தோசைக்கு மாவு அரைக்க போறீங்களா? இந்த கொண்டைக் கடலையையும் சேருங்களேன்! வெரி ஹெல்தி!
சென்னை: சதா இட்லியும் தோசையும் செய்து போர் அடித்துவிட்டதா, அப்படியென்றால் இந்த கொண்டைக்கடலையில் ஒரு ரெசிபி செய்து பாருங்கள். புரதச்சத்தும் கிடைக்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் ஏறாமல் இருக்கும்.
தினமும் காலையும் இரவும் இட்லி, தோசை, இதை விட்டால் பொங்கல், அதையும் விட்டால் இந்த பாழாய் போன உப்புமா என புலம்பாத ஆண்களே இருக்க மாட்டார்கள். சப்பாத்தி, பூரி எல்லாம் வார இறுதி நாட்களில்தான் கிடைக்கும்.

இயந்திரத்தனமான வாழ்வியல் முறையில் நேரத்தை மிச்சப்படுத்த என்னெல்லாம் செய்யலாம் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறதே தவிர வேறு எதையும் புதிதாக செய்ய தோன்றுவதில்லை.
இட்லி, தோசையில் அரிசி இருப்பதால் அவற்றில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதனால் இதை உண்ண சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. மேலும் குழந்தைகளுக்கும் தேவையான புரதச்சத்து தேவைப்படும் என்றால் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.
அதாவது அரிசிக்கு பதில் சிறு தானியம் அல்லது பாரம்பரிய அரிசியை கொண்டு தோசையை தயாரிக்கலாம். அவற்றுடன் உளுந்துக்கு பதிலாக கருப்பு கொண்டை கடலை அல்லது வெள்ளை கொண்டை கடலையை உபயோகிக்கலாம். இவற்றில் புரதச் சத்து இருக்கிறது.
இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கருப்பு அல்லது வெள்ளை கொண்டை கடலை - 1 கப்
இட்லி அரிசி அல்லது பாரம்பரிய அரிசி அல்லது சிறுதானியம்- அரை கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி- சிறிய துண்டு
சீரகம்- அரை டீஸ்பூன்
கொத்தமல்லி- கைப்பிடி அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
கொண்டை கடலையையும் அரிசியையும் (எந்த அரிசியாக இருந்தாலும் சரி) நன்கு கழுவி 8 முதல் 10 மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை கொண்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாவை புளிக்க வேண்டும் என அவசியம் இல்லை. தேவைப்பட்டால் புளிக்க வைத்துக் கொண்டு பிறகு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, தோசை கல்லில் ஊற்றி நெய் அல்லது வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வார்த்து எடுக்கவும். இதற்கு தொட்டுக்க எதுவும் தேவையில்லை. தேவைப்பட்டால் கார சட்னி, அல்லது கடலை சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
கொண்டைக் கடலையில் நார்ச்சத்துகள் உள்ளன. இதை உட்கொண்டால் ஜீரண உறுப்புகள் மற்றும் குடலின் ஆரோக்கியம் மேம்படும். கொண்டைக்கடலையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து மேம்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications