பிளேட்லெட்டை அதிகரிப்பது முதல் கேன்சரை தடுப்பது வரை.. பப்பாளி இலை சாற்றை செய்வது எப்படி?
சென்னை: ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளை அதிகரிக்கும் மாயாஜாலம் கொண்ட பப்பாளி இலைகளின் சாற்றை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
டெங்கு காய்ச்சல் வந்தாலோ இல்லாவிட்டால் வேறு சில காரணங்களாலோ ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் பல பிரச்சினைகள் எழும். அதாவது ரத்தக் கசிவை நிறுத்த முடியாத நிலை ஏற்படும்.
உடலின் உள்ளுறுப்புகளில் இருந்தும் தோலுக்கு அடியில் இருந்தும் ரத்தக் கசிவுகள் நடக்கும். அது போல் பல் தேய்க்கும் போது ஈறுகளில் இருந்து ரத்தம் கசிந்தாலும் அதை நிறுத்துவது கடினம். பிளேட்லெட் கவுண்ட் குறைந்தால் மாதவிடாய் ரத்த போக்கும் அதிகரிக்கும்.

உடல் சோர்வாக இருக்கும். மலம், சிறுநீரில் ரத்தம் கசியும். உடலில் ஆங்காங்கே படைகள் ஏற்படும். உடலில் காயம் ஏற்பட்டால் நீண்ட நேரமாக ரத்தம் வந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சினைகளுக்கு ஆங்கில மருந்துகள் இருந்தாலும், இயற்கையான முறையில் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் பிளேட்லெட் கவுன்ட்களை அதிகரிக்கலாம்.
அதற்கு பப்பாளி இலை சாறு உதவுகிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என்றால், 2 முதல் 4 பப்பாளி இலைகளை தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு அதில் உள்ள நரம்புகளை எடுத்துவிட்டு , இலைகளை சிறிய துண்டுகளாக போட வேண்டும். பிறகு 200 மில்லி தண்ணீரில் இந்த இலைகளை போட்டு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு சேர்க்க வேண்டும்.
அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து செய்ய வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 100 மில்லியாக குறையும். அப்போது வடிகட்டி ஆற வைத்து அதை குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 100 மில்லி வரை மட்டுமே குடிக்க வேண்டும். இது பெரியவர்களுக்கு, குழந்தைகளுக்கு என்றால் 25 மில்லி முதல் 50 மில்லி வரை இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கொடுக்கலாம்.
இந்த பப்பாளி இலைகள் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்தலாம். ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஆன்டி இன்ஃபிளமேட்டரி இருப்பதால் தோலில் உள்ள தடிமன்கள் (rashes), தசை வலி, மூட்டு வலி, உள்ளிட்டவை குணமாகும். முடியின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானதாகும். தோலின் ஆரோக்கியத்தை காக்கிறது. கேன்சரை உருவாக்கும் செல்களை அழித்தும் அந்த நோய் வராமலும் பாதுகாக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சாற்றை அருந்தினால் நோயின் வீரியம் குறைகிறது என்கிறார்கள்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications