செவ்வாழை.. ஒரே வாழைப்பழத்தில் இவ்ளோ நன்மை? ஆண்களின் வரப்பிரசாதம் செவ்வாழைப்பழம்.. வாழ வைக்கும் வாழை
சென்னை: வாழைப்பழத்தில் உள்ள தாதுக்களும், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆண்களுக்கான சில குறைபாடுகளை தீர்ப்பதாக சொல்கிறார்கள்.. வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் A, B6, C, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன.. ஒரே ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மட்டும், மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது என்கிறார்கள்.

சத்துக்கள்: இந்த வைட்டமின் C, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.. மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வைட்டமின் B6 தருகிறது.. செரிமான ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வாழைப்பழத்திலுள்ள நார்ச்சத்துக்கள் தருகின்றன..
இவைகளில் A,B,E, இரும்புசத்து, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள், ஆண்களின் குறைபாடுகளை போக்க மிக முக்கியமாக உவுகிறதாம். ஆண்களுக்கான ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்கவும், தாம்பத்திய வாழ்வில் சிறக்கவும், தினம் ஒரு பழம் சாப்பிட்டால் போதும் என்கிறார்கள். ட்ரைடோபான் (tryptophan) என்கிற அமினோ அமிலங்கள், மனஅழுத்தத்தை போக்கி, மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறதாம்.
பொட்டாசியம்: இதிலுள்ள ப்ரொமைலின் என்ற சிறப்பு நொதியை கொண்டிருக்கிறது இந்த வாழைப்பழம்.. டெஸ்டோஸ்டிரான் சுரப்பை அதிகரிக்க செய்யும். ஆற்றலையும் தரக்கூடியது. செரட்டோனின் சுரப்பையும் அதிகரிக்க கூடிய தன்மை வாழைப்பழங்களுக்கு உண்மை.
400 mg பொட்டாசியம் இந்த பழத்தில் உள்ளதால், ஆண்களின் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராகிறது.. சிறுநீரகம் சிறப்பாக செயல்படுவதுடன், எலும்புகளின் தேய்மானத்தையும் தடுக்க செய்கிறது.
குழந்தை பேறு: வாழைப்பழ தோலிலுள்ள மெலட்டோனின் என்ற மூலப்பொருள், ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோய், மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறதாம். பிறப்புறுப்பு புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை இந்த வாழைப்பழத்துக்கு உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன..
அனைத்து வாழைப்பழங்களுமே நல்லதுதான் என்றாலும், ஒருநாளைக்கு 2 செவ்வாழையை, 48 நாள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான நரம்புகள் பலம்பெற்று, ஆண்மைக்கோளாறுகள் நீங்கிவிடும் என்கிறார்கள்.. அதனால்தான், இந்த செவ்வாழைக்கு "குழந்தை பேறு தரும் பழம்" என்பார்கள்.
செவ்வாழைப்பழம்: செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. ஒருவேளை இந்த நேரத்தில் முடியாவிட்டால் பகல் 11 மணிக்கு சாப்பிடலாம் அல்லது மாலை 4 மணி சாப்பிடலாம்... காரணம், சாப்பிட்டதுமே செவ்வாழையை சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.. இது செவ்வாழைக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா பழங்களுக்கும் பொருந்தும் உண்மை.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications