தோசை மாவு.. அரைச்ச மாவு புளிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்.. இட்லி மாவு இந்த பக்குவத்தில் அரைக்கணும்
சென்னை: இட்லி மாவு இல்லாத தென்னிந்திய வீடுகளே இருக்க முடியாது.. இந்த இட்லி மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ குட்டி குட்டி டிப்ஸ்:
இட்லி மாவில் கலோரிகள் குறைவாகவே இருப்பதால், உடல் எடையை குறைக்க நிறையவே உதவி செய்யும்... மேலும், இட்லியில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளது.

இதன்காரணமாக, பசி உணர்வும் எடுக்காது. எளிதில் ஜீரணமாகும்.. இந்த செரிமானத்துக்கு காரணம், இட்லி மாவு புளிக்கும்போது, புரோ பயாடிக்குகளை உருவாக்குகிறது.. செரிமானம் மேம்படவும், நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்தவும் இந்த புளிப்பு மாவு அவசியம். ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லிக்கு பெரும் பங்கு வகிக்கிறது...
சத்துக்கள்: தசைகளை வலிமையடைய செய்கின்றன இட்லிகள்.. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பை தருகிறது. வாயு தொந்தரவு இருப்பவர்கள், தினமும் இட்லி சாப்பிடுவது சிறந்தது.. இதனால், வயிற்றிலுள்ள புண்கள் ஆறிவிடும்.
ஒரே ஒரு இட்லியில் மட்டும் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கின்றனவாம்.. கொழுப்புச்சத்து இதில் கிடையாது. அந்தவகையில் இட்லி ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதால், கொழுப்புச்சத்து இதில் இருக்க வாய்ப்பில்லை..
இட்லி மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கிரைண்டரில் பழைய மாவு ஏதும் தங்கியிருந்துவிடாமல், நன்றாக கழுவி எடுத்து, புது அரிசியை அரைக்க வேண்டும்.
உளுந்து மாவு: உளுந்து 1 மணி நேரம் வரை மட்டுமே ஊற வேண்டும். அரிசி 3-லிருந்து 4 மணி நேரம் வரை மட்டுமே அரிசி ஊற வேண்டுமே தவிர, இரவெல்லாம் ஊறவிடக்கூடாது. இதனால் மாவு புளித்து விடவேண்டும்.
மாவு அரைக்கும்போது இப்போதும் ஐஸ் வாட்டரை மட்டும் பயன்படுத்த வேண்டும்.. 20 நிமிடத்துக்குள் உளுந்து பொங்கி விடும் என்பதால், அப்போதே எடுத்துவிட வேண்டும். அரிசியை தனியாக அரைக்க வேண்டும்.. அரிசி 15 நிமிடத்தில் அரைந்துவிடும். இப்போது, உளுந்து, இட்லி இரண்டு மாவையும் ஒன்றாக கொட்டி,5 நிமிடம் ஆட்டி எடுத்து கொள்ளலாம்.. இதனால், கைகளால் மாவை கலக்க வேண்டியதில்லை.
தோசை மாவு: இரண்டு மாவையும் கலக்கும்போது, கைகளால் கலக்காமல் கரண்டியை பயன்படுத்த வேண்டும். டப்பா அல்லது பாத்திரத்தில் மாவு கொட்டி, காற்று போகாமல் மூடி வைக்க வேண்டும். ஆனால், உப்பு சேர்க்காமல் கரைத்து வைக்க வேண்டும்.. இல்லாவிட்டால் மாவு புளித்துவிடும்.. கிரைண்டரில் மாவு அரைக்கும்போது இடையிடையே மாவை தள்ளிவிடும்போதுகூட கரண்டியையே பயன்படுத்தலாம்.
அதேபோல, பாத்திரத்தின் அடியில் 2 வெற்றிலையை காம்புடன் வைத்து, அதற்கு மேல் மாவை ஊற்றி வைத்தாலும் மாவு புளிக்காமல் இருக்கும். இட்லி மாவுக்கு மேல் ஒரு வாழையிலையை நறுக்கி வைத்து மூடினாலும் மாவு புளிக்காமல் இருக்கும்.
ஓமவல்லி: அதேபோல, மாவு அரைத்து உப்பு போட்டு கலந்த பிறகு, அதில் 5 ஓமவல்லி இலைகளை போட்டாலும் மாவு புளிக்காது. காரணம், ஓமவல்லி இலைகளில் காரத்தன்மை உள்ளதால், மாவிளை புளிக்க செய்யாமல் தடுத்துவிடுமாம்.
ஒரு பெரிய பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி அதன் மேல் மாவு பாத்திரம் வைக்கலாம். பிரிட்ஜ் இல்லாவிட்டால் அல்லது கரண்ட் இல்லாவிட்டால் இப்படி செய்யலாம்.
புளிக்காத மாவு: ஃப்ரிட்ஜில் அரைத்த மாவு, உப்பு போடாமல் வைப்பதால் புளிக்காமல் இருக்கும். எனவே, உங்களுக்கு எப்போது எவ்வளவு தேவையோ, அவ்வளவு மாவு மட்டும் வெளியே எடுத்து உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளலாம்.
ஆனால், பிரிட்ஜில் உள்ளது புளிக்காத மாவு என்பதால், நீங்கள் உபயோகப்படுத்துவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பேயே மாவை எடுத்து வெளியை வைக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு தேவையான அளவிற்கு மாவு புளிக்கும்.. ஒருவேளை மாவு புளித்துவிட்டால், சிறிதளவு அரிசி மாவு அல்லது பால் சேர்த்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications