அடுத்தடுத்து சிவக்கும் கண்கள்.. திடீரென மாறிய வானிலையால்.. மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு.. ரொம்ப கவனம்
சென்னை: சென்னையில் வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் மக்கள் பலருக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் கோடை வெயில் முடியாமல் உள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது. இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமான சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெயிலுக்கு இடையில் நேற்று சென்னை மற்றும் வடக்கு தமிழ்நாடு மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று மாலைக்கு பின் சென்னையில் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரங்களில் விடாமல் பல இடங்களில் மழை பெய்தது. திடீர் வானிலை மாற்றம் மக்கள் இடையே உடல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பிரச்சனை: சென்னையில் வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் மக்கள் பலருக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.
வானிலை கணிக்க முடியாததாக மாறியதால், கடந்த மூன்று வாரங்களில், கான்ஜுன்க்டிவிடிஸ் அல்லது மெட்ராஸ் கண் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னை மட்டுமின்றி மாநிலத்தில் பல பகுதிகளில் இந்த கேஸ்கள் அதிகரிப்பைக் கண்டுள்ளது. கண் மருத்துவமனைகள் இப்போது தங்கள் வெளிநோயாளர் வார்டுகளில் கண்கள் சிவத்தல், அரிப்பு மற்றும் நீர் வெளியேற்றத்துடன் குறைந்தது பத்து நோயாளிகளை தினமும் பெறுவதாக அறிவித்துள்ளன.
பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் திடீரென இந்த கேஸ்கள் அதிகரிப்பது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வானிலை: வானிலை தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பசலனம் காரணமாக 11.08.2023 மற்றும் 12.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13.08.2023 முதல் 14.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
09.08.2023 மற்றும் 10.08.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை
முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஓட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரக்கில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): குடியியான்மலை (புதுக்கோட்டை) 4. ஸ்ரீமஷ்ணம் (கடலூர்) 3. வானமாதேவி (கடலூர்), பண்ரூட்டி (கடலூர்), மதுரை வடக்கு, புலிப்பட்டி (மதுரை), சிதம்பரம் (கடலூர்), சிவகங்கை, அண்ணாமலை நகர் (கடலூர்), அரிமளம் (புதுக்கோட்டை), காரையூர் (புதுக்கோட்டை), மதுரை தெற்கு. சிதம்பரம் AW5 (கடலூர்) தலா 2, பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), சித்தம்பட்டி (மதுரை), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), தனிமங்கலம் (மதுரை). கச்சிராயப்பாளையம் (கள்ளக்குறிச்சி), மேதூர் (மதுரை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்). விழுப்புரம், கள்ளக்குறிச்சி. சத்தியார் (மதுரை), ஆலங்குடி (புதுக்கோட்டை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை;
தமிழகடலோரப்பகுதிகள் 08.08.2023 முதல் 10.08.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications