இந்த 3 மாத்திரைகளை உங்கள் பாக்கெட்டில் வைத்திருங்கள்! மாரடைப்பு வந்தாலும் தீர்க்காயுசாக இருக்கலாம்!
சென்னை: மாரடைப்பில் இருந்து உயிரை காக்கும் மூன்று மாத்திரைகள் எப்போதும் நம்முடன் வைத்திருந்தால் அது உதவியாக இருக்கும். அந்த மாத்திரையின் பெயர் என்ன என்பதையும் அதற்கான டோஸ்களையும் தெரிந்து கொள்ளலாம்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்டிரால் இவையெல்லாம் இதய நோயுடன் ஒன்றோடு ஒன்று சார்ந்தது என கூறுகிறார்கள். இதனால்தான் ரத்த அழுத்தம் இருந்தால் மாரடைப்பு, நெஞ்சுவலி வர வாய்ப்பிருக்கிறது என்பதால் அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே இதயத்தில் பிரச்சினை உள்ளவர்கள் கூட தங்களது பிபி, சுகர் கொலஸ்டிரால் போன்றவற்றை பார்த்துக் கொள்ள வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டதும் கோல்டன் ஹவர் என சொல்லும் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்துவிட்டால் உயிருக்கு உத்தரவாதம். இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
எனவே உயிர் காக்கும் மருந்துகள் மூன்றை தங்கள் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். இதுகுறித்து மருத்துவர் லாவண்யா அருண் கூறியிருப்பதாவது: இந்த 3 மாத்திரைகள் இருந்தால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உயிரை உங்களால் காக்க முடியும்.
ஆஸ்பிரின் (ASPIRIN)300 எம்ஜி, குளோபிடோகிரெல் 300 எம்ஜி (CLOPIDOGREL), ஸ்டாடின் (STATIN) 80 எம்ஜி. இதை தனித்தனியாக வாங்கி வைத்தாலும் சரி, இது மூன்று மருந்துகளும் கலந்த சிறிய மாத்திரையை வாங்கி வைத்தாலும் சரி என தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த 3 மாத்திரைகளை போட்டுக் கொண்டாலும் உடனே மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். இந்த மாத்திரைகள் உங்களது உயிரை சில மணிகளுக்கு பிடித்து வைத்திருக்கும் அவ்வளவே!
மாரடைப்புக்கும் ஹார்ட் அட்டாக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மாரடைப்பு (cardiac arrest) என்பது மிகவும் அவசரநிலையாகும். அதாவது இதய துடிப்பு நின்றுவிட்டது என்பது அர்த்தமாகும். உடனே நுரையீரலின் செயல்பாடும் நின்றுவிடும்.
இதனால் ஹார்ட் ரே்ட் , ரெஸ்பிரேட்டரி ரேட் என இரண்டுமே இருக்காது. மூச்சும் இருக்காது, இதயத் துடிப்பும் இருக்காது. உடம்பு ஜில்லுனு ஆகிவிடும். கண்கள் பெரிதாகிவிடும். கண்களின் கருவிழி ஒரே இடத்தில் நின்றால் நோயாளி இறந்துவிட்டார் என்று அர்த்தம். இதய துடிப்பு நின்று உடம்பெல்லாம் ஜில்லுனு ஆகி ஒருவர் மயங்கிவிட்டால், அவருக்கு சிபிஆர் (Cardiac Pulmonary Resuscitation) சிகிச்சை உடனடியாக கொடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கொடுப்பதன் மூலம் அவரது இதய துடிப்பை கொண்டு வர முடியும். உடனே நம்முடைய நுரையீரலும் செயலாற்றும். அவருடைய நினைவுகளையும் திரும்ப கொண்டு வரமுடியும். இதுதான் இதய துடிப்பு நின்றவர்களுக்கு முதலுதவியாக நாம் செய்ய வேண்டியது. இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் நமது இடது புறத்தில் நெஞ்சு எலும்பின் கீழ் பகுதியில் நம் உள்ளங்கைகளால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
15 முறை நெஞ்சில் அழுத்தம் கொடுத்தால் இரு முறை வாயோடு வாய் வைத்து சுவாசத்தை கொடுக்க வேண்டும். இப்படி சிபிஆர் சிகிச்சை மூலம் நோயாளியின் இதய செயல்பாட்டை கொண்டு வந்தவுடன் அவருக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகளை கொடுத்தால் நாம் அவர்களுடைய உயிரை காக்கலாம்.
ஹார்ட் அட்டாக்கும் அவசர நிலைதான். நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு செல்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்து கொடுப்பது இதயம்தான். இதயத்திற்கே ரத்தத்தை சப்ளை செய்வது கரோனரி ஆர்ட்ரி என்பதாகும். இந்த ஆர்ட்டரியின் செயல்பாடு என்னவென்றால் இதயம் துடிப்பதற்காகவும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்புவதற்கும் பயன்படுகிறது.
ஹார்ட் அட்டாக் வந்தால் நெஞ்சு வலிதான் வரும் என்றில்லை. சிலருக்கு இடது புற தோள் பட்டை பகுதியில் வலியை கொடுக்கும். கழுத்து பகுதி, தொண்டை பகுதிகளில் இறுக்கம் தெரியும், மூச்சுத் திணறல், வாந்தி, அதிகமாக வியர்த்தல், சிலருக்கு நெஞ்சு பகுதியிலிருந்து பின்புறம் வரை வலி இருக்கும். இவையெல்லாம் ஹார்ட் அட்டாகின் அறிகுறிகளாகும்.












Click it and Unblock the Notifications