திரிபலா இருக்குல்ல ! அதை இப்படி சாப்பிட்டு பாருங்கள்! டைட்டா இருக்கும் டிரஸ் தொளதொளனு மாறிடும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும்பாலான உடல் உபாதைகளுக்கு பயன்படும் திரிபலா சூரணம் உடல் எடை குறைய அருமருந்து என்பது தெரியுமா?

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய 3 மருந்துகளின் கலவைகள்தான் திரிபலா என்று அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களால் பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

திரிபலா ஒரு பாரம்பரிய மருந்தாகும். நாட்டு மருந்து கடைகளில் எளிமையாக கிடைக்கும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் சாப்பிடலாம். உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது இந்த திரிபலா.

Here are Amazing health tips for weight loss

இது தலைவலியை குணப்படுத்துகிறது. கண் பார்வையில் உள்ள கோளாறுகளையும் சரி செய்கிறது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை போக்கும். உணவு பாதையில் நச்சுப் பொருட்களை நீக்கி குடல் இயக்கத்தை சீராக்குகிறது. செரிமானத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மலத்தை இளக்கும் தன்மை திரிபலாவுக்கு உண்டு.

இதை இரவு நேரத்தில் சாப்பிட்டுவிட்டு படுத்தால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மலத்தின் வழியாக காலையில் வெளியேறிவிடும். முதுமையை தாமதப்படுத்தி இளமையை தக்க வைத்துக் கொள்ள வைக்கும். இந்த திரிபலாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் புற்றுநோய் வராமல் தடுக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

ரத்த சோகையை விரட்டுகிறது. இன்சுலின் சுரப்பதை அதிகரிக்க செய்கிறது. ரத்தத்தில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச்சுவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். அது போல் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் பருமனை கட்டுப்படுத்தும்.

ரத்தத்தில் உள்ள நச்சு பொருட்களை சுத்தரிக்கும். தோல் நோய்கள் வராமல் தடுக்கும். அது போல் சைனஸ் பிரச்சினைக்கு அருமையான தீர்வு இந்த திரிபலா. இதில் நெல்லிக்காய் இருப்பதால் சளி பிடிக்கும் என்றில்லை. குறிப்பாக இது சளியை கரைத்து வெளியே அனுப்புகிறது. திரிபலா சூரணத்தை பல்பொடியாகவும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

அது போல் ரத்த போக்கை நிறுத்தும். மாதவிடாய் காலங்களின் போது ரத்த போக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் குணம் இதற்கு உண்டு. இந்த திரிபலாவை அளவுக்கு மேல் எடுத்துக் கொண்டால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த சூரணம் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு மருந்தாகும்.

தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் திரிபலா எடுத்துக் கொள்ளலாம். வாயுத் தொல்லை, அஜீரணம், புளிப்பு ஏப்பம் போன்றவற்றை சரி செய்யும் ஆற்றல் திரிபலாவுக்கு உண்டு. திரிபலாவை உட்கொண்டு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். ஆஸ்துமாவையும் விரட்டும். உடல் எடை குறைய திரிபலா பவுடரை இரு டீஸ்பூன் தண்ணீரில் கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடையை குறைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+