கொத்து கொத்தா முடி கொட்டுதா? கற்றாழை + தேங்காய் எண்ணெய் போட்டால் போதும்! வீட்டில் முடியே இருக்காது
சென்னை: முடி உதிர்வு பிரச்சினை இருந்தால் அதை கட்டுப்படுத்த கற்றாழை எண்ணெய்யை பயன்படுத்தலாம் என்கிறார்கள். கற்றாழை தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
முடிக்கு குளிர்ச்சி முதல் போஷாக்கையும் இந்த கற்றாழை கொடுக்கிறது. இன்று பெரும்பாலானோருக்கு முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுவதை பார்க்கிறோம். அது போல் முடி உதிரும் பிரச்சினையும் 10ல் 7 பேருக்காவது இருக்கிறது.

முடி உதிராமல் இருக்க எதை தின்றால் பித்தம் தெளியும் என மக்கள் தேடி வருகிறார்கள். ஆனால் இதற்காக சில ஆயிரங்களை செலவு செய்து ஹேர் ஆயில், சீரம், ஷாம்பு உள்ளிட்டவற்றை வாங்குவார்கள். ஆனால் ரிசல்ட் என்னவோ ஒன்றுமே இருக்காது.
இதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு கற்றாழை எண்ணெய்யை பயன்படுத்தி பாருங்கள். கற்றாழையில் முற்களையும் பச்சை நிறத்தையும் கட் செய்தால் அதில் இருந்து நுங்கு போல் ஒரு ஜெல் வரும். அது கூந்தலை மென்மையாக்கும். முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும். அடர்த்தியை அதிகரிக்கும்.
இந்த எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம். கற்றாழை தண்டு சிறியது, தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்டை இரண்டு பகுதிகளாக வெட்டி ஜெல்லை ஒரு கின்னத்தில் போட்டுக் கொள்ளவும். இந்த ஜெல்லை அரை கப் தேங்காய் எண்ணெய்யுடன் கலக்கவும். அதாவது இரண்டையும் சம அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை மிதமான சூட்டில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை சூடாக்கவும், அடுப்பை அணைத்து விட்டு அதை ஆறவிடவும். பின்னர் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்த வேண்டும். இந்த தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால் பொடுகு மற்றும் முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. வீக்கான முடியை ஸ்ட்ராங் செய்யும். இது முடியை அடர்த்தியாக்கும். இந்த கற்றாழையில் விட்டமின்கள், மினரல்கள் உள்ளன. இதனால் இது இயற்கையான சீரம் போல் செயல்படும். வறண்ட முடிக்கும் சிக்கான முடிக்கும் ஒரு ஜெல் போல் செயல்படும்.
ஸ்கால்ப்பில் ஏற்படும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படுகிறது. தேங்காய் எண்ணெய்யும் கற்றாழையும் முடியை வலிமையாக்கும். முடி உடைதலை தடுக்கும். முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தேங்காய் எண்ணெய்யில் மாய்சரைசிங் தன்மை இருக்கிறது. இதனால் முடிக்கு தேவையான புரதத்தை அளிக்கும். முடியை பாதுகாக்கும். உப்பு தண்ணீரில் தலைக்கு குளிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து பிஎச் அளவை சரியாக வைத்திருக்கும்.
கற்றாழை சருமத்திற்கும் நன்மையை தரும். தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு அத்துடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications