நுரையீரல்.. அதென்ன பக்கத்துலயே..நுரையீரலின் "பாதுகாவலன்" இஞ்சி பூண்டு.. மத்தி மீனை விடாதீங்க: டிப்ஸ்
சென்னை: நம்முடைய உடலுறுப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது நுரையீரல்.. இந்த நுரையீரலை பலப்படுத்தி கொள்வதன் மூலம், தொற்றுக்களை எதிர்த்து போராடவும், தடுக்கவும் முடியும்.. அத்தகைய உதவியை, சிறு சிறு உணவுப்பழக்கங்கள் மூலமே நாம் பழக்கப்படுத்தி கொள்ளலாம் என்கிறார்கள்.
காற்று மாசுபாடு அதிகரித்து வரும் சூழலில், நுரையீரல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.. குறிப்பாக கொரோனா காலகட்டத்துக்கு பிறகு, நுரையீரல் பாதிப்பினால் பலரும் உயிரிழப்பை சந்திக்க நேர்ந்துவிட்டது..

காற்று மாசு: ஏற்கனவே, காற்று மாசுபாடு, புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை போன்ற காரணங்களினால், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மிரட்டி வரும்சூழலில், காற்று மாசுபாடு காரணமாக மட்டுமே, மேலும் பலர் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்து வருகிறது. முறையான உணவுப்பழக்கத்துடன், நோய்க் கிருமிகளும், நுண்ணுயிரிகளும், நுரையீரலை தாக்காமல் பார்த்துகொண்டாலே பெரும் ஆபத்தை நாம் தவிர்க்கலாம்.
ஆரோக்கியம்: நுரையீரலின் ஆரோக்கியத்துக்கு, உணவு முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அந்தவகையில் கிரீன்-டீ மிகச்சிறந்த காப்பானாக உள்ளது.. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளதால், அவை நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை குறிப்பாக வீக்கத்தை குறைக்கிறது..
2017-ல் கொரியாவில் இதற்கான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.. அப்போது, ஆயிரம் பேருக்கு, ஒரு நாளைக்கு 2 கப் கிரீன் டீ குடிக்க செய்துள்ளனர்.. அந்த ஆய்வில், கிரீன் டீயை குடிக்காதவர்களைவிட , கிரீன் டீ குடித்தவர்களின் நுரையீரல் செயல்பாடு சிறப்பாக இருந்ததாம். அதனால், தினமும் கிரீன் டீயை குடிப்பது நுரையீரலுக்கு நல்லது. பீட்ரூட்டையும் நிறைய உணவில் சேர்த்து கொள்ளலாம்.
மத்தி மீன்கள்: அதேபோல, மத்தி மீன்கள் நுரையீரல் நோய்க்கு சிகிச்சையாக தரப்படுகிறது.. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன்களில் நிறைய உள்ளதால், நுரையீரல் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட அது பேருதவி புரிகிறது.
பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை நுரையீரலுக்கு தேவையான சத்துக்களை தருகிறது.. அடிக்கடி சமையலில் ப்ரோக்கோலியை சமைத்து சாப்பிடலாம்.. நுரையீரலில் ஏற்படும் சேதத்தை தடுக்கும், தடுப்பு சக்திகள் இந்த புரோக்கோலியில் நிறைய இருக்கிறதாம்..
காய்கறிகள்: முட்டைகோஸ், காலிஃபிளவர்களில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் அதிகம் உள்ளதால், நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றன. அதேபோல சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு போன்றவைகளில் அதிக அளவில் கார்டீனாய்ட் சத்தும், பீட்டாகரோட்டினும், வைட்டமின் ஏ-வும் நிறைந்திருப்பதால், நுரையீரலுக்கு வலு சேர்க்கின்றன.
கொய்யா, ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, சாத்துகுடி, மாதுளை, பைன் ஆப்பிள் போன்ற பழங்கள் நுரையீரலை வலுப்படுத்துபவை.
இஞ்சி - பூண்டு: பெரும்பாலும் சமையலில் இஞ்சி, பூண்டு சேர்த்து கொள்ளலாம். நுரையீரலில் உள்ள நச்சுத்தன்மையையும், மாசுக்களையும் நீக்குவதற்கு இந்த இஞ்சி பூண்டு உதவுகிறது. 3 பல் பூண்டுகளை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுபவர்களை புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 44 சதவிகிதம் குறைவாகிறதாம். ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிடலாம்.. ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை குறைவாக உள்ளது இருக்கிறதாம்.
துளசி ஒரு அற்புதமான தீர்வாகும்.. அனைத்து சுவாச பிரச்னைகளுக்கும் சிறந்த மூலிகை.. தினமும், 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்சனைகள் சீராகும். நுரையீரலும் பலப்படும்.
ஆடாதோடை மூலிகை: அதேபோல, ஆடாதோடை மூலிகை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.. கால் ஸ்பூன் டீஸ்பூன் ஆடாதோடை பொடியை தேவையான அளவு தேனில் குழைத்து கலந்து சாப்பிட்டு வந்தால், சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாக இருக்கும்.
இரவில் தூங்கும்போது, காய்ச்சிய 1 டம்ளர் பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள், கால் டீஸ்பூன் மிளகு, கால் டீஸ்பூன் இலவங்கப்பட்டை துாள் மற்றும் சிட்டிகை ஏலக்காய் துாள் சேர்த்து குடித்து வந்தால், நுரையீரலுக்கு மிகவும் நல்லது. கற்பூரவள்ளி இலையில் நுரையீரலை சுத்தம் செய்யக்கூடிய நிறைய பண்புகள் உள்ளன. சுடுநீரில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து குடிக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications