இனி மழைக்காலம்! இட்லி , தோசைக்கு மாவு அரைத்தால் புளிக்க வைப்பது எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இட்லி, தோசை மாவுகள் புளித்துவிட்டால் என்ன செய்வது என்பதைத்தான் இத்தனை நாட்களாக நாம் பார்த்திருந்தோம். ஆனால் மழைக் காலங்களிலும் மார்கழி மாத குளிர்காலங்களிலும் நாம் அரைக்கும் மாவு புளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

தினமும் காலையும் இரவும் டிபனுக்கு தேடுவதே இல்லத்தரசிகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். மண்டையை போட்டு பிய்த்து கொள்வாார்கள். இட்லியா, தோசையா, சப்பாத்தியா, பூரியா, இல்லை உப்புமாவா என யோசனை இருக்கும். இது கூட பரவாயில்லை.

health idly dosa

ஆனால் இந்த இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஒன்றை தேடும் போதுதான் பிரச்சினையாகவே இருக்கும். சட்னியா, சாம்பாரா, மிளகாய் பொடியா, குருமா குழம்பா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். இது ஒரு புறம் இருக்கும்.

அதே வேளையில் இட்லி மாவை அதிகளவு புளிக்கவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே புளித்து விட்டால், இட்லி, தோசைக்கு என்ன சைட் டிஷ் செய்தாலும் சாப்பிட நன்றாகவே இருக்காது. இந்த மாவு அதிகளவு புளிக்கவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு பிரச்சினையாக இருக்கும்.

அது போல் மழைக்காலங்களிலும் பனிக்காலங்களிலும் மாவை புளிக்க வைக்கவும் கஷ்டப்படுவார்கள். இட்லி, தோசை மாவுகள் ஓவராக புளித்தாலும் நன்றாக இருக்காது, புளிக்கவில்லை என்றாலும் இட்லி கல் போல் வரும். சாப்ட்டாக இருக்காது. இந்த பிரச்சினையை ஒரு சிலர் அவர்களின் பருவமழையின் போது அனுபவிப்பார்கள்.

ஆனால் மலைப்பிரதேசங்களில் வாழும் மக்கள் மாவை புளிக்க வைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்களுக்கான டிப்ஸ்களை பார்ப்போம். மிக்ஸியில் அரைப்பது எப்படி என்பவதை பார்க்கலாம். இட்லி, தோசை எதுவாக இருந்து அரிசியானது 8 மணிநேரம் அல்லது குறைந்தது 4 மணி நேரமாவது ஊற வேண்டும்.

இந்த அரிசியை கொஞ்சம் கொஞ்சாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அது போல் ஊற வைத்த உளுந்தை எடுத்துக் கொள்ளவும். இது 2 மணி நேரம் ஊறினால் போதுமானது. அதிக நேரம் ஊறவைத்தால் அரைக்கும் போது மாவு உபரி கிடைக்காது. மாவு அரைத்தவுடன் உளுந்தையும் அரிசியையும் கலந்து விட்டு உப்பு சேர்த்து மாவு புளித்தால் எழும்பும் என்பதால் உயரமான பாத்திரத்தில் வைக்கவும்.

இதனிடையே அடுப்பை ஆன் செய்ய வேண்டும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை அந்த பர்னரை சூடேற்றி அணைத்துவிட வேண்டும். மாவு அரைத்து உப்பு போட்டு கரைத்ததும் அந்த மாவை எடுத்து சூடேற்றிய பர்னரில் வைக்கவும். அந்த சூடே மாவை புளிக்க வைத்துவிடும். அந்த பர்னரிலேயே இரவு குறைந்தது 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும். மறுநாள் பார்த்தால் மாவு புளித்திருக்கும்.

மாவு பாத்திரத்தின் உயரத்திற்கு எழும்பாமல் இருந்தால் உடனே மாவு புளிக்கவில்லை என நினைத்து விடாதீர். மாவில் சிறிய சிறிய ஓட்டைகள் இருந்தாலே அது நொதித்துவிட்டது என்று அர்த்தம். இல்லாவிட்டால் மாவு அரைத்ததும் அதில் பேக்கிங் சோடா சேர்த்த கலந்து விட்டாலும் அது புளிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+