கள் காரணமாக, வாந்தி, டைரியா போன்ற பிரச்சனைகளம் வரக்கூடும்.. நமக்கே தெரியாமல் கெட்ட பாக்டீரியாக்கள் கலந்து, நாம் சாப்பிடும் உணவுகளை விஷமாகவும் மாற்றலாம்.
அதனால், செல்போனை அதிகம் உபயோகிக்காமல், தேவைக்கு மட்டுமே உபயோகிக்குமாறு வைத்து கொள்ளலாம்.. அப்படியே தவிர்க்க முடியாத காரணத்தினால், பாத்ரூமுக்குள் செல்போன் கொண்டுபோனாலும், நீங்கள் வெளியே வரும்போது சோப்பு போட்டு கைகளை கழுவினாலும், போனில் ஒட்டிக்கொண்டிருக்கும் கிருமிகள் உங்களை நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்..
தவிர்க்கலாம்: அதுமட்டுமல்ல, இந்த கிருமிகள், செல்போனில் 3, 4, நாட்கள்கூட தங்கியிருக்குமாம். சார்ஜ் போடும்போது, போன் ஸ்கிரீன் வெப்பமடையும்போது, கிருமிகளின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும். அதனால், குறைந்தபட்சம் பாத்ரூமுக்குள் போகும்சமயத்திலாவது செல்போனை தவிர்க்க முயற்சிக்கலாம்.












Click it and Unblock the Notifications