Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடை குறைப்பு நல்லதுதான்.. ஆனால் அதிக உடற்பயிற்சி வேண்டாம்.. பரிதாபமாக பறிபோன உயிர்! வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உடல் பருமன் காரணமாக இப்போது பலரும் தீவிர உடற்பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், ஓவராக அதைச் செய்வதும் கூட மோசமான இழப்பை ஏற்படுத்தும்.

இந்த நவீனக் காலத்தில் ஒரே இடத்தில் பல மணி நேரம் வரை அமர்ந்து தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், துரித உணவுகளையும் நாம் அதிகளவில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளோம்.

இந்த வாழ்க்கை முறை மாற்றத்தால் உடல் பருமன் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. உடல் பருமன் பிரச்சினையால் இதய பாதிப்புகள், நீரிழிவு தொடங்கி உயிரிழப்புகள் கூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

 High-Intensity Exercises might cause serious injury if not done properly

சீன இளைஞர்: இதனால் உடல் பருமனாக இருக்கும் பலரும் எடையைக் குறைக்க ஜிம்மில் சென்று தீவிர உடற்பயிற்சியையும் செய்கின்றனர். டயர்ட், தீவிர உடல் பயிற்சி என அவர்கள் தங்கள் உடலை எந்தவொரு எக்ஸ்டிரிமீற்கும் எடுத்துச் செல்கிறார்கள். இருப்பினும், மிகத் தீவிரமாக உடற்பயிற்சி செய்வதும் கூட நமக்குப் பேராபத்தையே தரும். அப்படித்தான் வெறும் 21 வயதே ஆன இளைஞர் ஒருவர் தீவிர உடற்பயிற்சி காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார்.

சீனாவில் டிக்காக் பிரபலமாக இருந்தவர் குய்ஹுவா. இவர் அங்கே சமூக வலைத்தளங்களில் ரொம்பே பேமஸ் ஆன நபர். 21 வயதே ஆன அவரது எடை 90 கிலோவாக இருந்தது. எடையைக் குறைக்க முடிவு செய்த குய்ஹுவா, ஜிம்மில் சேர்ந்து தீவிர உடற்பயிற்சி செய்துள்ளார். கடுமையான டயர்ட்டை பின்பற்றிய அவர் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டார். அதேநேரம் மறுபுறம் மிகத் தீவிரமான உடற்பயிற்சியிலும் அவர் இறங்கினார். ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்தார்.

தீவிர ஓர்க்அவுட்: தனது உடற்பயிற்சி வீடியோக்களையு்ம அவர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். பளு தூக்குதல், வாக்கிங், ஜாக்கிங் எனத் தீவிரமான கார்டியோ உடற்பயிற்சிகளை அவர் அதிகம் செய்துள்ளார். இதன் மூலம் ஆறு மாதங்களில் 36 கிலோ எடையைக் குறைத்தார். உடல் எடையைக் குறைத்தே ஆக வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த அவர், சரியான அளவிலும் அவர் உணவை எடுத்துக் கொள்ளவில்லை. அதேநேரம் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியைத் தீவிரப்படுத்தினார். இதுவே அவருக்கு எமனாக மாறிவிட்டது.

வெறும் 21 வயதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மரணத்தை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். திடீரென தீவிர உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதும் உணவைப் போதியளவில் சாப்பிடாததுமே மரணத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இவரது மரணம் தீவிர உடற்பயிற்சி பாதுகாப்பானது தானா என்ற கேள்வியை எழுப்புகிறது. இது குறித்து சற்று விரிவாகவே பார்க்கலாம்.

என்ன பிரச்சினை: தீவிர உடற்பயிற்சிகள் குறித்து வல்லுநர்கள் கூறுகையில், " HIIT எனப்படும் அதிதீவிர ஓர்க்அவுட்கள் மூலம் அதிக எடையை இழக்க முடியும் என்பதால் இது ரொம்பவே பிரபலம். எடையைக் குறைக்கும் போது ​​நீங்கள் கொழுப்பை எரிக்கவும், தசையை வலுவாக்க முயல்வீர்கள். அப்போது உங்கள் உடல் கார்போ ஹைட்ரேட்டுகளுக்கு மாறாகக் கொழுப்பிலிருந்து ஆற்றலை எடுத்துப் பயன்படுத்தும்" என்கிறார்கள்.

இருப்பினும், ஓவராக உடற்பயிற்சி செய்தால் அது ஆபத்தில் முடியும். இது காயம், எலும்பு முறிவு போன்ற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த அதிதீவிர உடற்பயிற்சிகளை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே செய்ய வேண்டும். அப்போது தான் உடல் எடை குறைப்பும் சரியாக இருக்கும். மேலும், நமது உடலுக்கும் மோசமான ஆபத்து ஏற்படாது.

பாகிப்புகள்: அதிகமாகத் தீவிர உடற்பயிற்சிகளைச் செய்தால் அது பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இவை நமது உடலின் கார்டிசோல் அளவை உயர்த்துகிறது. இதனால் மன அழுத்தம், செரிமான பிரச்சினைகள், வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு கூட ஏற்படும். பல உளவியல் பிரச்சினைகளும் ஏற்படும். அடுத்து போதிய ஓய்வு இல்லாமல் அடிக்கடி உடற்பயிற்சி செய்தால் கிளைகோஜன் பற்றாக்குறையால் பலவீனம், தலைச்சுற்றல் போன்ற பாதிப்பும் ஏற்படும்.

மேலும் வளர்சிதை மாற்றம் & மூட்டு வலி ஆகிய பிரச்சினைகளையும் அவை ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சியும் எடையைக் குறைப்பதும் நல்லதுதான் என்றாலும், ஓவராக போனால் அதுவும் நமது உடல்நிலையை மிகக் கடுமையாகப் பாதிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+