சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பது எப்படி?....எளிய அழகு குறிப்புகள்!
சென்னை: அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை (Good Glowing Skin) பிரகாசமாகவும் அழகாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள், குறிப்பாக திருமணம், வீட்டு விசேஷங்களில், அதற்காக பல லோஷன்ஸ், கிரீம்ஸ், காஸ்ட்லி மேக் அப் பொருட்கள் கொண்டு, தங்களை அழகுபடுத்திக்கொள்கிறார்கள். பின் நாட்களில் அவை சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தி அழகையும், சருமத்தையும் பதிப்படையச்செய்யும். எப்போது இயற்கையான முறையில் அழகை பராமரிப்பு மிகவும் சிறந்தது.
நாம் வெப்பமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதால், நல்ல ஆரோக்கியமான முறையில் தோல் பராமரிக்க, வைட்டமின் சி (நெல்லிக்காய், எலுமிச்சை, பச்சை பயிறு) மிக முக்கிய பங்கு வகுக்கிறது. தினசரி குறைந்தது 3 - 4 லிட்டர் அளவில் சாதாரண தண்ணீர் குடிப்பது, உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்றும், பெண்கள் தினமும் தலை குளிப்பது நல்லது, முடியாதவர்கள் வாரத்தில் 1- 2 முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை குளித்தால் மிகவும் நல்லது.

எல்லா வகையான காய்கறிகள் குறிப்பாக (புதினா, கொத்தமல்லி சென்டனி) வதக்காமல் நேரடியாக பயன்படுத்துவது, நஞ்சற்ற பழ வகைகள் சாப்பிடுவது, மட்டன் எலும்பு சூப் (mutton bone soup), பாதாம், பிஸ்தா, முந்திரி, எள்ளு, ஆகியவை எடுத்துக்கொள்ளலாம். உடல் உஷ்ணத்தை அதிகரிக்க கூடிய உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள் (Fried foods) தவிர்க்க வேண்டும். இப்படி அடிப்படையான விஷயங்களை பின்பற்றினால் தோல் தொந்தரவு, தோல் வறட்சி ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
தோல் வறட்சிக்கு காரணம்: தோல் வறட்சி வருவதற்கு முக்கிய காரணம் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குறைபாட்டினால் வருவதாகும், அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பல்வேறு பழ வகைகளிலிருந்து நேரடியாக கிடைப்பதால் தினமும் பழங்கள் சாப்பிடுவது, அதிலும் சிவந்த நிறப்பழ (தக்காளி, மாதுளம்பழம், பப்பாளி, சிவப்பு கொய்யாக்காய், நாவல்பழம், எழந்தப்பழம்) வகைகள் உட்கொள்வது தோல் வறட்சி வராமல் தடுக்கவும், சருமத்தை அழகைமெருகேற்ற உதவும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சருமத்தை முறையாக பராமரித்துவந்தால், நிச்சயம் அழகு குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
வறண்ட சருமம் பளபளக்க: தினமும் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். தினமும் 1 ஸ்பூன் அளவு தேன் சாப்பிடவும். இரவு தூங்குமுன் 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும். மத்திய உணவில் சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளவேண்டும். வாரத்தில் 3-4 நாட்கள் லெமன் ஜூஸ் குடிக்கலாம் (குளிர் காலத்தில் தவிர்க்கவேண்டும்). நித்தம் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம். காரட் மற்றும் வெங்காயத்தை சாலட் போல் கலந்து அடிக்கடி காலையில் சாப்பிடலாம். வாரத்தில் 2 முறை ஸ்பூன் வெண்ணெய் சாப்பிட்டுவரலாம். தினமும் இரவில் படுக்கும் போது ஆலிவ் எண்ணெய் தேய்த்து கொள்ளுங்கள். வாரத்தில் 1-2 முறை ஆலிவ் எண்ணெய் முகத்தில் தேய்த்து 1/2மணி நேரம் கழித்து முகம் கழுவினால், தோல் அழகாக இருக்கும்.

ஃபேஸ் பேக்: அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 5 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். கடலை மாவு, 3-5 தூளி தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசிவர கரும்புள்ளி மறையும். முழங்கை, மற்றும் முழங்காலில் பூசலாம் நல்ல பலன் தரும். பச்சை பயிறு மாவு, சிறிது பால், தேன், பண்ணீர் நீர் கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால், முகம் பளபளவென்று இருக்கும். வறண்ட சருமத்திற்கு பாலில் கசகசாவை ஊறவைத்து மைய அரைத்து, 10 நிமிடம் பூசி பின் முகம் கழுவினால் நல்ல தீர்வு கிடைக்கும். பால் ஏடு, அல்லது உருளைக்கிழங்கு மைய அரைத்து, 10 நிமிடம் முகத்தில் தடவி பிறகு கழுவவேண்டும் சருமம் மென்மையாக இருக்கும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications